அரவிந்த் கெஜ்ரிவாலின் வேகன் ஆர் கார் கண்டெடுப்பு... ஸ்பேர் பார்ட்ஸ் வேட்டையில் டெல்லி போலீசார்..!!
அரவிந்த் கெஜ்ரிவாலின் வேகன் ஆர் கார் கண்டெடுப்பு... ஸ்பேர் பார்ட்ஸ் வேட்டையில் டெல்லி போலீசார்..!!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொந்தக்கார் திருடப்பட்டதை அடுத்து, சமீபத்தில் அந்த கார் டெல்லியின் புறநகர் பகுதி அருகில் கண்டெக்கப்பட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் அலுவல் மற்றும் சொந்த வேலை என எதுவாக இருந்தாலும் தனது நீலநிற மாருதி சுசுகி வேகன் ஆர் காரை தான் பயன்படுத்துவார்.

தேர்தல் பிரச்சாரங்களுக்கு கூட அவர் இதே காரை தான் பயன்படுத்தினார். அதனால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீலநிற மாருதி சுசுகி வேகன் ஆர் கார் அடையாளாமாகவே மாறிப்போனது.

தலைமை செயலகத்தில் 12ம் தேதி நிறுத்தப்பட்டு இருந்த இந்த காரை, மர்ம நபர்கள் சிலர் திருடிச்சென்றனர்.

டெல்லி முதலமைச்சரின் கார் திருடப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீலநிற வேகன் ஆர் கார் பயணம் செய்த அனைத்து வழிகளில் உள்ள எல்லா சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றினர்.

கேமராவில் பதிவான காட்சிகளில் அரவிந்த் கெஜ்ரிவாலின் காரை சில மர்ம நபர்கள் கடத்தி செல்வதும், அவர்களது முகம் சில இடங்களில் தெளிவாக பதிவாகி இருப்பதையும் கண்டறிந்தனர்.

டெல்லியின் பிரதான பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சிசிடிவியின் மூலம் கிடைத்த தகவல்கள் மற்றும் மர்ம ஆசாமிகளின் புகைப்படங்கள் கொடுக்கப்பட்டன.

அவற்றை வைத்து டெல்லி காவல் துறை முழுவதும் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீல நிற மாருதி சுசுகி வேகன் ஆர் காரை தீவிரமாக தேடி வந்தனர்.

அதன்படி டெல்லி புறநகர் பகுதியில் அந்த கார் இருப்பதாக உத்தர பிரதேச போலீசார் மூலம் டெல்லி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

டெல்லிக்கு அருகே உள்ள காஸியாபாத்தில் கைவிடப்பட்ட நிலையில், அருகே யாரும் இல்லாத வகையில் சுசுகி வேகன் ஆர் கார் நின்றுகொண்டு இருந்தது.

காஸியாபாத் காவல் கண்காணிப்பாளர் அகாஷ் தோமர் கொடுத்த தகவலை அடுத்து, டெல்லி போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று காரை மீட்டனர்.

மேலும் சில போலீஸார் திருடப்படும் கார்களின் ஸ்பேர் பார்ட்ஸ்களை விற்பனை செய்யப்படும் மீரட் சோட்டிகானி சந்தையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சுசுகி வேகன் ஆர் காரை திருடியவர்களை பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2015 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்களின் போது அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த கார் அவருக்கான தனி அடையாளமாக மாறிப்போனது.

நீல நிற சுசுகி வேகன் ஆர் கார் எங்கு டெல்லியில் சென்றாலும், அதில் அரவிந்த் கெஜ்ரிவால் தான் செல்கிறார் எனக்கூறும் அளவிற்கு ஒரு ஐக்கானிக் மதிப்பை இந்த கார் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








