வால்வோ எக்ஸ்சி90 சொகுசு காரா இது?.. யாராலையும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மாற்றியது நம்ம இந்திய நிறுவனமா!!

கார்களை உருவத்தின் தனித்துவமான தோற்றத்திற்கு மாற்றி அமைத்து தருவதில் பெயர்போன நிறுவனமாக டிசி2 உள்ளது. இது ஓர் இந்திய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே, தற்போது முன்னணி நிறுவனம் ஒன்றின் சொகுசு காரை ஆள் அடையாளம் காண முடியாத அளவிற்கு மாற்றி இருக்கின்றது. இந்த மாற்றத்தால் அது மிகவும் மாறுபட்ட மற்றும் பிரத்யேக தோற்றம் கொண்ட வாகனமாக அது மாறி இருக்கின்றது.

இதற்கு முன்னதாகவும் டிசி2 நிறுவனம் பல்வேறு வாகனங்களை மாற்றி அமைத்திருக்கின்றது. ஆனால், இப்போது மாடிஃபை செய்யப்பட்டு இருக்கும் வாகனம் என்பது சற்று ஸ்பெஷலானது என கூறலாம். அந்த அளவிற்கு சூப்பரான தோற்றத்தையே இந்த காருக்கு டிசி2 நிறுவனம் தற்போது வழங்கி இருக்கின்றது.

Volvo xc90 turned into off roader rear gullwing door

வால்வோ எக்ஸ்சி 90 லக்சூரி காரையே டிசி2 மாற்றி இருக்கின்றது. சாதுவான தோற்றத்திற்கு பெயர்போன கார் மாடலாகவும், லக்சூரி அம்சங்களுக்கு பெயர் போன தயாரிப்பாகவும் இந்த கார் மாடல் காட்சியளிக்கின்றது. இத்தகைய காரையே மிக மிக முரட்டுத் தனமான தோற்றம் கொண்ட காராக டிசி2 மாற்றி இருக்கின்றது.

வால்வோ எக்ஸ்சி90 ஓர் பிரீமியம் வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக காராகும். ஆனால், இப்போது டிசி2 டிசைன் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டு இருக்கும் தோற்றமானது அப்படியே எதிர்மறையானதாகக் காட்சியளிக்கின்றது. மிக முக்கியமாக இந்த வாகனத்தை ஆஃப்-ரோடு வாகனமாக அது மாற்றி இருக்கின்றது.

Volvo xc90 turned into off roader rear front

காரின் வெளிப்புற தோற்றம் மற்றும் டயர் என அனைத்தும் ஆஃப்-ரோடு பயணத்திற்கு உகந்ததாகவே மாற்றப்பட்டு இருக்கின்றது. ஆகையால், தற்போது வால்வோ எக்ஸ்சி90 எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் சமாளிக்கும் திறன் கொண்ட வாகனமாக மாறி இருக்கின்றது. மேலும், இந்த காரின் பின் பக்கமானது ஓர் மான்ஸ்டரைப் போன்று காட்சியளிக்கின்றது.

விநோதமான க்ரில் மற்றும் எக்சாஸ்ட் சிஸ்டம் பின் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதைத் தொடர்ந்து, காரின் பக்கவாட்டு பகுதிக்கு ஸ்போர்ட்டி தோற்றத்தை வழங்கும் விதமாக வீல்களில் சிவப்பு நிறம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது சிலந்தி மனிதனின் உடை அலங்காரத்தைப் போல் காட்சியளிக்கின்றது.

Volvo xc90 turned into off roader rear seat

மேலும், மாடிஃபிகேஷன் திட்டத்தின்கீழ் இந்த காரின் டோர்கள் அனைத்தும் மாற்றப்பட்டு இருக்கின்றன. பக்கவாட்டில் இருந்த 4 கதவுகள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக இரண்டு டோர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அந்த டோர்கள் பறவையின் றெக்கைபோல் மேல் நோக்கி தூக்கும். இதை கல்விங் (gullwing) கதவு என அழைப்பர்.

இந்த வகை கதவை டெஸ்லா மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி ஆகிய கார் மாடல்களில் மட்டுமே பார்க்க முடியும். இதுபோன்ற ஏகப்பட்ட மாற்றங்களை எக்ச்ஸி90 பிரீமியம் எஸ்யூவி காரின் வெளிப்புறத்தில் டிசி2 செய்திருக்கின்றது. இதேபோல், பல மாற்றங்களை காரின் உட்பக்கத்திலும் டிசி2 செய்திருக்கின்றது.

Volvo xc90 turned into off roader rear side

இதன் இருக்கைகளை பார்க்கையில் பிரைவேட் ஜெட்களில் வழங்கப்படும் இருகைகளைப் போல் காட்சியளிக்கின்றது. ஜன்னல்களும் அந்த உணர்வையே நமக்கு வழங்குகின்றது. மேலும், பின்னிருக்கைகளுக்கு கூடுதல் லக்சூரி ரைடு அனுபவத்தை வழங்கும் விதமாக கைகளுக்கு ஓய்வளிக்கும் பேட் மற்றும் கப் ஹோல்டர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

அதேநேரத்தில் ஒரிஜினல் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஸ்டியரிங் வீல் அப்படியே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆகையால், இந்த அம்சங்களை பார்க்கும் போது மட்டுமே அது வால்வோ எக்ஸ்சி 90 என்கிற ஃபீல் நமக்கு கிடைக்கும். இந்த கார் யாருக்காக மாற்றப்பட்டது? மேலும் இந்த காரை இவ்வாறு மாற்றுவதற்கு எவ்வளவு செலவாகியது என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்தக் கொண்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே மாடிஃபிகேஷன் வாகன பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டிசி2 தன்னுடைய கை திறனை வால்வோ எக்ஸ்சி90 வாயிலாகக் காட்டியிருக்கின்றது. உண்மையில் இந்த காரை பார்க்கும் நம்முடைய மனமும் பறிபோக வாய்ப்பு உண்டு என்றே கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, November 20, 2023, 22:26 [IST]
English summary
Dc2 modified volvo xc90 into off roader
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X