திடீரென முன்னாடி வந்து நின்ன தங்க மனிதனால் ஸ்தம்பித்த போக்குவரத்து... காரணம் தெரிஞ்சா ஷாக் ஆயிருவீங்க...

சமூக வலை தளங்கள் நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறி விட்டன. நிறைய பேர் சமூக வலை தளங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தைதான் நம்பியுள்ளனர். இதற்காக வித்தியாசமான வீடியோக்களை உருவாக்கி சமூக வலை தளங்களில் பதிவிடுகின்றனர். இதில், ஒரு சில வீடியோக்கள் ஆபத்தானவையாக இருக்கின்றன.

பொது சாலைகளில் மேற்கொள்ளப்படும் வாகன ஸ்டண்ட்கள் பற்றிதான் நாங்கள் பேசி கொண்டுள்ளோம். கடந்த காலங்களில் வைரல் வீடியோக்களை (Viral Videos) உருவாக்க வேண்டும் என்பதற்காக, பொது சாலைகளில் ஸ்டண்ட் செய்த பலரை பற்றிய செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு வழங்கியுள்ளது.

Delhi Gold Man Stops Traffic

இந்த வரிசையில் தற்போது ஒரு நிகழ்வு நமது கவனத்திற்கு வந்துள்ளது. கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அந்த நிகழ்வு குறித்த தகவல்களை இந்த செய்தியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ ஒன்று தற்போது பரவி வருகிறது. இந்த வீடியோவில் இசுஸு வி-க்ராஸ் பிக்அப் டிரக் (Isuzu V-Cross Pickup Truck) வாகனம் ஒன்று விதிமுறை மீறலில் ஈடுபடுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

அதாவது போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை ஒன்றில், இந்த இசுஸு வி-க்ராஸ் பிக்அப் டிரக் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் (Delhi) நடைபெற்றுள்ள இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. இசுஸு வி-க்ராஸ் பிக்அப் டிரக்கின் டிரைவர் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென மற்ற வாகனங்களின் குறுக்கே வந்து, சாலையின் நடுவே பார்க்கிங் செய்ததுதான் இதற்கு காரணம்.

இதனால் மற்ற வாகனங்களின் டிரைவர்கள் குழம்பி போய் விட்டார். இந்த சம்பவம் நிகழ்ந்த சமயத்தில், அந்த பகுதியில் நிறைய வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. கொஞ்சம் அசந்திருந்தால், நிறைய வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி, பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம். ஆனால் நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இசுஸு வி-க்ராஸ் பிக்அப் டிரக் மற்ற வாகனங்களின் போக்குவரத்தை நிறுத்தும் வகையில், சாலையின் குறுக்கே வந்து நின்றதும், அதில் இருந்து 2 பேர் இறங்குகின்றனர். இதில், டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தவரின் கழுத்தில் தங்க நகை போன்ற ஆபரணங்கள் குவிந்து கிடக்கின்றன. எனவே இவரை இந்தியாவின் புதிய தங்க மனிதர் என நெட்டிசன்கள் அழைக்க தொடங்கியுள்ளனர்.

புனே (Pune) நகரை சேர்ந்த சன்னி வாக்சுரே (Sunny Waghchure) பற்றி உங்களுக்கு தெரியுமா? கழுத்து முழுக்க தங்க ஆபணரங்களுடன்தான் அவர் வலம் வருவார். அவரது கார்கள் மற்றும் செல்போன்கள் கூட தங்க நிறத்தில் ஜொலிக்கும். அதே போன்ற பாணியை, இந்த புதிய தங்க மனிதரும் பின்பற்றியுள்ளார்.

அவரது கழுத்தில் தங்க நகைகள் போன்ற ஆபரணங்கள் ஜொலிக்கும் நிலையில், இசுஸு வி-க்ராஸ் பிக்அப் டிரக்கும் தங்க நிறத்தில்தான் காட்சியளிக்கிறது. ஆரம்பத்தில் இந்த வீடியோவை பார்க்க பலரும், இவர் சன்னி வாக்சுரே என நினைத்திருக்கலாம். ஆனால் இவர் அவர் கிடையாது. எனவேதான் நெட்டிசன்கள் இவரை இந்தியாவின் புதிய தங்க மனிதர் என அழைக்கின்றனர்.

இந்த புதிய தங்க மனிதர், வைரல் வீடியோவை உருவாக்க வேண்டும் என்பதற்காக, வேண்டுமென்றே இந்த விதிமுறை மீறலில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய நிலையில், அதற்கு அடுத்தபடியாக, முன் பக்க கதவு திறக்கப்பட்ட நிலையில், இந்த இசுஸு வி-க்ராஸ் பிக்அப் டிரக் பயணிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

இதுவும் கூட ஒரு ஆபத்தான பயணம்தான். எனவே இந்த புதிய தங்க மனிதர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதன் பேரில், புதிய தங்க மனிதர் மீது விரைவில் காவல் துறையின் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சமூக வலை தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக, பலரும் தற்போது இது போன்ற செயல்களில் ஈடுபட தொடங்கி விட்டனர். இத்தகைய நபர்களுக்கு வெறும் அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகள் மட்டும் போதாது. இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

இல்லாவிட்டால் அபராதத்தை செலுத்தி விட்டு, மீண்டும் மீண்டும் விதிமுறை மீறலில் ஈடுபடுவார்கள். எனவே கடுமையான நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே இத்தகைய நபர்களை கட்டுப்படுத்த முடியும். கடும் நடவடிக்கைகள் பாய தவறினால், தொடர்ச்சியாக இன்னும் பலர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இது சாலை விபத்துக்களுக்கு வழிவகுக்கும் என்பதால், காவல் துறை நடவடிக்கைகளை தீவிரமாக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, March 29, 2024, 22:59 [IST]
English summary
Delhi gold man stops traffic to make instagram reel viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+