ஓலா, உபேர்களுக்கு முதல்வர் வைத்த செம ஆப்பு! இனி லோக்கல் பஸ்களிலும் சீட்களை ஆப் மூலம் புக் பண்ண புது திட்டம்

ஓலா, உபேர் எனத் தனியார் நிறுவன கால்டாக்ஸிகளை மக்கள் அதிகமாகப் பயன்படுத்தி வரும் சூழ்நிலையில் தற்போது இதே மாடலில் தனியார் பேருந்துகளை ஆப் மாடலில் இயக்க அரசு புது திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஓலா, உபேர்களுக்கு முதல்வர் வைத்த செம ஆப்பு! இனி லோக்கல் பஸ்களிலும் சீட்களை ஆப் மூலம் புக் பண்ண புது திட்டம்

இன்று இந்தியா முழுவதும் ஆப் மூலம் கேப்களை புக் செய்யும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது. நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து பிக்கப் செய்வது, நீங்கள் செல்ல வேண்டிய இடம் வரை சென்று டிராப் செய்வது, சொகுசான பயணம், எனப் பல வசதிகள் இருப்பதால் மக்கள் இந்த ரக போக்குவரத்தை அதிகம் விரும்பத் துவங்கிவிட்டனர். இந்த சந்தையில் தற்போது இந்தியாவில் ஓலா மற்றும் உபேர் ஆகிய இரண்டு நிறுவனங்கள் தான் பெரிய அளவில் இந்த தொழிலைச் செய்து வருகிறது.

ஓலா, உபேர்களுக்கு முதல்வர் வைத்த செம ஆப்பு! இனி லோக்கல் பஸ்களிலும் சீட்களை ஆப் மூலம் புக் பண்ண புது திட்டம்

இந்நிலையில் டில்லியில் கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் காற்று மாசு முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் போக்குவரத்து தான் எனக் கண்டறியப்பட்டது. போக்குவரத்தைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. டில்லியைப் பொருத்தவரை மிக முக்கியமான பிரச்சனை மக்கள் பலர் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தத் தயங்குகின்றனர்.

ஓலா, உபேர்களுக்கு முதல்வர் வைத்த செம ஆப்பு! இனி லோக்கல் பஸ்களிலும் சீட்களை ஆப் மூலம் புக் பண்ண புது திட்டம்

பஸ்களில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும். மற்றவர்கள் நின்று கொண்டும், கூட்டம் இருந்தால் படிக்கட்டுகளில் நின்று கொண்டும் பயணிக்கவேண்டியது இருப்பதால் பலர் பொது போக்குவரத்தைத் தவிர்த்துவிட்டுச் செலவானாலும் பரவாயில்லை என்று சொந்த வாகனம் அல்லது கேப்களை பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். இதனால் காற்று மாசு மிகப்பெரிய அளவில் கணிசமாக உயர்ந்துள்ளது.

ஓலா, உபேர்களுக்கு முதல்வர் வைத்த செம ஆப்பு! இனி லோக்கல் பஸ்களிலும் சீட்களை ஆப் மூலம் புக் பண்ண புது திட்டம்

இவர்களை மீண்டும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வைக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதில் ஒரு முயற்சியாக தற்போது பஸ் போக்குவரத்து சிஸ்டத்தையும், ஆப் மூலம் இயங்கும் கேப் சிஸ்டத்தையும் இணைத்து ஒரு புதிய போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் பலர் போக்குவரத்திற்காகச் சொந்த வாகனங்கள் அல்லது கேப்கள் இல்லாமல் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தத் துவங்குவார்கள் என்ற நோக்கில் இதைத் திட்டமிட்டுள்ளனர்.

ஓலா, உபேர்களுக்கு முதல்வர் வைத்த செம ஆப்பு! இனி லோக்கல் பஸ்களிலும் சீட்களை ஆப் மூலம் புக் பண்ண புது திட்டம்

இதன்படி தனியார் பஸ் வைத்திருப்பவர்கள் இந்த ஆப் பில் இணைந்து கொள்ளலாம். இந்த ஆப்பில் இணைந்தவர்களுக்குக் குறிப்பிட்ட ரூட்களில் பஸ்களை இயக்க அனுமதிக்கப்படுவர். அவர்கள் தங்கள் பஸ்களில் ஜிபிஎஸ், பேனிக் பட்டன் உள்ளிட்ட வசதிகளைச் செய்ய வேண்டும். இப்பொழுது பஸ் அந்த வழியாக இயங்கும் போது மக்கள் அரசு வழங்கிய ஆப் மூலம் இந்த பஸ்களை புக் செய்து கொள்ளலாம்.

ஓலா, உபேர்களுக்கு முதல்வர் வைத்த செம ஆப்பு! இனி லோக்கல் பஸ்களிலும் சீட்களை ஆப் மூலம் புக் பண்ண புது திட்டம்

அதாவது மக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து செல்ல வேண்டிய இடத்தை மார்க் செய்தால் அந்த இடத்திற்குப் பயணிக்கும் பஸ்களில் பட்டியல் காண்பிக்கும் அவர்கள் அந்த பஸ்களை தேர்வு செய்து அதில் சீட்களை புக் செய்து கொள்ளலாம். அதற்கான கட்டணத்தையும் ஆப் மூலம் செலுத்தலாம். கிட்டத்தட்ட தற்போது ஓலா, உபேர் ஆப்களில் கேப் புக் செய்வது போலத் தான் ஷேர் ரைடிங்காக இது பயன்படும். நீங்கள் பயணிக்கும் பஸ்களில் மற்ற சீட்களை மற்றவர்கள் புக் செய்வார்கள்.

ஓலா, உபேர்களுக்கு முதல்வர் வைத்த செம ஆப்பு! இனி லோக்கல் பஸ்களிலும் சீட்களை ஆப் மூலம் புக் பண்ண புது திட்டம்

ஆனால் கேப்பிற்கும், இந்த பஸ் சேவைக்கும் உள்ள வித்தியாசம் கேப் உங்கள் வீட்டுவாசலுக்கே வந்து பிக்கப் செய்யும். ஆனால் இந்த பஸ்களை பிடிக்க நீங்கள் அருகில் உள்ள நிர்ணயம் செய்யப்பட்ட பஸ் ஸ்டாப்பிற்கு செல்ல வேண்டும். நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கிக் கொள்ள வேண்டும்.

ஓலா, உபேர்களுக்கு முதல்வர் வைத்த செம ஆப்பு! இனி லோக்கல் பஸ்களிலும் சீட்களை ஆப் மூலம் புக் பண்ண புது திட்டம்

இந்த சேவையை அறிமுகம் செய்த டில்லி முதல்வர் கெஜ்ரிஅகர்வால் இது குறித்து தற்போது மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளார். மக்கள் கருத்திற்கு ஏற்பட இந்த திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு விரைவில் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த திட்டத்தில் பிஎஸ் 6 பஸ்கள், ஏசி சிஎன்ஜி அல்லது எலெக்ட்ரிக் பஸ்கள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுகிறது.

ஓலா, உபேர்களுக்கு முதல்வர் வைத்த செம ஆப்பு! இனி லோக்கல் பஸ்களிலும் சீட்களை ஆப் மூலம் புக் பண்ண புது திட்டம்

இதுவே 2024 ஜனவரி 1ம் தேதி முதல் இந்த திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் பஸ்கள் மட்டுமே இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இயங்கும் பஸ்களில் ஜிபிஎஸ், லைவ் லோகஷன் டிராக்கிங், சிசிடிவி, பேனிக் பட்டன், டிஜிட்டல் பேமென்ட், ஆகிய வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற தகவலையும் தற்போது உள்ள திட்டத்தின் தெரிவித்துள்ளது.

ஓலா, உபேர்களுக்கு முதல்வர் வைத்த செம ஆப்பு! இனி லோக்கல் பஸ்களிலும் சீட்களை ஆப் மூலம் புக் பண்ண புது திட்டம்

இந்த சேவையை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்குத் தனியாக லைசென்ஸ் வழங்கப்படும் என்றும், அவர்கள் அடுத்த 90 நாட்களுக்குள் 50 பிரிமியம் பஸ்களை இயங்க வேண்டும் என்றும், அவர்களுக்கான ரூட்கள் வழங்கப்படும் என்றும் இந்த திட்டத்தின் வரைவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா, உபேர்களுக்கு முதல்வர் வைத்த செம ஆப்பு! இனி லோக்கல் பஸ்களிலும் சீட்களை ஆப் மூலம் புக் பண்ண புது திட்டம்

இந்த திட்டத்தைப் பொருத்தவரை பொதுமக்கள் பலர் சொகுசான பயணத்தை விரும்பி தான் பொது போக்குவரத்துகளைத் தவிர்க்கின்றனர். இதனால் அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய அரசே பிரிமியம் பஸ்களை அறிமுகப்படுத்தினால் மக்கள் மீண்டும் பொது போக்குவரத்திற்கு வருவார்கள். இதனால் காற்றுமாசு பெரும் அளவிற்குக் குறையும் என எதிர்பார்க்கின்றனர். இந்த சேவை தற்போது டில்லியில் மட்டுமே உள்ளது. இந்த சேவை சென்னையிலும் வந்தால் எப்படி இருக்கும் உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Delhi govt seeks public feedback for app based bus service
Story first published: Thursday, August 4, 2022, 17:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X