உங்க காருக்கு இந்த சர்டிபிகேட் மட்டும் இல்லேன்னா நோட்டீஸ் வீடுதேடி வரும், ரூ10,000 அபராதம் கட்ட ரெடியா இருங்க
இந்தியாவில் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கு வாகனங்களும் மிக முக்கியமான காரணங்களாக இருக்கின்றன.
Recommended Video
இந்த சூழலில், வாகனங்களுக்கு புகைச்சான்று வாங்காதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

டில்லியில் கடந்த பல ஆண்டுகளாகக் காற்று மாசு அதிகமாகி வருகிறது. குறிப்பாகக் குளிர் காலங்களில் எதிரில் வருபவர்களே தெரியாத அளவிற்குப் புகை மூட்டம் அதிகமாக இருக்கிறது. இதற்கு டில்லி மாநகரில் இயங்கும் வாகனங்களும் முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது. இதற்காக பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் வாகனங்களில் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்த பாரத் மாசுக் கட்டுப்பாட்டு அதன்படி ஒரு வாகனம் எவ்வளவு புகையை வெளியிட வேண்டும் என டெஸ்ட் செய்யப்பட்ட பின்பே வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்படும். இந்நிலையில் வாகனம் நாளாக நாளாக அதன் புகை வெளியிடுவது அதிகமாகிவிடும். அதனால் குறிப்பிட்ட ஆண்டிற்குப் பிறகு புகை சான்று எடுக்க வேண்டும்.

இது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கும் பொருந்தும் என்றாலும். அதன் டில்லியில் வாகனங்களுக்கு இந்த சான்று மிக முக்கியமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டில்லி போக்குவரத்துத் துறை தற்போது டில்லியில் புகை சான்று இல்லாத வாகனங்களுக்கு ரூ10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புகை சான்று இல்லாத வாகனம் சாலையில் செயல்படுவதைத் தடுக்கவே இந்த அதிகமான அபராதம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டில்லி போக்குவரத்துத் துறை தற்போது டில்லியில் புகை சான்று இல்லாத வாகனங்களுக்கு ரூ10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புகை சான்று இல்லாத வாகனம் சாலையில் செயல்படுவதைத் தடுக்கவே இந்த அதிகமான அபராதம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல தற்போது டில்லி அரசு போக்குவரத்துறை புகை சான்று இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது. அரசிடம் உள்ள தரவுகளின்படி டில்லியில் மொத்தம் 17 லட்சம் வாகனங்கள் புகை சான்று இல்லாமல் செயல்பாட்டில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதில் 13 லட்சதற்திற்கும் மேல் இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 லட்சத்திற்கும் அதிகமாகப் பயணிகள் கார்கள் இருக்கிறது.

இந்நிலையில் இந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்க டில்லி போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. மேலும் முறையாகப் புகை சான்று இல்லாமல் வாகனத்தைப் பயன்படுத்தினால் ரூ10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் பிஎஸ்1.2,3,4 மற்றும் சிஎன்ஜி, எல்பிஜி வாகனங்களுக்கு இது பொருந்தும். பிஎஸ்6 வாகனங்களுக்கான சான்று தற்போது முடிவடைந்திருக்காது என்பதால் இதற்குப் புகை சான்று கட்டாயமில்லை.

வாகனத்தின் புகை சான்று என்பது கார்பன் மோனாக்ஸைவு மற்றும் கார்பன் டைஆக்ஸைடு, அளவுக்கான கட்டுப்பாடுகள் இருக்கிறது. தற்போது டில்லியில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் அதிகாரப்பூர்வமாக 60 லட்சத்திற்கும் அதிகமான புகை சான்றுடன் செயல்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








