கடத்தல் நாடகம் ஆடிய 20 வயது மகன்... இவ்ளோ சின்ன வயசில் வந்த ஆசையை பார்த்து ஆடிப்போன பெற்றோர்...

20 வயது இளைஞர் ஒருவர், தன்னை தானே கடத்தி கொண்டு, நாடகம் ஆடியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடத்தல் நாடகம் ஆடிய 20 வயது மகன்... இவ்ளோ சின்ன வயசில் வந்த ஆசையை பார்த்து ஆடிப்போன பெற்றோர்...

ஒரு காலத்தில் ஆடம்பரமாக கருதப்பட்டு வந்த கார், இன்று அத்தியாவசியமாக மாறி விட்டது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கார் அவசியம் என்ற சூழ்நிலை தற்போது உருவாகி விட்டது. அதிலும் குறிப்பாக தற்போதைய கொரோனா வைரஸ் கால கட்டத்தில், பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென்றால், கார் அவசியம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

கடத்தல் நாடகம் ஆடிய 20 வயது மகன்... இவ்ளோ சின்ன வயசில் வந்த ஆசையை பார்த்து ஆடிப்போன பெற்றோர்...

பேருந்து, ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தால், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். எனவே சொந்த கார்களில் பயணிப்பதைதான் பொதுமக்கள் தற்போது பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதன் காரணமாக இந்தியாவில் தற்போது கார்களின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

கடத்தல் நாடகம் ஆடிய 20 வயது மகன்... இவ்ளோ சின்ன வயசில் வந்த ஆசையை பார்த்து ஆடிப்போன பெற்றோர்...

அதே சமயம் தற்போதைய கால கட்டத்தில், இளைஞர்கள் சிலரும் கூட, மிக இளம் வயதிலேயே தங்களுக்கு என சொந்தமாக ஒரு கார் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். காருக்காக பெற்றோர்களிடம் அடம் பிடிப்பவர்களும் ஏராளம். அப்படிப்பட்ட இளைஞர்களில் ஒருவர், கார் வாங்குவதற்காக செய்திருக்கும் காரியம் தற்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடத்தல் நாடகம் ஆடிய 20 வயது மகன்... இவ்ளோ சின்ன வயசில் வந்த ஆசையை பார்த்து ஆடிப்போன பெற்றோர்...

கார் வாங்குவதற்காக தன்னை தானே கடத்தி கொண்டு நாடகம் ஆடிய 20 வயது இளைஞரை உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத் காவல் துறையினர் நேற்று (அக்டோபர் 6) அதிரடியாக கைது செய்துள்ளனர். டெல்லி பிரகதி விஹார் பகுதியை சேர்ந்த ஆகாஷ் சிங் என்பவர்தான், தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

கடத்தல் நாடகம் ஆடிய 20 வயது மகன்... இவ்ளோ சின்ன வயசில் வந்த ஆசையை பார்த்து ஆடிப்போன பெற்றோர்...

இதன் மூலமாக தனது பெற்றோரிடம் இருந்து பணம் பறித்து, கார் வாங்க வேண்டும் என்பது அவரது திட்டம். இதற்காக உத்தர பிரதேச மாநிலம் நொய்டா நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் வாடகைக்கு அறையை எடுத்து, ஒத்திகை பார்த்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த திங்கள் கிழமை (நேற்று முன் தினம்) காலை 8 மணியளவில் ஆகாஷ் சிங் தனது வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டுள்ளார்.

கடத்தல் நாடகம் ஆடிய 20 வயது மகன்... இவ்ளோ சின்ன வயசில் வந்த ஆசையை பார்த்து ஆடிப்போன பெற்றோர்...

நண்பர் ஒருவர் தொலைபேசி மூலம் அழைத்ததாகவும், விரைவில் வீட்டிற்கு திரும்பி வந்து விடுவேன் எனவும், அவர் தனது அம்மாவிடம் கூறி சென்றுள்ளார். இதுகுறித்து ஆகாஷ் சிங்கின் அம்மா கிரண் சிங் கூறுகையில், ''திங்கள் கிழமை மாலை வரை ஆகாஷ் சிங் வந்து விடுவார் என நான் காத்து கொண்டே இருந்தேன். ஆனால் அவர் வரவில்லை.

