டெல்லி - டெல்லி - ஹரியானா இடையே பாட் டாக்சி திட்டம் சூடுபிடித்தது

Written By:

டெல்லி - ஹரியானா இடையில் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் நாட்டின் முதல் பாட் கார் டாக்சி சேவை அறிமுகமாகிறது. இதற்கான, இறுதி முடிவு நேற்று நடந்த மத்திய அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் எட்டப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தை நிறைவேற்றி தருவதற்கு விருப்பம் தெரிவித்த நிறுவனங்களில் 4 வெளிநாட்டு நிறுவனங்கள் இறுதி கட்ட பரிசீலனைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.

அடுத்த ஓர் ஆண்டில் இந்த பாட் கார் டாக்சி சேவை பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு எழுந்துள்ளது. இந்த திட்டம் சென்னை, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் பெருநகரங்களுக்கும் வரும் வாய்ப்பு இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கூடுதல் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

 டெல்லி - ஹரியானா இடையே பாட் டாக்சி திட்டம் சூடுபிடித்தது!

ஓட்டுனர் இல்லாமல் பிரத்யேக வழித்தடத்தில் இயங்கும் இந்த பாட் கார் டாக்சி திட்டத்தை டிராம் போக்குவரத்து விதிகளின்படி நிறைவேற்றுவதா அல்லது மத்திய நெடுஞ்சாலை அமைச்சக வரையறைகளின்படி நிறைவேற்றுவதா என்ற குழப்பம் இருந்தது.

 டெல்லி - ஹரியானா இடையே பாட் டாக்சி திட்டம் சூடுபிடித்தது!

இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரியும், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவும் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். முடிவில் மத்திய நெடுஞ்சாலை திட்ட வரையறைகளின்படி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 டெல்லி - ஹரியானா இடையே பாட் டாக்சி திட்டம் சூடுபிடித்தது!

முதல்கட்டமாக அமைக்கப்படும் பாட் கார் டாக்சி கட்டுமான திட்டத்தை நிறைவேற்றி தருவதற்கு உலகளாவிய அளவில் டென்டர் கோரப்பட்டிருந்தது. ஏராளமான நிறுவனங்கள் இந்த திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்து மனு செய்திருந்தன.

 டெல்லி - ஹரியானா இடையே பாட் டாக்சி திட்டம் சூடுபிடித்தது!

அதில், பரிசீலனைக்கு பிறகு லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் பாட் கார் டாக்சியை கட்டமைத்த நிறுவனம் உள்பட அமெரிக்கா, போலந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 வெளி நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இறுதி கட்ட போட்டியில் உள்ளன.

 டெல்லி - ஹரியானா இடையே பாட் டாக்சி திட்டம் சூடுபிடித்தது!

ரூ.800 கோடி முதலீட்டில் 12.3 கிமீ தூரத்திற்கு முதல்கட்ட பாட் கார் டாக்சிக்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. டெல்லி - ஹரியான எல்லையில் தேசிய நெடுஞ்சாலை எண் 8ஐ இணைக்கும் பகுதியில் உள்ள ஆம்பியன்ஸ் மால் வணிக வளாகத்திலிருந்து, ராஜீவ் சவுக், இப்கோ மற்றும் சோனா ரோடு வழியாக பாதுஷாபூர் வரையில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது.

 டெல்லி - ஹரியானா இடையே பாட் டாக்சி திட்டம் சூடுபிடித்தது!

இந்த வழித்தடத்தில் பயணிகள் ஏறி, இறங்குவதற்கு வசதியாக 13 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. மொத்தமாக, 1,100 ஓட்டுனரில்லாமல் இயங்கும் பாட் கார்கள் ஒரு நிமிட இடைவெளியில் இயக்கப்படும். முதல் நிலையத்திலிருந்து 12வது நிலையம் வரை எந்தவொரு தடங்கலும், தாமதமும் இல்லாமல் இந்த பாட் கார்கள் பயணிக்கும்.

 டெல்லி - ஹரியானா இடையே பாட் டாக்சி திட்டம் சூடுபிடித்தது!

ஒவ்வொரு பாட் காரிலும் 5 பேர் பயணிக்கலாம். தனியாக ஒரு பாட் காரை முன்பதிவு செய்து செல்ல முடியும். எனவே, தாமதம் இல்லாமல் செல்வதற்கு சிறந்த போக்குவரத்து சாதனமாக இருக்கும்.

 டெல்லி - ஹரியானா இடையே பாட் டாக்சி திட்டம் சூடுபிடித்தது!

முதல்கட்ட திட்டத்தின்படி டெல்லியுள்ள தவுலா கவுன் பகுதியிலிருந்து ஹரியானா மாநிலம் மானேசர் வரை 70 கிமீ தூரத்திற்கு இந்த பாட் கார் டாக்சியை இயக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் ரூ.4,000 கோடி முதலீட்டில் அமைக்கப்படும். இதன்மூலமாக, சாலைகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 டெல்லி - ஹரியானா இடையே பாட் டாக்சி திட்டம் சூடுபிடித்தது!

அடுத்த ஓர் ஆண்டில் இந்த பாட் டாக்சியின் முதல் பகுதி கட்டமைப்பு பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழித்தடத்திற்கான நிலம் ஏற்கனவே அரசு வசம் இருப்பதால், திட்டத்தை துரித கதியில் நிறைவேற்றும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

 டெல்லி - ஹரியானா இடையே பாட் டாக்சி திட்டம் சூடுபிடித்தது!

இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், அடுத்ததாக சென்னை, பெங்களூர், மும்பை போன்ற போக்குவரத்து நெரிசலில் விழி பிதுங்கி நிற்கும் நகரங்களுக்கும் எளிதாக வரும் வாய்ப்பு உள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Delhi-Haryana pod taxi project to commence soon. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos