Modern Car-களில் இந்த விளக்குகள் இருக்குதானு பார்த்து வாங்குங்க... விபத்து நடக்காம தடுத்து விடுதாம்!!

பகல்நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்குகள் (DRL) வாகனங்களில் பொருத்தப்படுவது சமீப காலமாக வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த விளக்குகள் தொடர்பாக பல்வேறு விதமான கருத்துகள் மக்கள் மத்தியில் நிலவிவரும் நிலையில், இந்த டிஆர்எல் விளக்குகள் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை கணிசமாக குறைப்பதாக ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி பார்க்கலாம்.

வாகனங்களில் ஹெட்லைட்களே போதுமானது என்ற நிலைமை மாறி, கடந்த சில ஆண்டுகளாக ஹெட்லைட்களுடன் டிஆர்எல்-களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, மாடர்ன் கார்கள் டிஆர்எல்-களினால் ஸ்டைலான தோற்றத்தில் சந்தைக்கு வந்துள்ளன. இவ்வாறு வாகனத்தின் தோற்றத்தை மெருக்கேற்றுவது மட்டுமின்றி, விபத்துகளுக்கான வாய்ப்பையும் 8.8% வரையில் டிஆர்எல்-கள் குறைப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

daytime running lights reduce accident risk

சாலையில் வாகனங்கள் தெளிவாக மற்ற வாகன ஓட்டிகளுக்கு தெரியாததும் விபத்து ஏற்படுவதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மழை, பனி காலங்களில் இரவு & அதிகாலை நேரங்களில் ஹெட்லைட்களை போட்டு கொண்டு வாகனம் ஓட்டினாலும், உடனடியாக வாகனங்களை அடையாளம் காணுவதில் சற்று சிரமம் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை டிஆர்எல்-கள் வெகுவாக சரி செய்துள்ளதாகவும் சமீபத்தில் நடத்தப்பட்டுள்ள ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தை சேர்ந்த மோனாஷ் பல்கலைக்கழகத்தின் விபத்து ஆய்வு மைய குழுவினர் மேற்கொண்டுள்ளனர். இதற்காக, புதிய சவுத் வேல்ஸ், விக்டோரியா, குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா மாகாணங்களின் போலீஸ் நிலையங்களில் 2010-17 வரையில் பதிவான சாலை விபத்துகள் குறித்த விபரங்களை ஆய்வு குழுவினர் பெற்றுள்ளனர். டிஆர்எல்-கள் வாகன ஓட்டிகளுக்கு எந்த அளவிற்கு சவுகரியமானவைகளாக அமைகின்றன என்பதை அறிவதுதான் இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாக விளங்கியது.

ஆனால், டிஆர்எல்-கள் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகளை 8.8% குறைத்திருப்பதையும் ஆய்வு குழுவினர் அறிந்துள்ளனர். சூரியன் நன்கு பளிச்சிடும் பகல் நேரங்களில் மற்ற வாகனங்களை அடையாளம் காணுவதில் அவ்வளவாக பிரச்சனை இருக்காது. இதனால் அத்தகைய சமயங்களில் டிஆர்எல்-களுக்கு பெரியதாக எந்த வேலையும் இல்லை. அதிவேகத்தில் பயணிக்கும் போதும், தூசி மிகுந்த பகுதிகளில் பயணிக்கும் போதும் தான் டிஆர்எல்-களின் தேவை அதிகமாக இருக்கும்.

daytime running lights reduce accident risk

இதற்கேற்ப பகல்நேரத்தை காட்டிலும், அதிவேக பயணம் மற்றும் தூசி மிகுந்த பகுதிகளில் பயணிக்கும்போது தான் டிஆர்எல்-கள் அதிக விபத்துகளை தடுத்துள்ளதாக இந்த ஆய்வு முடிவு கூறுகிறது. அதாவது பகல்நேர வெளிச்சத்தில் சாலை விபத்துக்கான வாய்ப்புகளை டிஆர்எல்-கள் 7.6% மட்டுமே குறைத்துள்ளதாகவும், அதேநேரம் சூரிய ஒளி குறையும் நேரங்களிலும், தூசி மிகுந்த பகுதிகளிலும் விபத்துக்கான வாய்ப்புகளை 20.3% வரையில் டிஆர்எல்-கள் குறைக்கின்றன என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், எந்தெந்த கார்கள் டிஆர்எல்-களுடன் விற்பனை செய்யப்படுகின்றன, எவை கொண்டில்லை என்பதையும் இந்த ஆய்வின் ஒரு பகுதியாக பகுப்பாய்வு செய்துள்ளனர். மற்ற மாடர்ன் பாதுகாப்பு தொழிற்நுட்பங்களுடன் ஒப்பிடுகையில், டிஆர்எல்-கள் விபத்தை குறைக்கும் வேலையை குறைவாகவே செய்கின்றன என்றாலும், வாகனங்களில் டிஆர்எல்-கள் பொருத்தப்படுவது அவசியமான ஒன்று என ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள் ஆணித்தனமாக கூறுகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சாலை விபத்துகள் எந்தவொரு நாட்டின் அரசாங்கத்துக்கும் பெரும் தலைவலியாக விளங்குகின்றன. சாலை விபத்துகளை குறைப்பதில் டிஆர்எல்-களும் முக்கிய பங்காற்றுவதாக தற்போது ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளதால், இனி வரும் வாகனங்களில் டிஆர்எல்-கள் கட்டாயமாக பொருத்தப்படும் என்பது உறுதி. இந்த விளக்குகள் எதிர்வரும் வாகன ஓட்டிகளின் கண்களை கூசுக்கின்றன என்பது உள்பட மக்கள் மத்தியில் இருந்த குழப்பங்களுக்கும் இந்த ஆய்வு முடிவுகள் ஒரு சரியான பதிலை அளித்துள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, April 17, 2023, 15:20 [IST]
English summary
Daytime running lights reduces risk of accidents new study
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+