'0009' பேன்ஸி பதிவு எண் விற்பனை... எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது என தெரிஞ்சா அசந்திருவீங்க!

0009 சீரிஸ் உடன் கூடிய பேன்ஸி வாகன பதிவு எண், மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போயிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

'0009' பேன்ஸி பதிவு எண் விற்பனை... எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது என தெரிஞ்சா அசந்திருவீங்க!

பயணம் செய்ய வேண்டிய அத்தியாவசிய தேவைக்காக மட்டும் ஒரு சிலர் கார்களை வாங்குவது கிடையாது. அவர்கள் தங்களது அந்தஸ்தை வெளிக்காட்டும் அம்சமாகவும் கார்களை பார்க்கின்றனர். எனவே சொகுசு வசதிகள் நிரம்பிய மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்குகின்றனர். அத்துடன் காரின் பதிவு எண் பேன்ஸியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

'0009' பேன்ஸி பதிவு எண் விற்பனை... எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது என தெரிஞ்சா அசந்திருவீங்க!

பேன்ஸி பதிவு எண்ணை வாங்குவதற்காக எனவும் தனியாக பெரும் தொகையை செலவிடவும் பலர் தயாராக உள்ளனர். கார்களை வாங்குவதற்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, பேன்ஸி நம்பர்களை வாங்கவும் அவர்கள் கொடுக்கின்றனர். கார் வாங்குபவர்களிடம் காணப்படும் இந்த பேன்ஸி எண் மோகத்தை, டெல்லி போக்குவரத்து துறை மிகவும் சரியாக பயன்படுத்தி வருகிறது.

'0009' பேன்ஸி பதிவு எண் விற்பனை... எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது என தெரிஞ்சா அசந்திருவீங்க!

டெல்லி போக்குவரத்து துறை, கடந்த 2014ம் ஆண்டு முதல் ஆன்லைன் இ-ஏலத்தை நடத்தி வருகிறது. தங்கள் அதிர்ஷ்ட எண்ணை, வாகனத்தின் பதிவு எண்ணாக பெற வேண்டும் என்ற விருப்பம் உடைய நபர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கலாம். இந்த ஏலத்தில் கலந்து கொள்ளும் ஒரு சிலர், பேன்ஸி எண்ணை பெறுவதற்காக லட்சக்கணக்கான ரூபாயை செலவிட்டு வருகின்றனர்.

'0009' பேன்ஸி பதிவு எண் விற்பனை... எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது என தெரிஞ்சா அசந்திருவீங்க!

இதன்படி நடப்பு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில், 0009 சீரிஸ் உடன் கூடிய வாகன பதிவு எண், 10.10 லட்ச ரூபாய்க்கு ஏலம் மூலமாக விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம், இதே 0009 சீரிஸ் உடன் கூடிய எண்ணை ஒருவர் 7.10 லட்ச ரூபாய்க்கு ஏலம் மூலம் வாங்கியிருந்தார். அந்த தொகையை, செப்டம்பர் ஏலத்தில் கிடைத்த தொகை மிஞ்சியுள்ளது.

'0009' பேன்ஸி பதிவு எண் விற்பனை... எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது என தெரிஞ்சா அசந்திருவீங்க!

இதுதவிர 0003 மற்றும் 007 ஆகிய சீரிஸ் உடன் கூடிய பதிவு எண்களும் நல்ல தொகைக்கு ஏலம் போயுள்ளன. இந்த 2 சீரிஸ்களும் தலா 3.10 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக வாகனங்களின் விற்பனை அதலபாதாளத்திற்கு சென்றதால், ஆட்டோமொபைல் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது.

'0009' பேன்ஸி பதிவு எண் விற்பனை... எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது என தெரிஞ்சா அசந்திருவீங்க!

ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளின் காரணமாக, வாகன விற்பனை தற்போதுதான் சரிவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இருந்தாலும் டெல்லி போக்குவரத்து துறை சார்பில் நடத்தப்படும் பேன்ஸி பதிவு எண்களுக்கான ஏலம், கடந்த ஒரு சில மாதங்களாகவே தொடர்ந்து வெற்றிகரமாக நடந்து வருகிறது.

'0009' பேன்ஸி பதிவு எண் விற்பனை... எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது என தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் ஏலம் நடைபெறவில்லை. எனினும் ஏப்ரல் மாதம் முதல் ஏலம் மீண்டும் தொடங்கப்பட்டது. அதன்பின் படிப்படியாக வருவாய் உயர்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில், 9000 என்ற சீரிஸ் உடன் கூடிய ஒரே ஒரு பதிவு எண் மட்டும் 1.50 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது.

'0009' பேன்ஸி பதிவு எண் விற்பனை... எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது என தெரிஞ்சா அசந்திருவீங்க!

அதன்பின்பு வந்த மே மாதத்தில், 5 பேன்ஸி பதிவு எண்களை ஏலம் விட்டதன் மூலம் போக்குவரத்து துறைக்கு 9.30 லட்ச ரூபாய் கிடைத்தது. அதற்கு அடுத்த ஜூன் மாதத்தில், ஏலம் மூலம் கிடைத்த மொத்த தொகை 21.70 லட்ச ரூபாயாக உயர்ந்தது. அதே சமயம் ஜூலையில், போக்குவரத்து துறைக்கு பேன்ஸி பதிவு எண் ஏலம் மூலமாக 33.80 லட்ச ரூபாய் கிடைத்தது.

'0009' பேன்ஸி பதிவு எண் விற்பனை... எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது என தெரிஞ்சா அசந்திருவீங்க!

கடந்த 5 மாதங்களில், அதாவது ஏப்ரல்-ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், பேன்ஸி பதிவு எண்களை ஏலம் மூலமாக விற்பனை செய்ததில், டெல்லி போக்குவரத்து துறைக்கு 99 லட்ச ரூபாய்க்கும் மேல் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Delhi: Fancy Vehicle Registration Number '0009' Auctioned For Rs.10.10 Lakh - Details. Read in Tamil
Story first published: Wednesday, September 30, 2020, 21:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X