பச்சை கலரில் சிட்டி பஸ்ஸை பார்த்து எத்தனை வருஷமாச்சு...!! மறைந்த ஜெயலலிதா ஸ்டைலில் பெண் முதலமைச்சர்
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles) இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் தேவை அதிகரித்து வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்கள் பசுமையான மற்றும் இரைச்சல் அற்ற போக்குவரத்தை வழங்கக் கூடியவைகளாக உள்ளதால் மத்திய அரசும் எலக்ட்ரிக் வாகனங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும், வாங்கும் கஸ்டமர்களுக்கும் மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், பொது போக்குவரத்தில் எலக்ட்ரிக் வாகனங்களை கொண்டுவருவதிலும் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
அதேபோல், அந்தந்த மாநில அரசாங்கங்களும் தங்களது மாநிலங்களுக்குள் எலக்ட்ரிக் வாகனங்களை பொது போக்குவரத்திலும், அரசாங்க பயன்பாட்டு வாகனங்களிலும் கொண்டுவர பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மாநில அரசாங்கமும் சரி, மத்திய அரசாங்கமும் சரி தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகின்றன.

டெல்லியில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்தும் முயற்சியாக 'டெல்லி எலக்ட்ரிக் வாகன முயற்சி' (Delhi Electric Vehicle Initiative - DEVI) என்கிற பெயரில் ஒரு திட்டத்தை டெல்லி மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை சுருக்கமாக தேவி என அழைக்கின்றனர்.
இந்த தேவி திட்டத்தில் பல்வேறு விதமான எலக்ட்ரிக் வாகனங்கள் டெல்லி மாநிலத்திற்குள் பல விதமான பயன்பாடுகளுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தற்போது சுமார் 400 எலக்ட்ரிக் பேருந்துகள் டெல்லி அரசு போக்குவரத்து கழகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக, டெல்லியில் செயல்படும் ஒட்டுமொத்த எலக்ட்ரிக் பேருந்துகளின் எண்ணிக்கை 2000 என்கிற எண்ணிக்கையை கடந்துள்ளது.

புதிய 400 எலக்ட்ரிக் பேருந்துகளை டெல்லி மாநில முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பச்சை கொடியை அசைத்து பயன்பாட்டிற்கு துவங்கி வைத்தனர். இந்த 400 எலக்ட்ரிக் பேருந்துகளில் கிட்டத்தட்ட 120 எலக்ட்ரிக் பேருந்துகளை ஜேபிஎம் க்ரூப் (JBM Group) தயாரித்து உள்ளது.
இந்த 120 எலக்ட்ரிக் பேருந்துகள் மூலமாக, டெல்லி அரசாங்கத்தின் கீழ் செயல்படும் ஜேபிஎம் க்ரூப் நிறுவனத்தின் எலக்ட்ரிக் பேருந்துகளின் எண்ணிக்கை 650ஐ கடந்து உள்ளது. இந்த எலக்ட்ரிக் பேருந்துகளில் முக்கிய அம்சமாக ITMS எனப்படும் இண்டெலிஜண்ட் டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் (Intelligent Transport Management System) வழங்கப்பட்டு உள்ளது.
இதன் மூலமாக, டெல்லியில் செயல்படும் எலக்ட்ரிக் பேருந்துகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் நிர்வகிக்க முடியும். இது மட்டுமில்லாமல், ரியல்-டைமில் பேருந்து எங்கு உள்ளது என்பதை ஒவ்வொரு வினாடியும் கண்காணிக்க முடியும். இன்றைய கால மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் (CCTV Surveillance) வழங்கப்படுவதால், இவை இந்த புதிய 400 எலக்ட்ரிக் பேருந்துகளிலும் இடம்பெற்றுள்ளன.
பயணிகளின் சவுகரியத்திற்காகவும், பாதுகாப்புக்காகவும் பேருந்தை நிறுத்த வலியுறுத்தும் பொத்தான்களும் பேருந்துக்குள் இடம்பெற்றுள்ளன. பேருந்தில் எங்கேனும் தீப்பொறி ஏற்படுவதை கண்டறிந்தால் அதுகுறித்து எச்சரிக்கும் சிஸ்டங்களும் இந்த எலக்ட்ரிக் பேருந்துகளில் உள்ளன. இவ்வாறான அசம்பாவிதங்களை தடுப்பதற்காகவே வாகனத்தில் ஏதேனும் பழுதுகள் ஏற்படுகின்றனவா என்பதை தொடர்ந்து கண்காணிக்கும் சிஸ்டங்கள் இந்த எலக்ட்ரிக் பேருந்துகளில் வழங்கப்பட்டுள்ளன.
டிரைவருக்கு முன்னால் வழங்கப்படும் டேஸ்போர்டை முடிந்தவரையில் டிரைவரின் கவனத்தை சிதறடிக்காத வகையிலும், டிரைவருக்கு போதுமான கண்ட்ரோல்களை வழங்கும் வகையிலும் வடிவமைத்துள்ளனர். இது போன்றதான எலக்ட்ரிக் பேருந்துகளை இந்த 2025ஆம் ஆண்டு முடிவதற்குள் மேலும் 2,080 பேருந்துகளை கொண்டுவர உள்ளதாக டெல்லி முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் வாகனங்களை தனிநபர் சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டுமென்றால், அதற்கு முதலில் பொது போக்குவரத்தில் எலக்ட்ரிக் வாகனங்களை அரசாங்கங்கள் கொண்டுவருவது அவசியமாகும். ஏனெனில், அப்போதுதான் எலக்ட்ரிக் வாகனங்களில் பயணிப்பது சாதாரணமானதாக மாறும். மேலும், எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதில் தற்போதுள்ள பற்றாக்குறைகளும் அகலும்.


Click it and Unblock the Notifications








