டில்லி கார் வெடிப்பில் சிறிய தவறால் அப்பாவி சிக்குகிறாரா? உண்மை இது தான்!
டில்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார் செகண்ட் ஹேண்ட் முறையில் வாங்கப்பட்டது எனவும் அந்த காரின் பெயரை மாற்றாமலேயே குண்டு வெடிப்பிற்காக பயன்படுத்தப்பட்டதாகவும், தற்போது அதன் முதல் ஒனரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. செகண்ட் ஹேண்டில் காரை விற்பனை செய்யும் போது பலர் செய்யும் தவறால் அந்த கார் சட்டவிரோதமான செயலில் ஈடுபடும் போது அதை விற்பனை செய்தவரும் சிக்குவார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டில்லியில் உள்ள செங்கோட்டை அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.இதில் 8 பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார் குறித்து விசாரணை நடந்தது. இந்த கார் ஹரியானா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட கார் ஆகும். இதை முகம்மது சல்மான் என்பவர் பெயரில் முதலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இவர் இதை நதீம் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.

நதீம் என்பவர் இந்த காரை பயன்படுத்திவிட்டு இதை தனியார் கார் விற்பனை நிலையம் மூலமாக விற்பனை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து ஃபரிதாபாத் பகுதியில் செயல்படும் கார் விற்பனை நிறுவனம் மூலமாக இந்த காரை விற்பனை செய்துள்ளார். இந்த காரை காஷ்மீர் புல்வாமா பகுதியைச் சேர்ந்த தாரிக் என்பவர் வாங்கியுள்ளார். அவர் காரை வாங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட தற்போது வைரலாகியுள்ளன.
சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட காரை முதலில் விசாரணை அதிகாரிகள் கண்டறிந்தனர். அந்த காரின் நம்பரை வைத்து அரசு தரப்பில் உள்ள ஆவணங்களில் சோதனை செய்த போது கடைசியாக செப்டம்பர் 20ம் தேதி இந்த கார் ஃபரீதாபாத் பகுதியில் சுங்கசாவடியை கடந்துள்ள தரவுகள் உள்ளன. மேலும் அன்று தவறான இடத்தில் இந்த கார் பார்க் செய்யப்பட்டிருந்ததால் சிசிடிவி கேமரா மூலம் கண்டறிந்து இந்த காருக்கு அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த கார் விசாரணையில் இந்த கார் செண்ட் ஹேண்ட் முறையில் வாங்கப்பட்டதும். இதற்காக போலியான ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த கார் செகண்ட் ஹேண்ட் முறையில் வாங்கப்பட்டிருந்தாலும் இந்த காரின் உரிமையாளர் பெயர் மாற்றப்படாமல் உள்ளது. இதனால் தற்போது இந்த காரை முதலில் வாங்கியவர் முதல் கடைசியாக பயன்படுத்தியவர் வரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
பலர் தங்கள் காரை செண்ட் ஹேண்ட் மார்கெட்டில் விற்கும் போது அவர்கள் பெயரை மாற்றிவிட்டார்களா என்பதை உறுதி செய்ய தவறிவிடுகின்றனர். காரை வாங்குபவர்களும் பெயரை மாற்றாமல் முந்தைய உரிமையாளர்களின் பெயரிலேயே காரை பயன்படுத்தி வருகின்றனர். இது மிகப்பெரிய தவறாக நீங்கள் ஒரு காரை செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் விற்பவனை செய்கிறீர்கள் என்றால் அதை வாங்கியவர் சட்டவிரோதமாக அதை பயன்படுத்தினால் அந்த கார் சட்டத்தின் பிடியில் சிக்கும் போது அதன் உரிமையாளரும் சிக்குவார்.

பின்னர் தான் கார் விற்பனை செய்ததை நிரூபித்தால் மட்டுமே அவர் விசாரணையிலிருந்து விடுவிக்கப்படுவார். இது தேவையில்லாத தலைவலியாக இருக்கும். இதனால் நீங்கள் காரை விற்பனை செய்கிறீர்கள் என்றால் உடனடியாக காரை வாங்கியவர் பெயருக்கு மாற்றிவிட்டாரா என உறுதி செய்ய வேண்டும். இல்லை என்றால் நீங்கள் தான் தேவையில்லாத பிரச்சனையில் சிக்க நேரிடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டில்லியில் நடந்தது மோசமான கோழைத்தனமான தாக்குதல் ஆகும். இந்த சம்பவத்தில் அங்கு இருந்த 22 கார்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 8 பேர் பலியாகியுள்ளனர். தற்போது இந்த காரின் ஆவண உரிமையாளர் மூலம் கடைசியாக வாங்கியவர் வரை விசாரணை நடத்தப்படும். நீங்கள் இது போன்ற பிரச்சனைகளில் சிக்காமல் இருக்க செகண்ட் ஹேண்டில் காரை விற்றால் பெயர் மாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications









