இனி அபராத செல்லாண் கிடையாது - ஸ்பாட் பைன் மட்டும்தான்... விதிமீறல்களை குறைக்க தலைநகரில் அதிரடி..

போக்குவரத்து விதிமீறல்களைக் குறைப்பதற்காக அதிரடி விதிமுறைகள் தலைநகரில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இனி அபராத செல்லாண் கிடையாது - ஸ்பாட் பைன் மட்டும்தான்... விதிமீறல்களை குறைக்க தலைநகரில் அதிரடி..

சமீபகாலமாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸைக் காட்டிலும் அதிக உயிர்களை பலி வாங்கி வருகிறது இந்த வாகன விபத்து சம்பவங்கள். குறிப்பாக, ஒவ்வொரு வருடம் 1.50 லட்சத்திற்கும் அதிகமான உயிர்களை அது உலகை விட்டு பிரித்து வருகின்றது. ஆகையால், அவற்றை குறைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

இனி அபராத செல்லாண் கிடையாது - ஸ்பாட் பைன் மட்டும்தான்... விதிமீறல்களை குறைக்க தலைநகரில் அதிரடி..

இருப்பினும், போக்குவரத்து விதிமீறல்களும், அவற்றினால் வாகன விபத்துகளும் குறைந்தபாடில்லை. ஆகையால், ஏற்கனவே அமலிலும் இருக்கும் போக்குவரத்து விதிகளில் சில மாற்றங்களை அரசு அவ்வப்போது செய்து வருகின்றது.

அந்தவகையில், இனி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராத செல்லாண்களை வழங்குவதற்கு பதிலாக உடனடி அபராதங்களை வசூலிப்பதற்கான புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

இனி அபராத செல்லாண் கிடையாது - ஸ்பாட் பைன் மட்டும்தான்... விதிமீறல்களை குறைக்க தலைநகரில் அதிரடி..

இதுமட்டுமின்றி போக்குவரத்து போலீஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குகின்ற வகையிலான பல்வேறு மாற்றங்கள் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்படும் இடங்களிலேயே விதிமீறல்வாதிகளிடம் இருந்து உச்சபட்ச அபராதங்களை வசூலிக்கின்ற வகையிலான திருத்தம் அதில் செய்யப்பட்டுள்ளது.

இனி அபராத செல்லாண் கிடையாது - ஸ்பாட் பைன் மட்டும்தான்... விதிமீறல்களை குறைக்க தலைநகரில் அதிரடி..

இந்த அதிரடி மாற்றத்தை புது டெல்லி அரசு மேற்கொண்டிருக்கின்றது. இதுகுறித்த தகவலை ஈடி ஆட்டோ தளம் வெளியிட்டுள்ளது. அது வெளியிட்டுள்ள தகவலின்படி, "டெல்லியில் நீதிமன்ற பற்றாக்குறையால் தினந்தோறும் வழங்கப்படும் அபராத செல்லாண்களின் தேக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனை மட்படுத்தும் விதமாகவே டெல்லி அரசு போக்குவரத்து காவல்துறையினருக்கு இத்தகைய அதிகாரத்தை வழங்கியிருப்பதாக" கூறப்பட்டுள்ளது.

இனி அபராத செல்லாண் கிடையாது - ஸ்பாட் பைன் மட்டும்தான்... விதிமீறல்களை குறைக்க தலைநகரில் அதிரடி..

குறிப்பாக, டெல்லி போலீஸார் வாரம் ஒன்றுக்கு 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையிலான போக்குவரத்து அபராத செல்லாண்களை வழங்கி வருகின்றனர். இந்த செல்லாண்களின் அபராதத் தொகைகளை வசூலிப்பதில் நீதிமன்றங்களிப்பும் பெருமளிவில் இருக்கின்றது. ஆகையால், பல லட்சம் லட்சம் அபராத செல்லாண்கள் நீதிமன்ற பற்றாக்குறையால் தேக்கமடைந்திருக்கின்றது. இதனை டெல்லி அரசின் புதிய சற்றே சீர் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இனி அபராத செல்லாண் கிடையாது - ஸ்பாட் பைன் மட்டும்தான்... விதிமீறல்களை குறைக்க தலைநகரில் அதிரடி..

ஸ்பாட் ஃபைன் திட்டம் செயல்பாட்டில் வந்திருப்பதால் டெல்லி போலீஸார் அதிவேக திறனுடைய கேமிராக்களைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர். மேலும், தற்போது அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களைக் கண்டறிய மட்டுமே அந்த கேமிராக்களை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இனி அபராத செல்லாண் கிடையாது - ஸ்பாட் பைன் மட்டும்தான்... விதிமீறல்களை குறைக்க தலைநகரில் அதிரடி..

மேலும், குறிப்பிட்ட விதிமீறல்களுக்கு உடனடி அபராதங்களை வசூலிக்க முடியாத சூழ்நிலையில் மட்டும் அபராத செல்லாண்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க இருக்கின்றனர்.

