"001" என்ற பைக் நம்பர் பிளேட் ரூ50,000

உயர்ரக பைக் வாங்குபவர்கள் பைக்கிற்கான விஐபி நம்பர் கிடைப்பதில் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். இந்த சிக்கலை தீர்க்க டில்லி அரசு தற்போது புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது.

By Balasubramanian

உயர்ரக பைக் வாங்குபவர்கள் பைக்கிற்கான விஐபி நம்பர் கிடைப்பதில் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். இந்த சிக்கலை தீர்க்க டில்லி அரசு தற்போது புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது.

ஒவ்வொரு வகையான பேன்ஸி நம்பர்களுக்கு்ம ஒரு உட்சபட்ச தொகையை நிர்ணயத்துள்ளது. அதில் முதலில் யார் அந்த எண்ணை கோருகிறார்களோ அவர்களுக்கே எந்த எண்னை வழங்கவும் முடிவு செய்துள்ளது.

இதற்கான தனி வெப்சைட் போர்ட்டலையும் துவங்க டில்லி அரசு திட்டமிட்டுள்ளுது. இது வரும் மே மாதம் முதல் செல்பாட்டிற்கு வரும் எனவும் கூறப்படுகிறது.

அதன் படி மிகவும் பேன்ஸி நம்பராக கருதப்படும் "0001" என்ற எண்ணிற்கு ரூ 50,000 த்தை உட்சபட்ச தொகையாக அறிவித்துள்ளது. அதே போல் "0002"-"0009" வரையிலான நம்பர்களுக்கு ரூ 30,000 உட்சபட்ச தொகையாக அறிவித்துள்ளது.

மற்ற பேன்ஸி எண்களான 1111,9999,0100,0786 ஆகிய நம்பர்களுக்கு ரூ 15,000- ரூ20,000 உட்சபட்ச தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள நடைமுறைப்படி பைக் வாங்குபவர்கள் நம்பருக்கான ஏலத்தில் கலந்து கொண்டு ஏலத்தொகையை கோர வேண்டும். தற்போது அந்த நடை முறை மாற்றியமைக்கப்பட்டு முற்றிலும் டீலர்கள் மூலமே இந்த நம்பர்கள் வழங்கப்படும்.

பொதுவாக சாதாரண வாகனங்களை வாங்குபவர்கள் பேன்ஸி நம்பர்களை தேடுவதில்லை.மாறாக பெரிய விலையிலான பைக்குகளை வாங்குபவர்களே இது போன்ற எண்களை வேண்டுகின்றனர்.

இதை குறிவைத்து சிலர் நம்பர் பேன்ஸி நம்பர் பிளேட்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். அரசின் இந்த நடவடிக்கை மூலம் இது முற்றிலும் தவிர்க்கப்படலாம்.

அதே நேரத்தில் ஒரு நம்பர் பிளேட்டிற்காக ஒரு பைக்கின் விலையை டில்லி அரசு நிர்ணயத்திருப்பது. சாராதண பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Most Read Articles
English summary
Delhi Government To Offer VIP Numbers For 2-Wheelers, You Can Get 0001 For INR 50,000. Read in Tamil
Story first published: Tuesday, April 17, 2018, 16:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X