இந்தியாவின் பெஸ்ட் பிசினஸ் இதுதான் போலையே.. ரூ.40 கோடி மதிப்பில் கார்களை வாங்கி போடுற அளவுக்கு வளந்திருக்காரு!

இந்தியாவில் எப்போதுமே பீக்-இல் இருக்கும் பிசினஸாக ஃபுட் இன்டஸ்ட்ரீ (சாப்பாட்டு துறை) இருக்கின்றது. உணவு தொழிலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்தாலும், அதில் சில ரிஸ்க்குகளும் உள்ளன என்பதை நாம் இங்கு ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். இதனால்தான் சிலர் வந்த வேகத்திலேயே இந்த துறையே வேண்டாம் என உதறிவிட்டு செல்கின்றனர். அதேவேளையில், பக்கா பிளானில் வரும் சிலரோ அந்த துறையில் கொடிக் கட்டி பறக்கத் தொடங்கி விடுகின்றனர். இதற்கு சான்றாகவே சொமேட்டோ நிறுவனம் இருக்கின்றது.

சொந்தமாக ஒரு ஹோட்டல்கூட இந்த நிறுவனத்திடம் இல்லை என்றாலும், ஃபுட் இன்டஸ்ட்ரியைச் சார்ந்து இயங்கி கோடிகளில் புரண்டுக் கொண்டிருக்கின்றது, சொமேட்டோ. வெறும் உணவுகளை ஓட்டல்களிடம் இருந்து வாங்கி தேவைப்படுவோருக்கு டெலிவரி கொடுத்தே இந்த நிறுவனம் கோடிகளை வருமானத்தை ஈட்டிக் கொண்டு உள்ளது. இந்த நிறுவனத்தின் சிஇஓ-வே தீபிந்தர் கோயல்.

Deepinder goyal s rs 40 crore supercar collection

இவரைப் பற்றிய ஓர் சுவராஷ்ய தகவலே இப்போது வெளியாகி இருக்கின்றது. அவரிடம் இருக்கும் ஆடம்பர கார் கலெக்சன் பற்றிய விபரமே இப்போது வெளியாகி இருக்கின்றது. இதைப்பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, அவரிடத்தில் என்ன மாதிரியான கார்கள் உள்ளன? அவற்றின் சிறப்புகள் என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி டபிள்யூ12 (Bentley Continental GT W12): தீபிந்தரிடத்தில் இருக்கும் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல் என்றால் அது இதுதான். இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 9 கோடிக்கும் அதிகம் ஆகும். இந்த விலைக்கு ஏற்ப அதிக ஆடம்பர அம்சங்களையும் இந்த கார் தன்னுள் மிக தாராளமாக தாங்கி இருக்கின்றது.

Deepinder goyal s ferrari roma

இதனாலேயே என்னமோ இந்த காருக்கு கூடுதல் கவனம் கொடுத்து சில சிறப்புகளைச் சேர்த்திருக்கின்றார். அதில் மிக முக்கியமான ஒன்றாக அதற்கு தனித்துவமான சிவப்பு நிறம் வழங்கப்பட்டிருப்பது உள்ளது. இந்த காரில் மிகப் பெரிய எஞ்சினையே பென்ட்லீ வழங்கி இருக்கின்றது. 6.0 லிட்டர் டபிள்யூ 12 வகை மோட்டாரையே அது வழங்கி இருக்கின்றது. அதிகபட்சமாக 650 பிஎச்பி மற்றும் 900 என்எம் டார்க் ஆற்றலை இது உருவாக்கும்.

பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீடு (Bentley Continental GT Speed): இந்த காரையும் தீபிந்தர் பயன்படுத்தி வருகின்றார். இதன் ஒரே ஒரு யூனிட்டின் மதிப்பே ரூ. 6.5 கோடி ஆகும். இந்த காரிலும் முன்னதாக பார்த்த பென்ட்லீ காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே ஆற்றல்மிக்க 6.0 லிட்டர் டபிள்யூ 12 வகை மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால், அலங்கரிப்பு மற்றும் பயன்பாட்டில் இது முற்றிலும் தனித்துவமானதாக இருக்கும்.

Deepinder goyal s aston artin db12

லம்போர்கினி ஹூராகேன் ஸ்டெர்ரடோ (Lamborghini Huracan Sterrato): உலக சூப்பர் கார் பிரியர்களின் மனம் கவர்ந்த கார் மாடல்களில் ஒன்றாக இது இருக்கின்றது. இதன் மதிப்பு ரூ. 4.6 கோடி ஆகும். இந்த காரை மொத்தமாகவே 1,499 பேர் மட்டுமே இந்த உலகத்தில் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் ஒருவரே தீபிந்தர் கோயல் ஆவார்.

இந்த காரும் அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது. 5.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் வி10 பெட்ரோல் மோட்டாரே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 610 பிஎஸ் மற்றும் 560 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த ஆற்றலே தீபிந்தரை இந்த காரை வாங்கச் செய்திருக்கின்றது. ஆற்றலில் மட்டுமல்ல லுக்கிலும் மிகவும் ஸ்மார்ட்டானதாக இந்த கார் மாடல் இருக்கும்.

Deepinder goyal s bentley continental gt speed

அஸ்டன் மார்டின் டிபி 12 (Aston Martin DB12): தீபிந்தர் வைத்திருக்கும் அதிக விலைக் கொண்ட மற்றும் அதிக ஆற்றலை உருவாக்கும் கார் மாடல்களில் ஒன்றாக இது உள்ளது. இந்தியாவில் இந்த காரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். இதற்கு அதன் அதீத விலையே காரணமாக உள்ளது.

