டெல்லியில் ஆட்சி அமைத்ததும் பாஜக அடித்த முதல் சிக்ஸர்! எங்கே அடிச்சா எல்லாம் சரியாகும்னு தெரிஞ்சி வெச்சிருக்கு
காற்று மாசுபடுதலை குறைக்க அரசாங்கங்கள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளன. இதன் ஒருபகுதியாக, தற்போதைய பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலக்ட்ரிக் வாகனங்களை கொண்டுவர இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் விரும்புகின்றன. அதேநேரம், பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து குறைத்து காற்று மாசுபடுவதை குறைக்கும் முயற்சிகளிலும் அரசாங்கங்கள் ஈடுப்பட்டு வருகின்றன. அதன்படி, ஒரு மாநில அரசு பழைய வாகனங்களுக்கு இனி எரிபொருள் விற்பனை செய்யப்படாது என அதிரடியாக அறிவித்துள்ளது. அதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆட்டோமொபைல் வாகனங்கள் பல்வேறு விதங்களில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. அந்த வகையில், வாகனங்களில் இருந்து வெளிவரும் காற்று மாசுவின் அளவும் ஒவ்வொரு குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு தொழிற்நுட்ப வளர்ச்சி தான் காரணம் ஆகும்.

இதனாலேயே, இன்றைய கால பெட்ரோல்/ டீசல் வாகனங்களில் இருந்து அதிக அளவில் காற்று மாசு ஆனது ஏற்படுவது இல்லை. மேலும், இதன் காரணமாகவே, பழைய வாகனங்களை மக்கள் பயன்படுத்துவதை முடிந்தவரையில் தடுக்க மத்திய அரசு விரும்புகிறது. அதன் ஒருபகுதியாக, வாகன அழிப்பு கொள்கையை சில வருடங்களுக்கு முன்னர் மத்திய அரசு கொண்டுவந்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன்.
பழைய வாகனங்களை அருகில் உள்ள, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாகன ஸ்க்ராப் மையம் (Scrap Centre)-இல் முறையாக அழித்து, அதன் மூலம் தங்களது அடுத்த புதிய வாகனத்தை கணிசமான சலுகை உடன் வாங்கலாம் என்பதுதான் மத்திய அரசின் வாகன அழிப்பு கொள்கை ஆகும்.

இதற்காக, கனரக வாகனங்கள் மற்றும் கார்கள் உள்ளிட்டவற்றை பழைய வாகனங்களாக தீர்மானிக்க தனித்தனியாக கால நிர்ணயம் செய்யப்பட்டது. வாகன அழிப்பு கொள்கை சில வருடங்களுக்கு முன்னரே பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட போதிலும், இதனை பெரும்பாலான வாகன ஓட்டிகள் பின்பற்றுவதுபோல் தெரியவில்லை.
இதன் காரணமாகவே, டெல்லி மாநில அரசு ஓர் அதிரடியான நடவடிக்கையை கொண்டுவர போகிறது. அதுதான், பழைய வாகனங்களுக்கு எரிபொருள் கிடையாது என்பதாகும். 15 வருட பழைய வாகனங்களுக்கு வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் எரிபொருள் வழங்கப்படாது என டெல்லி அரசாங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. புதிய சட்ட பேரவையில் மாநில சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மன்ஜிந்தர் சிங் சிர்ஸா, மாநிலத்தின் காற்று மாசுவை கட்டுப்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் மேற்கொண்ட கலந்துரையாடலுக்கு பின் 15-வருட பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 15 வருட பழைய வாகனங்கள் என்பதை எவ்வாறு கண்டறிந்து பெட்ரோல் (அ) டீசலை வழங்க போகின்றனர் என்பதை அறிய ஆவலாக உள்ளோம். இதற்காக குழுக்களை உருவாக்க போவதாக டெல்லி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேநேரம், டெல்லிக்கு வெளியே இருந்து வரும் வாகனங்களை அடையாளம் காண்பதற்கான திட்டங்களையும் டெல்லி அரசு வகுக்க உள்ளது.


Click it and Unblock the Notifications









