டெல்லியில் ஆட்டோ ரிக்ஷாக்களின் மேற்கூரைகளில் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம்

By Ravichandran

டெல்லியில் உள்ள ஆட்டோ ரிக்ஷாக்களின் மேற்கூரைகள் மீது சோலார் பேனல்கள் பொருத்தப்பட உள்ளது.

டெல்லி அரசு, டெல்லி வாழ் மக்களுக்கு என சுத்தமான மற்றும் பசுமையான வருங்காலம் வழங்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சீட் அல்லது சென்டர் ஃபார் என்விரான்மென்ட் அன்ட் எனர்ஜி டெவலப்மென்ட் (Centre for Environment & Energy Development (CEED)) எனப்படும் மையம், ஹெல்ப் டெல்லி பிரீத் ('Help Delhi Breathe') என்ற பெயரில் பிரச்சார நடவடிக்கை துவக்கியுள்ளனர்.

delhi-auto-rickshaws-solar-roof-panels-generate-electricity-greener-future

இந்திய தலைநகர் டெல்லியில், ஆட்டோ ரிக்ஷாக்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமான நிலையில் உள்ளது. இனி, டெல்லியில் உள்ள ஆட்டோ ரிக்ஷாக்களின் மேற்கூரைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது. வழக்கமான ரூஃபிங் சிஸ்டம் மாற்றப்பட்டு, அவற்றிற்கு பதிலாக சோலார் பேனல்கள் பொருத்தப்பட உள்ளது. இந்த நடவடிக்கைகள், ஹெல்ப் டெல்லி பிரீத் கேம்பெயின் மூலம் பிரபலப்படுத்தப்பட உள்ளது.

சீட் அமைப்பின் சிஇஓ ராமாபதி குமார், ஆட்டோ ரிக்ஷாக்களின் மேற்கூரைகள் மீது சோலார் பேனல்கள் பொருத்தும் நடவடிக்கைகள் வெறும் துவக்கம் தான் என கூறினார். டெல்லியில் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள், வளமான எதிர்காலத்த்தை உருவாக்க உதவிகரமாக இருக்கும் என ராமாபதி குமார் தெரிவித்தார்.

தற்போது, டெல்லியில் உள்ள மேற்கூரை இடைவெளிகளில், சோலார் பேனல்கள் பொருத்தினாலே, 2 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைட் அல்லது கரியமில வாயு (CO2) எனப்படுபவற்றின் உமிழ்வை குறைக்க முடியும் என தெரிகிறது.

டெல்லியில், தற்போது உள்ள 1.6% மேற்கூரை இடைவெளிகளை உபயோகித்து கொண்டாலே, சுமார் 2 கிகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். சோலார் பேனல்கள் மூலம் 2 கிகாவாட் என்ற அளவில் மின்சாரம் தயாரிக்கபட்டால், 2 தெர்மல் மின் நிலையங்களை மூடிவிடலாம். இதன் மூலம், அந்த அளவிற்கு காற்று மாசுபடுதல் குறைக்க முடியும் என கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 7, 2016, 17:08 [IST]
English summary
Delhi Rickshaws would get Solar Roof Panels for Cleaner Future. An all-new 'Help Delhi Breathe' campaign was introduced by Centre for Environment & Energy Development (CEED). Rooftop of these auto rickshaws will be used to generate electricity. Traditional roof system will be replaced with solar panels and 'Help Delhi Breathe' campaign will promote this conversion. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+