இவங்களுக்கு முன்னாடி அம்பானி பொண்ணே ஓரமாதான் நிக்கணும்! பாதுகாவலர்களை தாண்டி யாரும் நெருங்க முடியாது!
இந்தியாவின் பெரு நகரங்களில் மிகவும் விலை உயர்ந்த கார்களை (Expensive Cars) பார்ப்பது என்பது தற்போது சர்வ சாதாரணமான ஒரு விஷயமாக மாறி விட்டது. அதேபோல் விலை உயர்ந்த கார்களை பெண்கள் ஓட்டும் காட்சிகளையும் தற்போது நம்மால் எளிதாக பார்க்க முடிகிறது.
ரிஹானா கிஃபாயத் (Rehana Kifayat) இதற்கு ஓர் உதாரணம். டெல்லியை (Delhi) சேர்ந்த இவருக்கு 20 வயது மட்டுமே ஆகிறது. கல்லூரியில் படித்து கொண்டுள்ள இவர், மற்ற பெரும்பாலான பெண்களுடன் ஒப்பிடும்போது, மிகவும் வித்தியாசமான வாழ்க்கை முறையை (Lifestyle) பின்பற்றி வருகிறார். அந்த வாழ்க்கை முறை நமக்கு பிரம்மிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

இவர் கல்லூரிக்கு செல்வதற்கு தற்போது பிஎம்டபிள்யூ இஸட்4 (BMW Z4) காரை பயன்படுத்தி வருகிறார். இது முந்தைய தலைமுறை (Previous Generation) மாடல் என்பதுடன், கன்வெர்டபிள் (Convertible) ரகத்தை சேர்ந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த காரை ரிஹானாவின் தந்தை வாங்கி கொடுத்துள்ளார்.
பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் (BMW 3-Series) கார்தான், ரிஹானாவின் முதல் கார் ஆகும். ஆனால் தற்போது பிஎம்டபிள்யூ இஸட்4 காரை அவர் பயன்படுத்தி கொண்டுள்ளார். இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், இவை இரண்டுமே யூஸ்டு கார்கள்தான் (Used Cars). தற்போதெல்லாம் செகண்ட் ஹேண்ட் கார் (Second Hand Car) மார்க்கெட்டில், சொகுசு கார்கள் எல்லாம் மிக குறைவான விலையிலேயே (Price) கிடைக்கின்றன.

இந்த பிஎம்டபிள்யூ இஸட்4 காரை ரிஹானாவின் தந்தை வெறும் 30 லட்ச ரூபாய்க்கு வாங்கி கொடுத்துள்ளார். இது 2016 மாடல் ஆகும். இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. ரிஹானா பிஎம்டபிள்யூ இஸட்4 காரை ஓட்டும்போதெல்லாம், அவரது பாதுகாவலர்கள் கூடவே வருகின்றனர்.
அவர்கள் 2 மஹிந்திரா பொலிரோ நியோ (Mahindra Bolero Neo) கார்களில், ரிஹானாவின் பிஎம்டபிள்யூ இஸட்4 காரை பின் தொடர்கின்றனர். ரிஹானா, அவரது பிஎம்டபிள்யூ இஸட்4 மற்றும் அவரது பாதுகாவலர்கள் தொடர்பான தகவல்களை விளக்கும் வீடியோ யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது. அந்த வைரல் வீடியோவை (Viral Video), அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அனேகமாக பிஎம்டபிள்யூ இஸட்4 போன்ற ஒரு காரை தொடர்ச்சியாக பயன்படுத்தும் இளம் வயது பெண்களில் ஒருவராக ரிஹானா இருக்கலாம். அவரது வாழ்க்கை முறை உண்மையிலேயே நமக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் 2 மஹிந்திரா பொலிரோ நியோ கார்களில் பாதுகாவலர்கள் பின் தொடர்வது என்பதெல்லாம் சாதாரண விஷயமாக தெரியவில்லை.
ஆனால் இளம் வயது பெண்கள், டெல்லி போன்ற போக்குவரத்து நெரிசல் (Traffic Jam) மிகுந்த பெரு நகரங்களில், கார் ஓட்ட முன் வந்திருப்பது உண்மையிலேயே நல்ல விஷயம்தான். கார் ஓட்ட ஆசைப்படும் பெண்களுக்கு, ரிஹானாவின் கதை உத்வேகம் கொடுக்க கூடியதாக இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








