டெல்லி- கொல்கத்தா இடையே புல்லட் ரயில்... அடுத்த திட்டத்தை கையிலெடுத்த மத்திய அரசு!

Written By:

மும்பை- ஆமதாபாத் நகரங்களுக்கு இடையில் நாட்டின் முதலாவது புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படுவது அறிந்ததே. இதைத்தொடர்ந்து, டெல்லி- கொல்கத்தா இடையே புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான திட்டத்தை இந்திய ரயில்வே துறை கையிலெடுத்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலமாக, டெல்லி- கொல்கத்தா மட்டுமின்றி, வட இந்தியாவின் பல முக்கிய நகரங்கள் புல்லட் ரயில் இணைப்பை பெறும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஆய்வுப் பணிகள்

ஆய்வுப் பணிகள்

டெல்லி- கொல்கத்தா இடையிலான புல்லட் ரயில் திட்டம் குறித்து ஸ்பெயின் நாட்டு நிறுவனம் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளது. மேலும், அந்த நிறுவனம் அளித்திருக்கும் துவக்கநிலை புள்ளிவிபரங்கள் உற்சாகத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

வேகம்

வேகம்

இந்த வழித்தடத்தில் மணிக்கு 300 கிமீ முதல் 350 கிமீ வேகத்தில் புல்லட் ரயிலை இயக்குவதற்கான திட்டத்துடன் அந்த புள்ளிவிபரங்கள் ரயில்வே துறைக்கு தரப்பட்டிருக்கின்றன.

மிகப்பெரிய பயன்

மிகப்பெரிய பயன்

டெல்லி- கொல்கத்தாவை இணைப்பது மட்டுமின்றி, அந்த வழித்தடத்தில் அமைந்திருக்கும் வட நாட்டின் மிக முக்கிய நகரங்களையும் இணைக்கும் வாய்ப்பும் ஏற்படும். அதாவது, ஆக்ரா, லக்ணோ, வாரணாசி, பாட்னா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களையும் இந்த வழித்தடத்தின் மூலமாக புல்லட் ரயில் சேவையை பெறும்.

பயண நேரம்

பயண நேரம்

அதில், முதன்மையானது, டெல்லி- கொல்கத்தா இடையிலான 1,513 கிமீ தூரத்தை கடப்பதற்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் 17 மணி நேரம் வரை எடுத்துக் கொள்கிறது. அதுவே, புல்லட் ரயில் பாதை அமைத்தால், வெறும் 5 மணிநேரத்திற்குள்ளாகவே இரண்டு நகரங்களுக்கு இடையிலான தூரத்தை கடந்துவிடும்.

இதர நகரங்கள்

இதர நகரங்கள்

டெல்லி- லக்ணோவை 1 மணி 45 நிமிடங்களிலும், டெல்லி- வாரணாசியை 2 மணி 45 நிமிடங்களிலும் கடந்துவிட முடியும். இது சுற்றுலாத் துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியை பன்மடங்கு அதிகரிக்கச் செய்யும்.

தங்க நாற்கர ரயில் பாதை

தங்க நாற்கர ரயில் பாதை

தங்க நாற்கர சாலை திட்டம் போலவே, டெல்லி, கொல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய நகரங்களை இணைப்பதற்கான தங்க நாற்கர ரயில் பாதை திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதன்படி, அடுத்த தசாப்தத்தில், நாட்டின் முக்கிய நகரங்கள் புல்லட் ரயில் இணைப்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Delhi-Kolkata bullet train journey in less than 5 hours.
Story first published: Saturday, June 25, 2016, 15:55 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark