Delhi Airportக்கு சர்வதேச அளவுல கிடைச்ச மரியாதை! சீனாவை யாருமே மதிக்கல போல

ஏர்போர்ட் கவுன்சில் இண்டர்நேசினல் என்பது ஒரு டிரேட் அசோசியேசன் ஆகும். இந்த அமைப்பு உலகம் முழுவதும் உள்ள 2000 விமான நிலையங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் இந்த அமைப்பு சார்பில் 2022ம் ஆண்டின் உலகின் பிஸியான ஏர்போர்ட் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி கடந்த 2022ம் ஆண்டு மட்டும் மொத்தம் 7 பில்லியன் மக்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை கொரோனாவிற்கு முந்தைய ஆண்டான 2019ம் ஆண்டு எண்ணிக்கையில் வெறும் 73.8 சதவீதம் தான். இது 2023ம் ஆண்டு 92 சதவீதமான மாறும் என்றும், கொரோனாவிற்கு முந்தைய நிலைமையை அடைய 2024ம் ஆண்டு தான் முடியும் என்ற ஷாக்கிங்கான தகவலையும் அளித்துள்ளது.

Delhi Airportக்கு சர்வதேச அளவுல கிடைச்ச மரியாதை! சீனாவை யாருமேமதிக்கலபோல

இந்நிலையில் 2022ம்ஆண்டிற்கான டாப் 10 பிஸியான விமான நிலையங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இது பிஸியான விமான நிலையங்கள் என்பது எத்தனை வெளிநாட்டு பயணிகளை குறிப்பிட்ட விமான நிலையம் கையாண்டுள்ளது என்பதை வைத்து கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் சுமார் 93.7 மில்லியன் பயணிகளை கையாண்டு அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் உள்ள ஹார்ட்ஸ்ஃபில்டு விமான நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை டல்லாஸ் ஃபோர்டு ஒர்த் டிஎஸ் விமான நிலையமும் 3வது இடத்தை டென்வர் விமான நிலையமும் பிடித்துள்ளது.

 Delhi Airportக்கு சர்வதேச அளவுல கிடைச்ச மரியாதை! சீனாவை யாருமேமதிக்கலபோல

இந்த டாப் 10 பட்டியலில் இருக்கும் ஒரே இந்திய விமான நிலையம் என்றால் அது டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் தான். இந்த 10 விமான நிலையங்களில் பட்டியலில் 5 விமான நிலையங்கள் அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்கள் தான்.

இந்தியாவில் 1 விமான நிலையம் மட்டும் இருக்கிறது. இதில் மற்றொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால் இந்த பட்டியலில் சீனாவின் ஒரு விமான நிலையம் கூட இடம் பெறவில்லை. சீனா உலகின் முக்கியமான நாடாக இருக்கும்போதிலும் அதன் ஒரு விமான நிலையம் கூட இந்த பட்டியலில் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது.

 Delhi Airportக்கு சர்வதேச அளவுல கிடைச்ச மரியாதை! சீனாவை யாருமேமதிக்கலபோல

இந்த அமைப்பு உலகின் பிஸியான சர்வதேச ஹப்களுக்கான டாப் 10 பட்டிலையும் வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தை பிடித்தது துபாய் தான். இந்த ஹப் மொத்தம் 66.06 மில்லியன் பயணிகளுடன் கடந்த 2021ம் ஆண்டு அளவை விட 127 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த பட்டியலில் சர்வதேச அளவில் கொரோனா தாக்கத்திற்கு பிறகு மீண்டும் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என தெரிகிறது. இன்னும் சில காலங்களுக்கு இந்த தாக்கம் தொடரும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, April 7, 2023, 9:27 [IST]
English summary
Delhi airport ranked as worlds 9th busiest in 2022
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X