இத்தகைய கார் மாடலின் ஒரு யூனிட்டையே தீபிந்தர் தன் வசம் வைத்திருக்கின்றார். இந்த காரில் 680 பிஎஸ் மற்றும் 800 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 வகை மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த காரின் மதிப்பு ரூ. 4.59 கோடிக்கும் அதிகம் என்பது கவனிக்கத்தகுந்தது.

லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus): இதன் விலை ரூ. 4 கோடிக்கும் அதிகம் ஆகும். அதீத விலைக்கு ஏற்பவே அதீத திறனை வெளியேற்றக் கூடிய கார் மாடலாக இது இருக்கின்றது. இந்த எஸ்யூவி காரில் அதிகபட்சமாக 657 எச்பி மற்றும் 850 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட . 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 300 கிமீ ஆகும். இதற்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 3.3 செகண்டுகளே போதுமானது. இத்தகைய அதிக ஆற்றலை உருவாக்கும் காரையே தீபிந்தர் தன்னுடைய கார் சேகரிப்பில் வைத்திருக்கின்றார். நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக உருஸ் இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

ஃபெர்ராரி ரோமா (Ferrari Roma): ஃபெர்ராரி ரோமா சூப்பர் காரில் 3.9 லிட்டர் டர்போசார்ஜட் வி8 எஞ்சினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 612 பிஎச்பி மற்றும் 760 என்எம் டார்க் ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்டது. 8 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸுடனேயே இந்த மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 320 கிமீ ஆகும்.

இந்த காருக்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 3.4 செகண்டுகளே போதுமானது. இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் செல்லும் காரின் ஓர் யூனிட்டையே சொமேட்டோ சிஇஓ தீபிந்தர் பயன்படுத்தி வருகின்றார். இவர் மட்டுமல்ல அம்பானி போன்ற இந்தியாவின் பிற பெரும் பணக்காரர்களும் இந்த காரை நாட்டில் பயன்படுத்தி வருகின்றனர். இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே 3.76 கோடி ரூபாய் ஆகும்.

போர்ஷே 911 டர்போ எஸ் (Porsche 911 Turbo S): தீபிந்தர் வைத்திருக்கும் மற்றுமொரு அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட சூப்பர் காராக இந்த வாகனம் இருக்கின்றது. இதன் ஒரு யூனிட்டின் இந்திய மதிப்பே ரூ. 3.35 கோடிக்கும் அதிகம் ஆகும். இந்த காரில் போர்ஷே நிறுவனம் 3.8 லிட்டர் ஃபிளாட் 6 வகை மோட்டாரையே வழங்கி இருக்கின்றது.

இது அதிகபட்சமாக 640 பிஎச்பி மற்றும் 800 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 330 கிமீ ஆகும். ஸ்பீடை வெளிப்படுத்துவதில் புள்ளியாக இருக்கும் இந்த கார் மைலேஜை லிட்டர் ஒன்றிற்கே வெறும் 9 கிமீட்டரை மட்டுமே தரும். இத்தகைய காரையே தீபிந்தர் தன்னுடைய கார் கலெக்சனில் ஒன்றை வைத்திருக்கின்றார்.

பிஎம்டபிள்யூ எம்8 காம்படிசன் (BMW M8 Competition): இந்திய பணக்காரர்கள் மற்றும் அதிக ஆற்றலை விரும்பும் கார் பிரியர்கள் பலரின் மனம் கவர்ந்த வாகனமாக இது இருக்கின்றது. இதன் ஒற்றை யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 2.4 கோடி ஆகும். இரண்டு டோர்களை மட்டுமே கொண்டிருக்கும் மிகவும் கவர்ச்சியான 4 சீட்டர் கார் மாடல் இதுவாகும்.

ஐந்து பேர் வரை இதில் அமர்ந்து பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 305 கிமீ ஆகும். இதற்காக இந்த காரில் 4.4 லிட்டர் ட்வின் டர்போ வி8 மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 625 பிஎச்பி மற்றும் 750 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

போர்ஷே 911 கர்ரேரா (Porsche 911 Carrera): தீபிந்தர் போர்ஷே 911 மாடலில் உள்ள மற்றுமொரு சிறப்புமிக்க வெர்ஷனான கர்ரேராவையும் பயன்டுத்தி வருகின்றார். இந்த கார் மாடலின் மதிப்பு ரூ. 1.8 கோடிக்கும் அதிகம் ஆகும். இதுவே அவர் வைத்திருக்கும் விலை குறைவான ஆடம்பர கார் மாடல் என கூறலாம்.

ஆகையால், இந்த பட்டியலில் நாம் பார்க்கும் கடைசி கார் மாடலும் இதுவே ஆகும். இந்த கார் மாடலில் 3.0 லிட்டர் ஃபிளாட் 6 வகை மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 450 பிஎச்பி மற்றும் 530 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுவே தீபிந்தர் வாங்கிய முதல் சூப்பர் கார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தீபிந்தர் வைத்திருக்கும் பெரும்பாலான கார்களின் விலை கோடிக்கும் அதிகமாக உள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி இவரிடம் ஆடம்பர கார்கள் மட்டுமே ரூ. 40 கோடிக்கும் அதிகமான மதிப்பில் இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. அதேபோல், மேலே பார்த்த அனைத்தும் வெளியுலகிற்கு தெரிய வந்தவை மட்டுமே, இன்னும் இதுபோல் சில வெளியுலகிற்கே தெரியாத கார்களும் அவரிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 30, 2025, 23:32 [IST]
English summary
Deepinder goyal s impressive supercar collection worth rs 40 crore showcases luxury and exclusivity
மேலும்... #luxury cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X