அரசு வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தும் அதிகாரிகளுக்கு ஜிபிஎஸ் டிவைஸ் மூலம் ஆப்பு வைத்த முதல்வர்

அரசு அதிகாரிகள் சிலர், அரசாங்க வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, அதிரடியான சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

By Arun

அரசு அதிகாரிகள் சிலர், அரசாங்க வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, அதிரடியான சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அரசு வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தும் அதிகாரிகளுக்கு ஜிபிஎஸ் டிவைஸ் மூலம் ஆப்பு வைத்த முதல்வர்

அரசு அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக, அரசு சார்பில் வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் நாட்டின் தலைநகர் டெல்லியில் ஒரு சில அதிகாரிகள், ஒன்றுக்கும் மேற்பட்ட அரசாங்க வாகனங்களை பயன்படுத்தி வருவதாக, தொடர்ச்சியாக புகார்கள் எழுந்து வருகின்றன.

அரசு வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தும் அதிகாரிகளுக்கு ஜிபிஎஸ் டிவைஸ் மூலம் ஆப்பு வைத்த முதல்வர்

எனவே ஒரு அரசு அதிகாரி, ஒரே ஒரு அரசாங்க வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லி மாநில அரசின், பொது நிர்வாக துறை (General Administration Department) இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அரசு வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தும் அதிகாரிகளுக்கு ஜிபிஎஸ் டிவைஸ் மூலம் ஆப்பு வைத்த முதல்வர்

ஒரு சில அரசு அதிகாரிகள், ஒன்றுக்கும் மேற்பட்ட கூடுதல் பொறுப்புகளை கவனித்து வருகின்றனர். இதை காரணம் காட்டி, அவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அரசாங்க வாகனங்களை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தும் அதிகாரிகளுக்கு ஜிபிஎஸ் டிவைஸ் மூலம் ஆப்பு வைத்த முதல்வர்

ஆனால் கூடுதல் பொறுப்புகளை கவனித்தாலும், ஒரு அதிகாரி ஒரு அரசாங்க வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே கூடுதலாக பயன்படுத்தி வந்த வாகனங்களை, அந்தந்த துறைகளின் தலைவர்களிடம் ஒப்படைக்கும்படி அதிகாரிகள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

அரசு வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தும் அதிகாரிகளுக்கு ஜிபிஎஸ் டிவைஸ் மூலம் ஆப்பு வைத்த முதல்வர்

இதுதவிர, அரசாங்க வாகனங்களை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநில அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையை சேர்ந்த ஒரு சில அதிகாரிகள்தான், கூடுதல் வாகனங்களை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

அரசு வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தும் அதிகாரிகளுக்கு ஜிபிஎஸ் டிவைஸ் மூலம் ஆப்பு வைத்த முதல்வர்

இந்த புகார் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் சென்றது. அதன் தொடர்ச்சியாகதான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலமாக வீண் செலவீனங்களை குறைக்க முடியும் எனவும் டெல்லி மாநில அரசு நம்புகிறது.

அரசு வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தும் அதிகாரிகளுக்கு ஜிபிஎஸ் டிவைஸ் மூலம் ஆப்பு வைத்த முதல்வர்

இதுதவிர, அரசாங்க வாகனங்கள் மற்றும் அரசு பயன்பாட்டிற்காக தனியாரிடம் இருந்து வாடகைக்கு பெறப்பட்ட வாகனங்கள் என அனைத்து வாகனங்களிலும், ஜிபிஎஸ் டிராக்கிங் டிவைஸ் பொருத்த நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து துறை தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தும் அதிகாரிகளுக்கு ஜிபிஎஸ் டிவைஸ் மூலம் ஆப்பு வைத்த முதல்வர்

வரும் செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து எந்த ஒரு வாகனமும், ஜிபிஎஸ் டிராக்கிங் டிவைஸ் இல்லாமல் இயங்க கூடாது என அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள், எங்கெங்கு செல்கின்றன? என்பதை கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Delhi Government's New Order Regarding Officer's Official Vehicles. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X