பைக் சேஸிங் காட்சியில் ஏற்பட்ட விபத்தில் பிரபல பெண் ஸ்டண்ட் கலைஞர் மரணம்... சோகத்தில் திரையுலகம்..!!

Written By:

ஹாலிவுட் படத்திற்கான படப்பிடிப்பு தளத்தில் மோட்டார் சைக்கிள் சேஸிங் காட்சியில் நடித்து வந்த பெண் ஸ்டண்ட் கலைஞர் ஒருவர், பைக்கின் கட்டுபாட்டை இழந்து விபத்தில் சிக்கி உயிரழந்தார்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
ஹெல்மெட் இல்லாமல் நடித்த ஸ்டண்ட் கலைஞர் விபத்தில் மரணம்..!!

கடந்தாண்டு வெளியாகி ஹாலிவுட் திரையுலகில் வசூல் மழை புரிந்த திரைப்படம் டெட்பூல். தற்போது இதன் 2வது பாகம் பரபரப்பாக தயாராகி வருகிறது.

ஹெல்மெட் இல்லாமல் நடித்த ஸ்டண்ட் கலைஞர் விபத்தில் மரணம்..!!

இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் கனடாவின் வேன்கூவர் நகரத்தில் நடைபெற்று வந்தது. இங்கு படத்திற்கான ஸ்டண்ட் காட்சிகள் சில படமாக்கப்பட்டு வந்தன.

ஹெல்மெட் இல்லாமல் நடித்த ஸ்டண்ட் கலைஞர் விபத்தில் மரணம்..!!

டெட்பூல் படத்திற்கான சில முதற்கட்ட மோட்டார் சைக்கிள் காட்சிகளில், எஸ்.ஜெ. ஹாரீஸ் என்ற பெண் ஸ்டண்ட் கலைஞர் தீவிரமாக நடித்து வந்தார்.

ஹெல்மெட் இல்லாமல் நடித்த ஸ்டண்ட் கலைஞர் விபத்தில் மரணம்..!!

சம்பவம் நடந்த சமயத்தில் எஸ்.ஜெ. ஹாரீஸ் பயன்படுத்திய பைக்கில் அவர் கட்டுபாட்டை இழந்ததாக உடனிருந்த ஸ்டண்ட் கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended Video
TVS Jupiter Classic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
ஹெல்மெட் இல்லாமல் நடித்த ஸ்டண்ட் கலைஞர் விபத்தில் மரணம்..!!

இதன் காரணமாக தொடர்ந்து பைக்கை இயக்குவதால் ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த எஸ்.ஜெ.ஹாரீஸ், வாகனத்தை அப்படியே விட்டுவிட்டு அருகில் இருந்த கண்ணாடி கதவின் மேல் குதித்துள்ளார்.

ஹெல்மெட் இல்லாமல் நடித்த ஸ்டண்ட் கலைஞர் விபத்தில் மரணம்..!!

எஸ்.ஜெ. ஹாரீஸ் குதித்தால் கண்ணாடிகள் பெரும் சத்துடன் உடைந்தன. இதில் அவர் படுகாயங்கள் அடைந்துள்ளார். இரத்தம் அதிகளவில் வெளியேற படப்பிடிப்பு தளத்தில் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட் இல்லாமல் நடித்த ஸ்டண்ட் கலைஞர் விபத்தில் மரணம்..!!

ஸ்டண்ட் கலைஞர் எஸ்.ஜெ. ஹாரீஸ் டெட்பூல் 2 படத்தில் நடித்து வரும் நடிகை ஜாஸி பீட்ஸிற்கு டூப்பாக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார்.

ஜாஸி பீட்ஸிற்கான சண்டைக் காட்சிகள் முதற்கட்டமாக படமாக்க தொடங்கியபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹெல்மெட் இல்லாமல் நடித்த ஸ்டண்ட் கலைஞர் விபத்தில் மரணம்..!!

