புல்லட் ரயில்: ம்ஹூம்... நம்ம பக்கம் இப்போதைக்கு வாய்ப்பே இல்லை?!!

Written By:

நம் நாட்டின் முதலாவது புல்லட் ரயில் மும்பை- ஆமதாபாத் இடையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரு நகரங்களுக்கு இடையிலான புல்லட் ரயில் வழித்தடத்தை அமைப்பதற்கான பணிகள் வரும் செப்டம்பரில் துவங்கப்பட இருக்கிறது.

 புல்லட் ரயில்: ம்ஹூம்... நம்ம பக்கம் இப்போதைக்கு வாய்ப்பே இல்லை?!!

இரண்டாவதாக, மும்பை- நாக்பூர் இடையில் புல்லட் ரயில் இயக்குவதற்கான திட்டம் ஒப்புதல் பெறுவதற்கான இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து, டெல்லி- கோல்கட்டா இடையிலான புல்லட் ரயில் திட்டமும் உயிர் நடைமுறைக்கு வரும் சாத்தியங்கள் எழுந்துள்ளன.

 புல்லட் ரயில்: ம்ஹூம்... நம்ம பக்கம் இப்போதைக்கு வாய்ப்பே இல்லை?!!

டெல்லி- கோல்கட்டா இடையில் புல்லட் ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஸ்பெயின் நாட்டை சேர்ந்த INECO,TYPSA மற்றும் ICT ஆகிய மூன்று நிறுவனங்கள் ஆய்வுகளை மேற்கொண்டன. இந்த ஆய்வுப் பணிகள் முடிந்து தற்போது இறுதி அறிக்கை ரயில் வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.

 புல்லட் ரயில்: ம்ஹூம்... நம்ம பக்கம் இப்போதைக்கு வாய்ப்பே இல்லை?!!

அந்த அறிக்கையில், டெல்லி- கோல்கட்டா இடையிலான 1,474.5 கிமீ தூரத்துக்கு புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பல முக்கிய நகரங்கள் வழியாக புல்லட் ரயில் பயணிக்கும்.

 புல்லட் ரயில்: ம்ஹூம்... நம்ம பக்கம் இப்போதைக்கு வாய்ப்பே இல்லை?!!

டெல்லி- லக்ணோ இடையிலான 440 கிமீ தூரத்தை புல்லட் ரயில் ஒரு மணி 38 நிமிடங்களில் கடந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, டெல்லி - வாரணாசி இடையிலான 720 கிமீ தூரத்தை கடப்பதற்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் 12 மணிநேரம் வரை எடுத்துக் கொள்கின்றன. ஆனால், புல்லட் ரயில் இந்த தூரத்தை வெறும் 2 மணி 38 நிமிடங்களில் கடந்துவிடும்.

 புல்லட் ரயில்: ம்ஹூம்... நம்ம பக்கம் இப்போதைக்கு வாய்ப்பே இல்லை?!!

இந்த வழித்தடத்தில் அதிகபட்சமாக 300 கிமீ வேகம் வரை புல்லட் ரயிலை இயக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், சராசரியாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்வதற்கு வேக இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

 புல்லட் ரயில்: ம்ஹூம்... நம்ம பக்கம் இப்போதைக்கு வாய்ப்பே இல்லை?!!

டெல்லி - லக்ணோ இடையிலான பயணத்திற்கு புல்லட் ரயிலில் ரூ.1,980 வரையிலும், டெல்லி- வாரணாசி இடையிலான பயணத்திற்கு ரூ.3,240 வரையிலும் கட்டணமாக நிர்ணயிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 புல்லட் ரயில்: ம்ஹூம்... நம்ம பக்கம் இப்போதைக்கு வாய்ப்பே இல்லை?!!

ரயில் துறையின் பல்வேறு பிரிவுகள் வழங்கிய ஆலோசனைகளும், பரிந்துரைகளும் பரிசீலிக்கப்பட்டு இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், இந்த புல்லட் ரயில் திட்டம் துவங்குவதற்கான கால அளவுகள் சற்று ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.

 புல்லட் ரயில்: ம்ஹூம்... நம்ம பக்கம் இப்போதைக்கு வாய்ப்பே இல்லை?!!

ஆம். இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி, 2021ம் ஆண்டில் டெல்லி- கோல்கட்டா புல்லட் ரயில் திட்டப் பணிகள் துவங்கினால், வரும் 2029ம் ஆண்டில்தான் புல்லட் ரயில் இயக்குவதற்கான கால அளவு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 புல்லட் ரயில்: ம்ஹூம்... நம்ம பக்கம் இப்போதைக்கு வாய்ப்பே இல்லை?!!

மேலும், டெல்லி- லக்ணோ இடையில் 2029ம் ஆண்டிலும், டெல்லி- வாரணாசி இடையில் 2031ம் ஆண்டிலும் புல்லட் ரயில் இயக்க முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 புல்லட் ரயில்: ம்ஹூம்... நம்ம பக்கம் இப்போதைக்கு வாய்ப்பே இல்லை?!!

டெல்லி- மும்பை மற்றும் மும்பை- சென்னை நகரங்களுக்கு இடையிலும் புல்லட் ரயில் விடுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த திட்டப்பணிகள் துவங்கி, புல்லட் ரயில் வருவதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும். இதன்படி பார்க்கும்போது, தென் இந்தியாவிற்கு புல்லட் ரயில் என்பது அடுத்த ஒரு தசாப்தத்திற்கு வெறும் கனவாகவே இருக்கும் நிலை உள்ளது.

 புல்லட் ரயில்: ம்ஹூம்... நம்ம பக்கம் இப்போதைக்கு வாய்ப்பே இல்லை?!!

இவற்றை தவிர்த்து, அரசியல் சூழல்களும் இந்த திட்டத்திற்கான கால அளவை நீட்டிக்கும். எனவே, புல்லட் ரயில் வருவதற்கான வாய்ப்புகள் வெகு தூரத்தில் உள்ளதாகவே கருத முடியும்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Delhi to Lucknow in 98 minutes at bullet Train.
Story first published: Monday, July 17, 2017, 13:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark