ஒரே நாளில் சிக்கிய ஆயிரக் கணக்கான இளைஞர்கள்... அதிர்ச்சி தகவலை வெளியிட்ட டெல்லி போலீஸ்..!
டெல்லி போலீஸின் அதிரடி நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போலீஸிடம் வசமாக சிக்கியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக வட இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக ஹோலி பண்டிகை இருக்கின்றது.
இந்த பண்டிகை தினத்தில் கூட்டம் கூட்டமாக குழுந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் இணைந்து கலர் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி விளையாடுவார்கள்.

இந்த பண்டிகை வட இந்தியாவில் மட்டுமின்றி தற்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் பரவ தொடங்கியிருக்கின்றது. இதற்கு வட இந்தியர்கள் இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் பரவியிருப்பதே காரணமாக இருக்கின்றது.

இதுமட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து பண்டிகைகளையும், அனைத்து மக்களும் ஜாதி, மதம் பேதமின்றி கொண்டாடுவதும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது.
மேலும், இத்தினத்தை பலர் கலர் பொடிகள் தூவி கொண்டாடும் அதே வேலையில் ஒரு சில இளைஞர்கள் மட்டும் மது அருந்தி கொண்டாடும் பழக்கத்தை வைத்திருக்கின்றனர்.

இதனை நிரூபிக்கின்ற வகையில் கடந்த காலங்களில் ஹோலி பண்டிகையின்போது நடைபெற்ற போக்குவரத்து சார்ந்து சம்பவங்கள் இருக்கின்றன.
இந்த இளைஞர்கள் மது அருந்துவதோடு நிறுத்திக் கொள்ளாமல், சில நேரங்களில் குடி போதையின் உற்சாகத்தில் ஜாலி ரைடு செல்லவும் முற்படுகின்றனர்.

அவ்வாறு, குடிபோதையில் வாகனங்களை இயக்குவதால் விபத்து போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழ்கின்றது. இது பண்டிகனை தினத்தை சில குடும்பத்தினருக்க கருப்பு தினமாக மாற்றிவிடுகின்றது. இதனை முன்கூட்டியே தடுக்கும் வகையில், தலைநகர் டெல்லி போலீஸார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர்.

அந்தவகையில், நடப்பாண்டில் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பது குறிக்கோளாக செயல்பட்டனர்.
இதற்காக தலைநகர் டெல்லி முழுவதும் போலீஸார் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டனர். அதனடிப்படையில், செய்யப்பட்ட வாகன தணிக்கையில் பல குடிமகன்கள் குடித்துவிட்டு வாகனத்தை இயக்கியது கண்டறியப்பட்டது.

இதுமட்டுமின்றி, அன்றைய தினத்திலேயே பல்வேறு போக்குவரத்து விதிமீறல்வாதிகள் கண்டறியப்பட்டு, அவர்கள் அனைவருக்கும் அபராதச் செல்லாண் வழங்கப்பட்டது.
இதில், ஒட்டுமொத்தமாக ட்ரிங்க் அண்ட் டிரைவ் செய்ததாகக் கூறி 647 பேருக்கு இ-செல்லாண் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று 1,192 பேருக்கு ட்ரிபிள் ரைடிங்கிற்கான போக்குவரத்து வீதிமீறலுக்கும், 181 பேர் ட்ரிபிள் ரைடிங் சென்றதற்காகவும், 156 பேருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை இயக்கிய குற்றத்திற்காகவும் டெல்லி போலீஸார் அபராதச் செல்லாண்களை வழங்கியுள்ளனர்.
ஆகையால், ஹோலி பண்டிகை தினத்தில் மட்டுமே ஒட்டுமொத்தமாக 2,176 பேருக்கு அபராதச் செல்லாண் வழங்கப்பட்டுள்ளது.

முக்கியமாக ஹோலி பண்டிகையின்போது வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே போக்குவரத்து போலீஸார் இந்த பணியை மேற்கொண்டனர். தொடர்ந்து, குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை குறைக்கும் நோக்கிலும் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணியின் நோக்கத்திற்கு ஏற்ப பல போக்குவரத்து விதிமீறல்வாதிகள் போலீஸாரிடம் தற்போது சிக்கியுள்ளனர். இதற்காக 170க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் 1,600க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








