சேவை தரத்தில் உலகின் நம்பர்-1 இடத்தை பிடித்து அசத்திய டெல்லி விமான நிலையம்!

By Saravana

தரமான சேவை வழங்குவதில் உலகின் நம்பர்-1 விமான நிலையம் என்ற பெருமையை இரண்டாவது முறையாக பெற்றிருக்கிறது நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்.

தனியார் மயமாக்கப்பட்ட பின்னர் இந்த விமான நிலையம் சேவை தரத்தில், வெகு விரைவாக நம்பர்-1 இடத்தை பிடித்ததோடு, அதனை இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

பிரிவு

பிரிவு

ஆண்டுக்கு 25 மில்லியன் முதல் 40 மில்லியன் பயணிகளை கையாளும் விமான நிலையங்களின் பிரிவில் டெல்லிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

ஆய்வு

ஆய்வு

ஆண்டுதோறும் விமான நிலையங்களின் சேவை தரம் குறித்து சர்வதேச விமான நிலைய கவுன்சில் கண்காணித்து புள்ளிகளை வழங்கி மதிப்பீடு செய்கிறது. இதில், டெல்லி விமான நிலையம் பிடித்துள்ளது.

 அதிகபட்ச புள்ளிகள்

அதிகபட்ச புள்ளிகள்

விமான நிலையங்களின் சேவை தரத்திற்கு தக்கவாறு ஒன்று முதல் அதிகபட்சமாக 5 புள்ளிகள் வரை வழங்கப்படுகிறது. இதில், டெல்லி 4.96 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.

தனியார் மயம்

தனியார் மயம்

கடந்த 2007ம் ஆண்டில் டெல்லி விமான நிலையம் தனியார் மயமாக்கப்பட்டது. அப்போது சேவை தரத்தில் 101வது இடத்தில் இருந்தது.

வெகு விரைவாக...

வெகு விரைவாக...

தனியார் மயமாக்கப்பட்ட பின்னர், கடந்த 2011ம் ஆண்டில் சேவை தரத்தில் அதிரடியாக 2வது இடத்துக்கு முன்னேறியது. அதைத்தொடர்ந்து, 2013ம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு 2வது இடத்தை தக்க வைத்தது.

முதலிடம்

முதலிடம்

கடந்த 2014ம் ஆண்டு தரமான சேவை வழங்கும் உலகின் சிறந்த விமான நிலையங்களின் பட்டியில் முதலிடத்தை பிடித்தது. அதற்கடுத்து, 2015ம் ஆண்டிலும் முதலிடத்தை தக்க வைத்து அசத்தியிருக்கிறது.

இதர விருதுகள்...

இதர விருதுகள்...

25-40 மில்லியன் பயணிகளை கையாளும் விமான நிலையங்களின் பிரிவில் இரண்டாவது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்தது மட்டுமின்றி, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சிறந்த இடவசதி கொண்டதாகவும், இந்த பிராந்தியத்தின் இரண்டாவது சிறந்த விமான நிலையம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

பரப்பளவு

பரப்பளவு

டெல்லி ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கு பகுதியில் 15 கிமீ தொலைவில் பாலம் என்ற இடத்தில் இந்த விமான நிலையம் 5,106 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏர் இந்தியா, ஏர்ஏசியா இந்தியா, கோ ஏர், இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா போன்ற விமான நிறுவனங்கள் இந்த விமான நிலையத்தை கேந்திரமாக கொண்டு செயல்படுகின்றன. இதுதவிர, ஏராளமான வெளிநாட்டு விமான நிறுவனங்களும் டெல்லிக்கு விமான சேவையை வழங்கி வருகின்றன.

பரப்பரப்பானது...

பரப்பரப்பானது...

கடந்த 2009ம் ஆண்டிலிருந்து அதிக போக்குவரத்து கொண்ட மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்ற பெருமையை டெல்லி விமான நிலையம் தக்க வைத்து வருகிறது. இந்த விமான நிலையத்தின் 3வது முனையம், உலகிலேயே 8வது பெரிய விமான நிலைய முனையம் என்பது குறிப்பிடத்தக்கது.

பயணிகள்

பயணிகள்

ஆண்டுக்கு 34 மில்லியன் பயணிகளை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் கையாள்கிறது. ஆண்டுக்கு சராசரியாக 3,22,747 விமானங்கள் வந்து செல்கின்றன. இந்த விமான நிலையத்தில் மூன்று விமான ஓடுபாதைகள் அமைந்துள்ளன.

தனியார் வசம்

தனியார் வசம்

கடந்த 2007ம் ஆண்டு முதல் ஜிஎம்ஆர் நிறுவனத்தின் கீழ் சுயசார்பு அமைப்பாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 2, 2016, 10:51 [IST]
English summary
Delhi’s Indira Gandhi International Airport has retained the world’s number 1 position for the second consecutive year in 25-40 Million Passengers Per Annum (MPPA) category.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+