கூட்டத்தோட கூட்டமா ரோட்ல நடந்து வந்தது அவங்களா! டிராஃபிக் ஜாமால் நடந்த அதிசயம்! பக்கத்துல இருந்தே பாத்தாச்சு!
உலகில் கடுமையான போக்குவரத்து நெரிசல் (Traffic Jam) நிலவும் நகரங்களில் ஒன்றாக பெங்களூர் (Bangalore) உள்ளது. சில சமயங்களில் பெங்களூரில் 10 கிமீ தொலைவை கடக்க 3 மணி நேரம் கூட ஆகும். எனவே வாகனங்களை சாலையோரங்களிலேயே நிறுத்தி விட்டு நடந்து செல்வதை பெங்களூர் மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் கூட, பெங்களூரில் அப்படியான ஒரு சூழல் ஏற்பட்டது. எனவே பெங்களூர் சாலைகளில், டிராஃபிக் ஜாம் காரணமாக வாகனங்களை நிறுத்தி விட்டு, மக்கள் நடந்தே செல்வது ஒன்றும் புதிதல்ல.
ஆனால் பிரபலங்கள் இப்படி நடந்து கொள்வது என்பது புதிய ஒரு விஷயம்தான். ஆம், டிராஃபிக் ஜாம் பிரச்னை காரணமாக பெங்களூர் நகரில் பிரபல நடிகை ஒருவர் வாகனத்தை நிறுத்தி விட்டு, மக்களுடன் மக்களாக சாலையில் நடந்தே சென்றுள்ளார். இந்த சம்பவத்தின் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

பெங்களூர் நகரில் பொழுதுபோக்கிற்காக இசை கச்சேரிகள் அடிக்கடி நடைபெறுவது வழக்கம். இந்த வரிசையில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு இசை கச்சேரி ஒன்று நடைபெற்றது. இதில் பிரபல நடிகையான தீபிகா படுகோனே (Deepika Padukone) கலந்து கொண்டார். இதற்காக பெங்களூர் வந்த அவர் டிராஃபிக் ஜாம் பிரச்னையில் சிக்கி கொண்டார்.
இதன் காரணமாக பொதுமக்களுடன் அவர் சாலையில் நடந்து சென்றார். அப்போது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ, யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோவை தீபிகா படுகோனேவின் ரசிகர்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் தீபிகா படுகோனேவை அருகில் இருந்து பார்த்ததாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். உண்மையில் தீபிகா படுகோனேவின் கார் கலெக்ஸன் (Car Collection) மிகவும் பெரியது.

இதில், மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் 600 (Mercedes Maybach GLS 600), மெர்சிடிஸ் மேபெக் எஸ்500 (Mercedes Maybach S500), ஆடி ஏ8எல் (Audi A8L), ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue), ஆடி க்யூ7 (Audi Q7) மற்றும் பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் (BMW 5-series) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்க கார்கள் ஆகும்.
இதில், மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் 600 காரில் தீபிகா படுகோனோ பயணம் செய்யும் வைரல் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலை தளங்களில் பரவியது. இந்த வைரல் வீடியோவில் தனது குழந்தையுடன் தீபிகா படுகோனே பயணம் செய்ததை நாம் பார்த்தோம். அதற்குள்ளாக தீபிகா படுகோனே சாலையில் நடந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும் பெங்களூர் நகரின் டிராஃபிக் ஜாம் அனைவரையும் ஒரே மாதிரியாகதான் நடத்தும் என்பது இந்த வீடியோவின் மூலம் நமக்கு தெளிவாக புரிகிறது. பெங்களூர் நகரின் டிராஃபிக் ஜாம் முன்பு ஏழை, பணக்காரர்கள் என்ற வித்தியாசம் எதுவும் இல்லை.
ஆனால் உண்மையில் இதை வேடிக்கையாக எடுத்து கொள்ள முடியாது. வாகனங்கள் நகர முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பிரபல நடிகை ஒருவர் மக்களுடன் மக்களாக நடந்து சென்றுள்ளார். அனேகமாக தீபிகா படுகோனேவிற்கு இது ஒரு நாள் பிரச்னை. ஆனால் பெங்களூர் வாகன ஓட்டிகள் அடிக்கடி இது போன்ற பிரச்னைகளை சந்தித்து கொண்டுள்ளனர்.
எனவே பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை களைவதற்கு மாநில அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். அத்துடன் பெங்களூர் பெருநகர மக்களும் சொந்த வாகனங்களில் பயணிப்பதை விட, பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். இவை இரண்டும் நடந்தால், பெங்களூர் சொர்க்கமாக மாறும்.


Click it and Unblock the Notifications








