இன்று 86வது பிறந்தநாள் காணும் டெக்கான் குயின் ரயில் பற்றிய சுவாரஸ்ய விஷயங்கள்!

Written By:

160 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் மிக்க இந்திய ரயில்வே பல்வேறு வரலாற்று சுவாரஸ்யங்களை தாங்கி நிற்கிறது. ரயில்வேயின் பாரம்பரியத்தை பரைசாற்றும் விதமாக பல்வேறு பாரம்பரியத்தை தாங்கி நிற்கும் ரயில்களும் இயங்கி வருகின்றன. அதில், ஒன்றுதான் டெக்கான் குயின். மஹாராஷ்டிராவில் உள்ள மும்பை நகருக்கும் புனே நருக்கும் இடையில் இயக்கப்படும் இந்த ரயில் இன்று [ஜூன் 1] தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.

ஆம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட இந்த ரயில்வே சேவை இன்று மும்பை- புனே இடையிலான வழித்தடத்தில் மிகவும் பிரபலமான சேவையாக மட்டுமின்றி, பல முதல் சாதனைகளை படைத்த ரயிலாகவும் விளங்குகிறது. இந்த ரயில் குறித்த சுவாரஸ்யத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

முதல் எலக்ட்ரிக் எஞ்சின்

முதல் எலக்ட்ரிக் எஞ்சின்

இந்தியாவில் மின்சார ரயில் எஞ்சின் இணைக்கப்பட்டு இயக்கப்பட்ட முதல் எக்ஸ்பிரஸ் ரயில் டெக்கான் குயின். ஆம், 1930ம் ஆண்டு இந்த ரயில் மின்சார எஞ்சினுடன் இயங்கி வருகிறது. இந்த ரயலில் WCM-1 என்ற மின்சார ரயில் பயன்படுத்தப்பட்டது படத்தில் அந்த ரயில் எஞ்சினையும் வாசகர்கள் கண்டு ரசிக்கலாம்.

Image Source

சேவையின் நோக்கம்

சேவையின் நோக்கம்

புனேயில் நடைபெறும் குதிரை பந்தயங்களை காண்பதற்காக வார இறுதி விடுமுறையில் மும்பையிலிருந்து ஆங்கிலேயே அதிகாரிகள் புனேக்கு செல்வதற்காக இந்த ரயில் வாராந்திர சேவையாக துவங்கப்பட்டது. பின்னர், வரவேற்பு அதிகமாக இருந்ததால், தினசரி தேவையாக மாறியது.

சூப்பர் ஃபாஸ்ட் ரயில்

சூப்பர் ஃபாஸ்ட் ரயில்

இந்தியாவின் முதல் சூப்பர் ஃபாஸ்ட் ரயில் என்ற பெருமையும் டெக்கான் குயினுக்கு உண்டு. மேலும், பெண்களுக்கான தனிப்பெட்டியுடன் இயக்கப்பட்ட இந்தியாவின் முதல் ரயிலும் இதுதான்.

டைனிங் கார்

டைனிங் கார்

சொகுசு ரயில்களை போன்று இந்த ரயிலில் தனி சாப்பாடு கூடம் கொண்ட பெட்டியும் உள்ளது. அவசர அவசரமாக தினசரி இந்த ரயிலை பிடித்து வேலைக்கு செல்வோர்க்கு வசதியாக காலை சிற்றுண்டி மற்றும் நொறுக்குத் தீனிகள் இந்த ரயிலில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Image Source

கால அட்டவணை

கால அட்டவணை

தினசரி புனே ரயில் நிலையத்தில் காலை 7.15 மணிக்கு புறப்பட்டு 10.25 மணிக்கு மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்தை அடைகிறது. மறுமார்க்கத்தில் மும்பை சிஎஸ்டி ரயில் நிலையத்தில் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.25 மணிக்கு புனே நகரை அடைகிறது.

குயின் அல்ல, புயல்...

குயின் அல்ல, புயல்...

தாமதம் என்ற பேச்சுக்கே பெரும்பாலும் இடமளிக்காத வகையில் குறித்த நேரத்தில் இயக்கப்படுவதும் இதன் சிறப்பு. இந்த வழித்தடத்தில் பிற ரயில்கள் 4 மணி நேரம் பயணம் செய்யும் நிலையில், டெக்கான் குயின் 45 நிமிடங்கள் குறைவான நேரத்தில் இரு நகரங்களையும் இணைக்கிறது.

Image Source: Wikimedia Commons

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

ரயில் பயணிகளிடமும், பணியாளர்களிடமும் மிகுந்த நன்மதிப்பை பெற்றிருப்பதோடு, பாரம்பரியம் மிக்க இந்த ரயிலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட இந்த ரயிலின் பணியாளர்களும், பயணிகளும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, 86 கிலோ எடையுடைய கேக்கை வெட்டி கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

Images Source: Wikimedia Commons

இந்திய ரயில்வே துறை பற்றி 50 சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்திய ரயில்வே துறை பற்றி 50 சுவாரஸ்யத் தகவல்கள்!

 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
'Deccan Queen' Completes 86 Years On The Rails.
Story first published: Wednesday, June 1, 2016, 10:26 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark