பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்தால் மானியம்.. இவ்ளோ ரூபாயை அள்ளி கொடுக்க போறாங்களா!
நாட்டை மாசற்ற நாடாக மாற்றும் முயற்சிகள் இந்தியா தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே டெல்லி அரசாங்கம் சூப்பரான திட்டத்தை முன்னெடுத்து இருக்கின்றது. அதாவது, பழைய வாகனங்களை தாமாக முன் வந்து ஸ்கிராப் செய்பவர்களுக்கு டெல்லி அரசாங்கம் மானியம் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிய வாகனத்தை வாங்க வரும்போது தங்களிடம் இருக்கும் பழைய வாகனத்தை ஸ்கிராப் செய்தால், அந்த வாகனத்திற்கு ரூ. 50 ஆயிரத்திற்கான மானியம் சாலை வரியில் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதற்கான வரைவுகளையே தற்போது டெல்லி போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தயார் செய்திருக்கின்றனர்.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகன பயன்பாட்டை குறைத்து மின்சார வாகனங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் விதமாக மானியம் திட்டம் அறிவிக்கப்பட்டது. பேட்டரியின் ஒவ்வொரு kWh திறனுக்கும் ரூ. 10 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட்டது. இதனால், நாட்டில் மின்சார வாகனங்களின் விலை மிகப் பெரிய அளவில் குறைந்துக் காணப்பட்டது.
இதுவும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட ஓர் திட்டமே ஆகும். இந்த நிலையிலேயே மாநில அரசு ஒன்று தாமாக முன் வந்து ஸ்கிராப் கொள்கைக்கு வலவூட்டும் விதமாக மானியம் திட்டத்தை டெல்லி அரசாங்கம் அறிமுகம் செய்திருக்கின்றது.

இதுபோன்று, ஸ்கிராப் செய்வதற்காக ஓர் மாநில அரசு மானியத்தை அறிவிப்பது இதுவே முதல் முறையாகும். இந்தியாவில் 10 ஆண்டுகள் பழைய டீசல் மற்றும் 15 ஆண்டுகள் பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆகையால், இந்த வகை வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இருப்பினும், இப்போதும் நாட்டில் 10 ஆண்டுகள் பழைய டீசல் வாகனங்களும், 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்களும் அதிகளவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றினால் காற்றின் மாசு தன்மைப் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே வாகனங்களை ஸ்கிராப் செய்யும் எண்ணத்தை மக்கள் மத்தியில் விதைக்க வேண்டும் என்கிற நோக்கில் ஸ்கிராப்பிங்கிற்கு மானியத்தை டெல்லி அரசு அறிவித்து இருக்கின்றது.

விரைவில் இந்த முன்னோடி திட்டத்தை மற்ற மாநில அரசுகள் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டெல்லியில் சாலையோரத்தில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய மற்றும் பயன்படுத்தப்படாத வாகனங்களை அகற்றும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் ஏகப்பட்ட வாகனங்களை டெல்லி அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
இந்த நிலையிலேயே டெல்லி அரசாங்கம் இந்த புதிய ஸ்கிராப்பிங் திட்டத்தையும் அறிவித்து டெல்லி வாசிகளை குஷிப்படுத்தி இருக்கின்றது. அதேவேளையில், இயக்கத்தில் இருக்கும் பழைய வாகனங்களுக்கு எதிராக மிக மிக கடுமையான நடவடிக்கைகளையும் அது எடுத்து வருகின்றது. அந்த வாகனங்களை பறிமுதல் செய்தல் மற்றும் அபராதம் விதித்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளையே அது முன்னெடுத்து வருகின்றது.

சென்னையிலும் இதுபோன்று பழைய வாகனங்களுக்கு எதிராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சாலையோரத்தில் கேட்பாரற்றுக் கிடக்கும் பழைய வாகனங்கள் மற்றும் பயன்பாடற்ற வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். இதன் அடிப்படையில் நூற்றுக் கணக்கான பழைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களே காற்று மாசுக்கான முக்கிய காரணி என ஒட்டுமொத்த உலக நாடுகளும் நம்புகின்றன. இதன் அடிப்படையிலேயே இப்போது டெல்லி அரசாங்கம் பழைய வாகனங்களுக்கு தன்னுடைய தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த 50 ஆயிரம் ரூபாய் மானியம் என்பது வாகனத்தின் தரம் மற்றும் வகையைப் பொருத்து சான்றாக வழங்கப்பட இருக்கின்றது. அதை புதிய வாகனத்தை வாங்கும்போது காண்பித்தால் சாலை வரியில் அதற்கான கட்டணம் ரத்து குறைக்கப்படும்.


Click it and Unblock the Notifications









