இனி வெளியே தலைக்காட்ட முடியாது!! நேரா வீட்டிற்கே சென்று தூக்கிய போலீஸார் - ரீல்ஸ் மோகம் யாரை விட்டுச்சு!

போக்குவரத்துக்கு இடையூறாக, நடுரோட்டில் குறுக்கே வாகனத்தை நிறுத்தி ரீல்ஸ் எடுத்த பிரபல யூடியூபரை போலீஸார் கைது செய்திருப்பதுடன், அதிரடியாக ரூ.36,000 அபராதமும் விதித்துள்ளனர். எங்கு இந்த சம்பவம நடைபெற்றது என்பதையும், இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டிக்டாக் தடை செய்யப்பட்டாலும், ரீல்ஸ் மோகம் இன்னும் நம்மை விடவில்லை. சொல்ல போனால், மக்களிடையே நாளுக்கு நாள் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதில் ஏழைகள், பணக்காரர்கள் என எந்த பாகுபாடும் இல்லை. பணக்காரர்கள் தங்களது வசதிக்கு ஏற்ப பிரம்மாண்டமாக ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து இணையத்தில் பதிவிடுகின்றனர்.

gold man pradeep dhaka arrested

குறிப்பாக வட இந்தியாவில், ரீல்ஸ் மோகம் எல்லையை தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், 'கோல்டு மேன்' என அழைக்கப்படும் ப்ரதீப் தாகா சமீபத்தில் டெல்லியின் பரபரப்பான சாலை ஒன்றில் மற்ற வாகனங்களை வழிமறித்தவாறு தனது வாகனத்தை சாலையின் குறுக்கே நிறுத்தி, வீடியோ எடுத்து அட்ராசிட்டி செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ டெல்லியை கடந்து நாடு முழுவதும் வைரலாகியது.

போக்குவரத்துக்கு இடையூறாக நடந்துக் கொண்டது மட்டுமின்றி, சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, ஒருபக்க கதவை திறந்து வைத்தப்படி வாகனம் ஓட்டியுள்ளனர். ஆதலால், பிரதீப் தாகா மீது போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. இதனையடுத்து டெல்லி போக்குவரத்து போலீஸார் பிரதீப் தாகா மற்றும் அவருடன் சேர்ந்து இந்த செயல்களில் ஈடுப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

gold man pradeep dhaka arrested

விபத்து ஏற்படுத்தாத பட்சத்தில், பொதுவாக இவ்வாறான செயல்களுக்கு, வாகனம் பறிமுதல் செய்யப்படும் மற்றும் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிக்கு மிக பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படுவது வழக்கம். ஆனால், பிரதீப் தாகா விசாரிக்க வந்த போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால், அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காகவும், அவர்களை தாக்கியதற்காகவும் பிரதீப் தாகாவின் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி பிரதீப் தாகாவின் தங்க நிறத்திலான இஸுஸு வி-கிராஸ் பிக்-அப் டிரக் வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்ததுடன், வாகனத்தின் உரிமையாளருக்கு ரூ.36,000 அபராதம் விதித்துள்ளனர்.

இதுதொடர்பான விபரங்கள் அடங்கிய வீடியோவை டெல்லி போலீஸார் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவின் மூலம், போலீஸ் பேரிகேட்ஸையும் பிரதீப் தாகா தீயில் கொளுத்தி ரீல்ஸ் எடுத்திருப்பது தெரிய வருகிறது. பிரதீப் தாகாவின் அட்ராசிட்டிகள் அனைத்தையும் ஒரே வீடியோவாக தொகுத்து வழங்கியுள்ள டெல்லி போலீஸார் அவரை கிண்டல் செய்யும் விதமாக இந்த எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளனர்.

வீடியோவின் ஒரு காட்சியில், பிரதீப் தாகா முகத்தை மறைத்தப்படி போலீஸாரின் கட்டுப்பாட்டில் இருப்பதை காணலாம். இவ்வளவு அட்ராசிட்டி செய்துள்ள பிரதீப் தாகா நல்ல பிள்ளை போல் இந்த வாகனத்தை அவரது தாயாரின் பெயரில் வாங்கியுள்ளார். பிரதீப் தாகாவின் இஸுஸு வாகனத்தில் சில பிளாஸ்டிக் பொம்மை ஆயுதங்களையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

gold man pradeep dhaka arrested

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்ஸ்டாகிராமில் லைக்குகளையும், கமென்ட்களையும் வாங்குவதற்காக பிரதீப் தாகா செய்த இந்த செயல்களில் பாலிவுட் சினிமாவின் தாக்கமும் நிச்சயமாக உள்ளது. சினிமா எந்த அளவிற்கு இளம் தலைமுறையினர் இடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

More from DriveSpark

Article Published On: Monday, April 1, 2024, 11:43 [IST]
English summary
Delhi gold man pradeep dhaka arrested vehicle seized by police check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X