ஆம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டு, அதில் எஸ்.ஜெ. ஹாரீஸ் படுகாயங்களுடன் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஆம்புலன்ஸில் இருந்த நிபுணர் ஒருவர் சிகிச்சையை தொடங்கும் முன்பே ஸ்டண்ட் கலைஞர் ஹாரீஸின் உயிர் பிரிந்துவிட்டது.

விபத்தின் காரணமாக வேன்கூவரில் நடைபெற்று வந்த டெட்பூல் 2 படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் உடனே நிறுத்தப்பட்டது.

ஹெல்மெட் இல்லாமல் நடித்த ஸ்டண்ட் கலைஞர் விபத்தில் மரணம்..!!

இதுகுறித்து வேன்கூவர் நகர காவல்துறை தெரிவித்துள்ள தகவலின்படி , ஸ்டண்ட் கலைஞர் எஸ்.ஜெ. ஹாரீஸ் படப்பிடிப்பில் ஹெல்மெட் இல்லாமல் பங்கேற்றுள்ளார்.

ஹெல்மெட் இல்லாமல் நடித்த ஸ்டண்ட் கலைஞர் விபத்தில் மரணம்..!!

அவர் ஓட்டிசென்ற பைக்கின் கட்டுபாட்டை இழப்பதாக உணர்ந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள கண்ணாடி கதவின் மேல் ஹாரீஸ் குதித்துள்ளார்.

ஹெல்மெட் இல்லாமல் நடித்த ஸ்டண்ட் கலைஞர் விபத்தில் மரணம்..!!

ஹெல்மெட் அணியாத காரணத்தினால், கண்ணாடியில் மோதி அது உடைந்து, எஸ்.ஜெ. ஹாரீஸ் உடல் பாதிப்படைந்து மரணமடைந்ததாக வேன்கூவர் நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஹெல்மெட் இல்லாமல் நடித்த ஸ்டண்ட் கலைஞர் விபத்தில் மரணம்..!!

ஒரு ஸ்டண்ட் கலைஞராக மட்டுமில்லாமல், எஸ்.ஜெ. ஹாரீஸ் சிறந்த மோட்டார் சைக்கிள் ரைடரும் கூட.

கடந்த 2013ம் ஆண்டில் ஓட்டுநர் உரிமம் பெற்ற இவர், 2014 முதல் தொழில்ரீதியான பைக் ரேஸிங்கிலும் பங்கேற்று வந்துள்ளார்.

ஹெல்மெட் இல்லாமல் நடித்த ஸ்டண்ட் கலைஞர் விபத்தில் மரணம்..!!

அமெரிக்க மருத்துவ சங்கத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல் ஆஃபிரிக்க அமெரிக்க இனத்தை சேர்ந்த பெண்ணாகவும் எஸ்.ஜெ. ஹாரீஸ் இருந்துள்ளார்.

ஹாலிவுட் படங்களில் வரும் பெரும்பாலான ஸ்டண்ட் காட்சிகளில் கலைஞர்கள் மோட்டார் சைக்கிள் பயணத்தின் போது ஹெல்மெட் அணிவது கிடையாது.

ஹெல்மெட் இல்லாமல் நடித்த ஸ்டண்ட் கலைஞர் விபத்தில் மரணம்..!!

ஸ்கைஃபால், எம்.ஐ. 2 போன்ற படங்களில் நடிகர்கள் ஹெல்மெட் இல்லாமல் ஸ்டண்ட் செய்யும் காட்சிகள் ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தின.

இருந்தாலும், தொடர்ந்து சண்டைக் காட்சிகளில் மரணமடையும் ஸ்டண்ட் கலைஞர்களின் குடும்பங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தான் வருகிறது.

ஹெல்மெட் இல்லாமல் நடித்த ஸ்டண்ட் கலைஞர் விபத்தில் மரணம்..!!

பாதுகாப்பு இல்லாமல் ஸ்டண்ட் காட்சிகளை உருவாக்கக் கூடாது என ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கம் பிரச்சாரத்தை விரைவில் முன்னெடுக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tail : During Deadpool 2 Shooting Stunt Woman S.J. Harris Dies in Motocycle Accident. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos