புகையை கக்கிய வாகனங்களுக்கு உச்சகட்ட அபராதம்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே பியூசி சர்டிபிகேட் வாங்கீருவீங்க

காற்று மாசுபாட்டிற்கு காரணமான வாகனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புகையை கக்கிய வாகனங்களுக்கு உச்சகட்ட அபராதம்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே பியூசி சர்டிபிகேட் வாங்கீருவீங்க

இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி தவித்து வருகின்றன. இதற்கு பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள்தான் மிக முக்கியமான காரணமாக உள்ளன. எனவே வாகனங்கள் மூலம் காற்று மாசுபடுவதை தடுப்பதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

புகையை கக்கிய வாகனங்களுக்கு உச்சகட்ட அபராதம்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே பியூசி சர்டிபிகேட் வாங்கீருவீங்க

இதற்கு புதிய மோட்டார் வாகன சட்டத்தை ஒரு உதாரணமாக கூறலாம். இந்தியாவில் திருத்தியமைக்கப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதில், பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிகவும் கடுமையாக உயர்த்தப்பட்டன.

புகையை கக்கிய வாகனங்களுக்கு உச்சகட்ட அபராதம்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே பியூசி சர்டிபிகேட் வாங்கீருவீங்க

இதன்படி மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (Pollution Under Control Certificate - PUCC) இல்லாத வாகனங்களுக்கான அபராத தொகை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதற்கு முன் முதல் முறை சிக்கினால், அதற்குரிய அபராதம் வெறும் 1,000 ரூபாயாக மட்டுமே இருந்தது. அதன்பின்னர் ஒவ்வொரு முறையும் இந்த விதிமீறலில் ஈடுபட்டால், 2,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

புகையை கக்கிய வாகனங்களுக்கு உச்சகட்ட அபராதம்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே பியூசி சர்டிபிகேட் வாங்கீருவீங்க

இதனால் காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கான அபராத தொகையானது ஒரே அடியாக 10 ஆயிரம் ரூபாய் என உயர்த்தப்பட்டது. இந்தியாவின் மற்ற பகுதிகளை காட்டிலும் டெல்லியில்தான் இந்த விதிமுறையை போக்குவரத்து துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர்.

புகையை கக்கிய வாகனங்களுக்கு உச்சகட்ட அபராதம்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே பியூசி சர்டிபிகேட் வாங்கீருவீங்க

ஏனெனில் தலைநகர் டெல்லிதான் காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு எதிராக டெல்லியில் தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், டெல்லி சாலைகளில் தற்போது வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது.

புகையை கக்கிய வாகனங்களுக்கு உச்சகட்ட அபராதம்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே பியூசி சர்டிபிகேட் வாங்கீருவீங்க

எனவே காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிப்பதற்காக, டெல்லி போக்குவரத்து துறை சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி இந்த வாரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சிறப்பு சோதனைகளின் ஒரு பகுதியாக, சுமார் 440 வாகன உரிமையாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

புகையை கக்கிய வாகனங்களுக்கு உச்சகட்ட அபராதம்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே பியூசி சர்டிபிகேட் வாங்கீருவீங்க

மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். சரியாக சொல்வதென்றால் 439 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மேலும் 61 வாகனங்களுக்கும் அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

புகையை கக்கிய வாகனங்களுக்கு உச்சகட்ட அபராதம்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே பியூசி சர்டிபிகேட் வாங்கீருவீங்க

பார்வைக்கு புலப்படும் வகையில் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தியதால், இந்த 61 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ''டெல்லி நகர சாலைகளில் தற்போது வாகன போக்குவரத்து உயர்ந்து வருகிறது. எனவே சுற்றுச்சூழல் மற்றும் இதர மோட்டார் வாகன விதிமீறல்களை கண்டறிய சுமார் 40 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புகையை கக்கிய வாகனங்களுக்கு உச்சகட்ட அபராதம்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே பியூசி சர்டிபிகேட் வாங்கீருவீங்க

இந்த 40 குழுக்களின் மூலமாக சிறப்பு சோதனை கடந்த புதன் கிழமை தொடங்கப்பட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றனர். டெல்லி போக்குவரத்து துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறுவதில் வாகன உரிமையாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கும் மையங்களுக்கு அவர்கள் படையெடுத்து வருகின்றனர்.

Note: Images used are for representational purpose only.

Article Published On: Saturday, August 15, 2020, 23:57 [IST]
English summary
Delhi: 439 Vehicle Owners Fined For PUC Violations. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+