பொறந்தா இந்த மாதிரி வீட்ல பொறக்கணும்! 4 கோடி ரூபா காரில் போகும் கை குழந்தை! அவங்க பெத்த பொண்ணா இது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் (Mercedes Maybach GLS). இதன் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-showroom Price) 3.35 கோடி ரூபாய் ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 3.77 கோடி ரூபாய் வரும். இவ்வளவு விலை உயர்ந்த காரில் பொருத்தப்பட்டிருப்பது, 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 பெட்ரோல் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 557 பிஎஸ் பவர் மற்றும் 770 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 48V மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. இது தனியாக 21 பிஎஸ் பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்கும். இந்த இன்ஜின் உடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை கொண்ட கார் ஆகும்.

Deepika Padukone Spotted In Mercedes Maybach GLS

அத்துடன் இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 4.9 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறனை மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் கார் பெற்றுள்ளது.

மேலும் 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 13 ஸ்பீக்கர் பர்ம்ஸ்டர் சவுண்ட் சிஸ்டம், பனரோமிக் சன்ரூஃப், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகிய வசதிகளையும் (Features) மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் கார் கொண்டுள்ளது.

Mercedes Maybach GLS

அத்துடன் லெவல் 2 அடாஸ் (ADAS - Advance Driver Assistance Systems), ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features) மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் கார் கொண்டுள்ளது. இது போன்ற காரணங்களால் கோடீஸ்வரர்கள் மத்தியில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கார் மிகவும் பிரபலமாக உள்ளது.

குறிப்பாக பாலிவுட் திரையுலகில் மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் காரை வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம். அர்ஜூன் கபூர் (Arjun Kapoor) மற்றும் அஜய் தேவ்கன் (Ajay Devgn) போன்றவர்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். இந்த வரிசையில் தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் (Deepika Padukone - Ranveer Singh) தம்பதியிடமும் இந்த கார் உள்ளது.

இந்த காரில் தீபிகா படுகோனே பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் தீபிகா படுகோனே தனது கைக்குழந்தையுடன் காரில் ஏறி செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

பிரபல நடிகர், நடிகைகளான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே தம்பதியிடம் இன்னும் ஏராளமான விலை உயர்ந்த கார்கள் எல்லாம் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அவர்களது கார் கலெக்ஸனில் (Car Collection), லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus), அஸ்டன் மார்ட்டின் ராபிடே எஸ் (Aston Martin Rapide S) மற்றும் ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue) போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமானவை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 600 4மேட்டிக் (600 4MATIC) என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சொகுசு மற்றும் செயல்திறன் ஆகிய 2 அம்சங்களையும் எதிர்பார்க்க கூடிய கோடீஸ்வரர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது எங்கள் கருத்து.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan), லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover) மற்றும் பென்ட்லீ பென்டைகா (Bentley Bentayga) ஆகிய கார்களுக்கு எல்லாம், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கார் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, December 9, 2024, 18:22 [IST]
English summary
Deepika padukone spotted in mercedes maybach gls luxury suv with her child dua viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+