கேமராமேன் குடுத்து வெச்சவரு! 4 கோடி ரூபாய் காரில் தேவதை மாதிரி வந்தது அவங்களா! மெழுகு சிலை மாதிரி இருக்காங்க!

திரைப்பட நடிகைகளையும் (Film Actresses), சொகுசு கார்களையும் (Luxury Cars) எப்போதும் பிரிக்க முடியாது. திரைப்படங்கள் (Movies) மூலம் நிறைய பணம் சம்பாதிப்பதால், காஸ்ட்லியான கார்களில் அவர்கள் பணத்தை எளிதாக முதலீடு (Invest) செய்கின்றனர். இதற்கு தீபிகா படுகோனும் (Deepika Padukone) விதிவிலக்கு அல்ல.

ஆடி க்யூ7 (Audi Q7), ஆடி ஏ8எல் (Audi A8L), மெர்சிடிஸ்-பென்ஸ் வி-க்ளாஸ் (Mercedes-Benz V-Class) மற்றும் மெர்சிடிஸ்-மேபெக் எஸ்500 (Mercedes-Maybach S500) என தீபிகா படுகோன் கார் கலெக்ஸன் (Car Collection) மிக பிரம்மாண்டமானதாக உள்ளது. இந்த சூழலில் தீபிகா படுகோனில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது.

Deepika Padukone Spotted In Airport

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், தீபிகா படுகோன் விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றில், மும்பை விமான நிலையத்தில் (Mumbai Airport) வந்து இறங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது. விமான நிலையத்திற்கு வர அவர் பயன்படுத்தியது, மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் (Mercedes-Maybach GLS 600 4MATIC) என கூறப்படுகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் விலை (Price) சுமார் 3 கோடி ரூபாயாக உள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு விலை சுமார் 70 லட்ச ரூபாய் வரை வரும். அப்படியானால் இந்த காரின் விலை சுமார் 3.70 கோடி ரூபாயாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Deepika Padukone Spotted In Mercedes-Maybach GLS 600 4MATIC

மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் காரில், 4.0 லிட்டர் பெட்ரோல் (Petrol) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 6,000-6,500 ஆர்பிஎம்மில் 550 பிஹெச்பி பவரையும், 2,500-4,500 ஆர்பிஎம்மில் 730 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரில் 4 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். என்றாலும் அவர்கள் அனைவருக்கும் சொகுசான பயணம் கிடைக்கும் என்பது உறுதி. அதற்கு ஏற்ப பல்வேறு அதிநவீன வசதிகள் (Features) மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே தற்போது வைரல் ஆக பரவி வரும் வீடியோவில், விமான நிலையத்திற்குள் செல்வதற்கு முன்பாக, கேமராமேன் (Cameraman) ஒருவருடன், தீபிகா படுகோன் போட்டோ (Photo) எடுத்து கொண்டுள்ளார். இது தீபிகா படுகோனின் எளிமையான மற்றும் நல்ல குணத்தை காட்டுவதாக நெட்டிசன்கள் பலரும் சிலாகித்து பேசி கொண்டுள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சொகுசான பயணத்தை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் 600 4மேட்டிக் கார் மிகவும் ஏற்றது. ஆனால் மிகவும் விலை உயர்ந்தது என்பதால், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் (Businessman) போன்ற செல்வந்தர்களால் மட்டுமே இந்த காரை வாங்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Friday, November 10, 2023, 17:57 [IST]
English summary
Deepika padukone spotted in mercedes maybach gls 600 4matic viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+