அடக்கடவுளே... பெட்ரோல், டீசல் விலையில் யாரும் நினைத்து கூட பார்க்காத சம்பவம்... என்னனு தெரியுமா?

பெட்ரோல், டீசல் விலையில் யாரும் நினைத்து கூட பார்க்காத நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அடக்கடவுளே... பெட்ரோல், டீசல் விலையில் யாரும் நினைத்து கூட பார்க்காத சம்பவம்... என்னனு தெரியுமா?

கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவலை கட்டுப்படுத்துவதற்காக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், தற்போது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்படுவதற்கு முன்னர் இருந்ததை போன்ற இயல்பு நிலைக்கு இன்னமும் வாகன போக்குவரத்து திரும்பவில்லை. இருந்தபோதும் சமீப காலமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.

அடக்கடவுளே... பெட்ரோல், டீசல் விலையில் யாரும் நினைத்து கூட பார்க்காத சம்பவம்... என்னனு தெரியுமா?

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 82 நாட்களாக மாற்றியமைக்காமல்தான் இருந்தன. ஆனால் விலையை தினமும் திருத்தியமைப்பதை கடந்த ஜூன் 7ம் தேதி முதல் அவை மீண்டும் தொடங்கின. அப்போது முதல் பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர தொடங்கியது. இதன் உச்சமாக நடந்த ஒரு சம்பவம் வாகன உரிமையாளர்களை விழிபிதுங்க வைத்தது.

அடக்கடவுளே... பெட்ரோல், டீசல் விலையில் யாரும் நினைத்து கூட பார்க்காத சம்பவம்... என்னனு தெரியுமா?

இந்தியாவில் பொதுவாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை மிகவும் குறைவாகதான் இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தலைநகர் டெல்லியில் பெட்ரோலின் விலையை டீசல் விலை ஓவர்டேக் செய்தது. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதே டெல்லியில் பெட்ரோலின் விலையை விட டீசல் விலை 1 ரூபாய்க்கும் மேல் அதிகமாகி விட்டது.

அடக்கடவுளே... பெட்ரோல், டீசல் விலையில் யாரும் நினைத்து கூட பார்க்காத சம்பவம்... என்னனு தெரியுமா?

தலைநகர் டெல்லியில் இன்று (ஜூலை 18) ஒரு லிட்டர் டீசலின் விலை 17 பைசா அதிகரிக்கப்பட்டது. இதனால் டெல்லியில் ஒரு லிட்டர் டீசலின் விலை இன்று 81.52 ரூபாயாக உயர்ந்தது. அங்கு ஒரு லிட்டர்டீசலின் விலை நேற்று 81.35 ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் டெல்லியில் இன்று பெட்ரோலின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

அடக்கடவுளே... பெட்ரோல், டீசல் விலையில் யாரும் நினைத்து கூட பார்க்காத சம்பவம்... என்னனு தெரியுமா?

எனவே ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 80.43 ரூபாய் என்ற நிலையில் நீடிக்கிறது. அதாவது டெல்லியில் ஒரு லிட்டர் டீசலின் விலையானது, பெட்ரோலை காட்டிலும், 1.09 காசுகள் அதிகம். தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலையை, டீசல் விலை ஓவர்டேக் செய்த அதிர்ச்சியில் இருந்து வாகன ஓட்டிகள் மீள்வதற்குள்ளாக தற்போது விலை வித்தியாசம் 1 ரூபாய்க்கும் அதிகமாக சென்றுள்ளது.

அடக்கடவுளே... பெட்ரோல், டீசல் விலையில் யாரும் நினைத்து கூட பார்க்காத சம்பவம்... என்னனு தெரியுமா?

இது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாது இல்லத்தரசிகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டின் போக்குவரத்து துறை, டீசலைதான் அதிகம் பயன்படுத்துகிறது. லாரிகள் டீசலில்தான் இயங்கி வருகின்றன. எனவே டீசல் விலை உயர்ந்தால், கூடவே பால், காய்கறி போன்ற அத்தியாவசியமான பொருட்களின் விலையும் உயர்ந்து விடும்.

அடக்கடவுளே... பெட்ரோல், டீசல் விலையில் யாரும் நினைத்து கூட பார்க்காத சம்பவம்... என்னனு தெரியுமா?

இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பெட்ரோலின் விலையை விட டீசல் விலை 1 ரூபாய்க்கும் மேல் அதிகம் ஆகும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். டெல்லியை போல், மற்ற நகரங்களிலும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. ஆனால் அங்கெல்லாம் டீசலின் விலை இன்னமும் பெட்ரோலை விட 6-8 ரூபாய் வரை குறைவாகதான் உள்ளது.

அடக்கடவுளே... பெட்ரோல், டீசல் விலையில் யாரும் நினைத்து கூட பார்க்காத சம்பவம்... என்னனு தெரியுமா?

எனினும் அங்கும் பெட்ரோல் விலையை டீசல் விலை ஓவர்டேக் செய்து விடுமோ? என்ற அச்சம் நிலவுகிறது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பெட்ரோல், டீசல் விலை வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் இன்னும் பெட்ரோல், டீசல் கொண்டு வரப்படவில்லை. எனவே மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரி மாறுபடுவதால், ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விலையில் பெட்ரோல், டீசல் விற்பனையாகிறது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Delhi: Diesel Now More Than Re 1 Expensive Than Petrol. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X