திடீர் தடை! இனி இந்த வண்டிகளை ரோட்ல ஓட்ட கூடாது! தப்பி தவறி போலீஸ் கண்ணுல மாட்டினால் கூட கதை முடிஞ்சிரும்!

இந்தியாவில் காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னையால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக தலைநகர் டெல்லி (Delhi) உள்ளது. எனவே அங்கு பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) மூலம் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துவதற்கு அவ்வப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் டெல்லியில் தற்போது காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைமைக்கு சென்றுள்ளது. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்குவதற்கு மீண்டும் ஒரு முறை கடுமையான கட்டுப்பாடு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவின்படி, டெல்லியில் பிஎஸ்-3 பெட்ரோல் (BS-3 Petrol) மற்றும் பிஎஸ்-4 டீசல் (BS-4 Diesel) நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்த கூடாது. இந்த அதிரடி உத்தரவு இன்று முதல் (ஜனவரி 10) அமலுக்கு வந்துள்ளது.

திடீர் தடை! இனி இந்த வண்டிகளை ரோட்ல ஓட்ட கூடாது! தப்பி தவறி போலீஸ் கண்ணுல மாட்டினால் கூட கதை முடிஞ்சிரும்!

தற்காலிக தடை

இந்த தடை (Ban) உத்தரவு, தற்காலிகமானது என டெல்லி அரசு அறிவித்துள்ளது. அதாவது காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைமைக்கு சென்றுள்ள காரணத்தால்தான், பிஎஸ்-3 பெட்ரோல் மற்றும் பிஎஸ்-4 டீசல் நான்கு சக்கர வாகனங்களை சாலையில் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு கூறியுள்ளது. இந்த தடை உத்தரவு அனேகமாக வரும் ஜனவரி 13ம் தேதி வரை அமலில் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து டெல்லி போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ''டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைமைக்கு சென்றுள்ளதால், இன்று முதல் பிஎஸ்-3 பெட்ரோல் மற்றும் பிஎஸ்-4 டீசல் நான்கு சக்கர வாகனங்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து, நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போதைய நிலையில் பார்த்தால், வரும் ஜனவரி 13ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கலாம்.

திடீர் தடை! இனி இந்த வண்டிகளை ரோட்ல ஓட்ட கூடாது! தப்பி தவறி போலீஸ் கண்ணுல மாட்டினால் கூட கதை முடிஞ்சிரும்!

காற்றின் தரம் மேம்பட்டால், ஜனவரி 13ம் தேதிக்கு முன்னதாகவே இந்த தடை விலக்கி கொள்ளப்படும். ஒருவேளை காற்றின் தரம் மேம்படாவிட்டால், தடை நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. தடை நீடிக்குமா? அல்லது விலக்கி கொள்ளப்படுமா? என்பது காற்றின் தரத்தை பொறுத்து அமையும்'' என்றனர். தற்காலிகமானதுதான் என்றாலும், இந்த தடை உத்தரவு காரணமாக, டெல்லியில் பிஎஸ்-3 பெட்ரோல் மற்றும் பிஎஸ்-4 டீசல் கார்களை வைத்திருப்பவர்கள் கவலையடைந்துள்ளனர்.

கடும் நடவடிக்கை!

அரசின் இந்த தடை உத்தரவை மீறி கார்களை இயக்கினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதுதான் இந்த கவலைக்கு காரணம். ஆனால் டெல்லியில் இதுபோன்ற தடை உத்தரவுகள் அமலுக்கு கொண்டு வரப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் இதுபோன்ற தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. காற்றின் தரம் மேம்பட்டவுடன், தடை உத்தரவு விலக்கி கொள்ளப்படும். காற்றின் தரம் மோசமடைந்தால், மீண்டும் தடை விதிக்கப்படும். ஆனால் தடை உத்தரவை மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இம்முறையும் தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்கள்!

அரசின் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, டெல்லியில் எலெக்ட்ரிக் வாகனங்களை (Electric Vehicles) பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு நட்பானவையாக கருதப்படுவதால், அவற்றின் பயன்பாட்டை அரசும் ஊக்குவித்து கொண்டுள்ளது. மறுபக்கம் பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு, படிப்படியாக விடை கொடுக்கப்பட்டு வருகிறது. டெல்லியை இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனங்களின் தலைநகரமாக மாற்ற வேண்டும் என அம்மாநில அரசு விரும்புகிறது.

எனவே பஸ்கள் போன்ற பொது போக்குவரத்திலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் படிப்படியாக புகுத்தப்பட்டு வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம், எதிர்காலத்தில் டெல்லியின் காற்று மாசுபாடு பிரச்னைக்கு ஓரளவிற்கு தீர்வு காண முடியும் என நம்பப்படுகிறது. அத்துடன் சிஎன்ஜி (CNG) போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் பணிகளையும் டெல்லி அரசு தீவிரமாக மேற்கொள்ள தொடங்கியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 10, 2023, 17:49 [IST]
English summary
Delhi bans bs 3 petrol bs 4 diesel four wheelers check details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+