Delhi girl-இன் அன்றாட சவாலான பயணம் இப்படிதான் இருக்கு... பலருக்கு ரோல் மாடலாகி இருக்காரு!!

என்ஜீனியரிங் படித்துள்ளாய்... ஆனால் இப்படி சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறுகிறாயே... என கூற தோன்றும் விதமாக 21 வயது மட்டுமே ஆன ஓர் இளம்பெண் ஒரு காரியத்தை செய்து வருகிறார். யார் அவர்? அவர் அப்படி என்ன காரியத்தை செய்து வருகிறார் என்பது குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.

பெண்கள் கல்வியையும், ஆண்களுக்கு இணையான வேலை வாய்ப்புகளையும் பெறும் நாடுகளுள் ஒன்றாக நமது இந்தியா மாறி வருகிறது என்றால், அதில் சந்தேகமே இல்லை. இருந்தாலும், சில பெண்கள் கல்வியை பெற்ற பின்பும் அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்ட சட்டங்களை மதிப்பதிலேயே என நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. அத்தகைய பெண்களை சமூகத்திலும், இணையத்திலும் பரவலாக பார்க்க முடியும்.

delhi girl sells pani puri

அத்தகையவர்களுள் ஒருவரை பற்றிதான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோமா என கேட்டால், இல்லை. இந்த செய்தியின் கதாநாயகி கல்லூரியில் பொறியியல் இளங்கலை படிப்பு படித்து வருகிறார். படிப்பிற்கு இடையில், தள்ளுவண்டியில் பானி பூரியும் விற்று வருகிறார். இது உண்மையில் சவாலான வாழ்க்கை ஆகும். இதற்காக இவரை பாராட்ட எண்ணும்போது, இவர் செய்யும் மற்றொரு காரியம் நம்மை சற்று முகம் சுளிக்க வைக்கிறது.

டாப்ஸி உபாதேய் என பெயர் கொண்ட இந்த இளம்பெண்ணிற்கு வயது 21 ஆகிறது. பானி பூரி விற்பதற்காக சிறிய அளவில் ஒரு தள்ளுவண்டி மட்டுமின்றி, டாப்ஸி உபாதேயிடம் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் ஒன்றும் உள்ளது. இந்த பைக்கின் பின்னால், தள்ளுவண்டியை இணைத்தவாறு சாலைகளில் இந்த பெண் கொண்டு செல்கிறார். இது உண்மையில் ஆபத்தான பயணம் ஆகும். சாலைகளில் இவ்வாறு பயணிக்க அனுமதிக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஏனெனில் இவ்வாறான வாகனங்கள் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக, வளைவுகளில் இவ்வாறு பின்னால் கார்ட்-ஐ இணைத்து கொண்டு பைக்கை திருப்புவது என்பது சிரமமான காரியம். பைக்கிற்கு பின்னால் கார்ட் வருவதை மற்ற வாகனங்கள் கவனிக்காவிட்டாலும், கார்ட் தனது பாதையில் இருந்து சற்று விலக நேர்ந்தாலும் மோதல்கள் ஏற்படலாம். கார்ட்-க்கு தனியாக டிரைவர் கிடையாது அல்லவா...

இவ்வாறான வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு சரியான பேலன்ஸ் கிடைக்காமல் போகலாம். அத்துடன், பிரேக் பிடிக்கும் சமயங்களிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியிருக்கும். ஆக மொத்தத்தில், இவ்வாறு கார்ட்-ஐ பின்பக்கத்தில் இணைந்து பொது சாலைகளில் பயணிப்பது தவறு. அதிலிலும் இந்த இளம்பெண் டாப்சி உபாதேய் இந்த வாகனத்தை நாட்டின் தலைநகரான டெல்லியின் பரபரப்பான சாலை ஒன்றில் இந்த பெண் இயக்கி வருகிறார்.

இவரது இந்த வாகனத்திற்கு போலீஸார் எவ்வாறு அனுமதிக்கின்றனர் என்பது தெரியவில்லை. கார்ட் பைக்கில் இருந்து கழற நேர்ந்தால், யோசிக்க முடியாத விபத்துகள் நடக்கவும் வாய்ப்புள்ளது. டாப்சி உபாதேய் பார்ட் டைம் பானி பூரி வேலையால் டெல்லியில் பிரபலமானவராக உள்ளார். மிகவும் போக்குவரத்து நெரிசல்கள் மிகுந்த டெல்லி மாநகர சாலையில் அசால்ட்டாக இந்த பிஸ்னஸை பார்த்துவரும் இவர் இளங்கலை தொழிற்நுட்ப படிப்பில் 3ஆம் ஆண்டு பயின்று வருகிறார்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

எல்லாரும் கூறுவதைதான் நாங்களும் கூறுகிறோம், இவ்வாறான வாகனங்கள் விபத்தற்ற போக்குவரத்துக்கு எதிரானவை. மற்றப்படி, டெல்லியில் இந்த இளம்பெண்ணின் பார்ட்-டைம் வேலை உண்மையில் பாராட்டத்தக்கது. படித்து கொண்டே வேலை பார்ப்பது எந்த அளவிற்கு கடினம் என்பதை அதனை அனுபவித்தவர்களுக்கு தெரியும். பைக்குடன் கார்ட்-ஐ இணைப்பதை மட்டும் நிறுத்தி கொண்டால், டாப்சி உபாதேய் பாராட்டத்தக்கவர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்... கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Monday, April 10, 2023, 15:10 [IST]
English summary
Delhi girl sells pani puri on custom built royal enfield bullet bike
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+