தொடர்ந்து, உடனடி அபராத மாற்றத்தைப் போலவே சில விதிமீறல்களுக்கான அபராத் தொகையிலும் டெல்லி மாற்றத்தைச் செய்திருக்கின்றது.

இனி அபராத செல்லாண் கிடையாது - ஸ்பாட் பைன் மட்டும்தான்... விதிமீறல்களை குறைக்க தலைநகரில் அதிரடி..

அந்தவகையில், அதிக வேகத்திற்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட இருக்கின்றுது. இது தனியார் வாகனத்திற்கான அபராதம் ஆகும். இதுவே, வணிக ரீதியாக இயங்கும் வாகனங்கள் அதிக வேகத்தில் சென்றால் அபராதமாக ரூ. 4 ஆயிரம் வரை வசூலிக்கப்பட இருக்கின்றது.

இனி அபராத செல்லாண் கிடையாது - ஸ்பாட் பைன் மட்டும்தான்... விதிமீறல்களை குறைக்க தலைநகரில் அதிரடி..

இதேபோன்று, புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, சிக்னலை மீறி செல்லும் வாகனத்திற்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட இருக்கின்றது. இது தனியார் மற்றும் வணிக ரீதியலாக இயங்கும் இரு வாகனங்களுக்கும் பொருந்தும். இதனைக் கட்டத் தவறினால் ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என டெல்லி போலீஸ் எச்சரித்திருக்கின்றது.

இனி அபராத செல்லாண் கிடையாது - ஸ்பாட் பைன் மட்டும்தான்... விதிமீறல்களை குறைக்க தலைநகரில் அதிரடி..

தொடர்ந்து, ஆபத்தாக வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிக்கு ரூ. 5 ஆயிரம் அபராத விதிக்கப்படும். இதனை தொடர்ச்சியாக ஒரே வாகன ஓட்டியோ அல்லது ஒரே வாகனம் ஈடுபடும் ரூ. 10 அபராதம் விதிக்கப்படும். இதனைக் கட்ட தவறினால் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். இது முதல் முறை விதிமீறலில் ஈடுபடும்போது மட்டுமே ஓராண்டு சிறை தண்டனை ஆகும். இரண்டாம் முறை விதிமீறலில் ஈடுபடுவீர்களானால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

இனி அபராத செல்லாண் கிடையாது - ஸ்பாட் பைன் மட்டும்தான்... விதிமீறல்களை குறைக்க தலைநகரில் அதிரடி..

இதேபோன்று, மது போதையில் வாகனத்தை இயக்கினால் (டிரிங்க் அண்ட் டிரைவ்) அதிகபட்சமாக ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட இருக்கின்றது. தொடர்ந்து, இந்த அபராதத்தைக் கட்ட தவறினால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்கக்கூடும்.

மேலும், இதே தவறை மீண்டும் மீண்டும் அதே நபர் ஈடுபடுவாரானால் அவருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும்.

இனி அபராத செல்லாண் கிடையாது - ஸ்பாட் பைன் மட்டும்தான்... விதிமீறல்களை குறைக்க தலைநகரில் அதிரடி..

இவ்வாறு சிவப்பு சமிக்ஞையை மீறுதல், வாகனத்தை இயக்கும்போது செல்போன் பயன்படுத்துதல், விபத்துகளை ஏற்படுத்துதள், பொது சாலையில் பந்தயத்தில் ஈடுபடுவது அல்லது ஸ்டண்ட் செய்வது, காப்பீடு இல்லாமல் வாகனத்தை இயக்குவது மற்றும் பார்க்கிங் அல்லாத பகுதிகளில் பார்க்கிங் செய்வது என அனைத்து விதிமீறல்களுக்குமான அபராதங்கள் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கின்றன.

இனி அபராத செல்லாண் கிடையாது - ஸ்பாட் பைன் மட்டும்தான்... விதிமீறல்களை குறைக்க தலைநகரில் அதிரடி..

இந்த புதிய அபராத கொள்கை வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சத்தில் உரைந்திருக்கின்றனர். ஆகையால், டெல்லி வாசிகள் வாகனத்தை இயக்கும்போது மிக கவனத்துடன் இயக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு இல்லை எனில் கையில் ஆயரக் கணக்கான ரூபாயை அபராத செலுத்த தயாராக இருக்க வேண்டும். அப்படியுமில்லை என்றால் சிறைத் தண்டனை அனுபவிக்க தயாராக இருக்க வேண்டும்.

இனி அபராத செல்லாண் கிடையாது - ஸ்பாட் பைன் மட்டும்தான்... விதிமீறல்களை குறைக்க தலைநகரில் அதிரடி..

டெல்லி அரசின் இந்த அதிரடி நடவடிக்கை பலரின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்திருக்கின்றது. அதேசமயம், விரைவில் தலைநகர் டெல்லியில் போக்குவரத்து விதிமீறல்கள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கேற்பவே இந்த புதிய போக்குவரத்து வாகன சட்டம் அமைந்திருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Delhi Govt Will Allow Cops To Collect Spot Fines For Traffic Violence. Read In Tamil.
Story first published: Monday, March 16, 2020, 17:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X