கடத்தல் நாடகம் ஆடிய 20 வயது மகன்... இவ்ளோ சின்ன வயசில் வந்த ஆசையை பார்த்து ஆடிப்போன பெற்றோர்...

எனவே நாங்கள் பல்வேறு இடங்களில் தேடினோம். அப்போதும் ஆகாஷ் சிங்கை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன்பின் திங்கள் கிழமை இரவு 11 மணியளவில், அடையாளம் தெரியாத ஒருவரிடம் இருந்து எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், உங்களது மகன் என்னுடன்தான் இருக்கிறார் என்று கூறினார்.

கடத்தல் நாடகம் ஆடிய 20 வயது மகன்... இவ்ளோ சின்ன வயசில் வந்த ஆசையை பார்த்து ஆடிப்போன பெற்றோர்...

அத்துடன் அவரை விடுவிக்க வேண்டுமென்றால், 2 லட்ச ரூபாய் தர வேண்டும் எனவும் அவர் கேட்டார். இந்த விஷயத்தை வெளியில் யாரிடமாவது கூறினால், எனது மகனை கொன்று விடுவேன் எனவும் அவர் மிரட்டல் விடுத்தார்'' என்றார். காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கிரண் சிங் இந்த தகவல்களை எல்லாம் கூறியுள்ளார்.

கடத்தல் நாடகம் ஆடிய 20 வயது மகன்... இவ்ளோ சின்ன வயசில் வந்த ஆசையை பார்த்து ஆடிப்போன பெற்றோர்...

பணம் கேட்டு மிரட்டல் வந்த உடனேயே, ஆகாஷ் சிங்கின் பெற்றோர் காவல் நிலையத்திற்கு சென்று புகாரை பதிவு செய்து விட்டனர். ஆகாஷ் சிங்கின் பெற்றோருக்கு, ஒரே தொலைபேசி எண்ணில் இருந்தே அழைப்பு வந்துள்ளது. செவ்வாய் கிழமை (நேற்று) மதியம் வரை மொத்தம் நான்கு முறை அவர்களுக்கு அழைப்பு வந்துள்ளது.

கடத்தல் நாடகம் ஆடிய 20 வயது மகன்... இவ்ளோ சின்ன வயசில் வந்த ஆசையை பார்த்து ஆடிப்போன பெற்றோர்...

இதனை அடிப்படையாக வைத்து, நொய்டா நகரின் செக்டார் 22 பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து கொண்டு நடத்தப்பட்ட இந்த சதி திட்டத்தை காவல் துறையினர் முறியடித்தனர். தனது நண்பர்களான அங்கிட் குமார் மற்றும் கரண் குமார் ஆகிய இரண்டு பேருடனும் இணைந்துதான், ஆகாஷ் சிங் இந்த திட்டத்தை தீட்டியுள்ளார்.

கடத்தல் நாடகம் ஆடிய 20 வயது மகன்... இவ்ளோ சின்ன வயசில் வந்த ஆசையை பார்த்து ஆடிப்போன பெற்றோர்...

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், ''கார் வேண்டும் என ஆகாஷ் சிங் தன்னுடைய குடும்பத்தாருக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். இத்தனைக்கும் தனது மூத்த சகோதரருக்கு சொந்தமான பைக்கை ஆகாஷ் சிங் பெற்றுள்ளார். இருந்தாலும் பைக் அவருக்கு திருப்தியளிக்கவில்லை. எனவே கார் வாங்குவதற்காக இந்த கடத்தல் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.

கடத்தல் நாடகம் ஆடிய 20 வயது மகன்... இவ்ளோ சின்ன வயசில் வந்த ஆசையை பார்த்து ஆடிப்போன பெற்றோர்...

தற்போது ஆகாஷ் சிங் மற்றும் அங்கிட் குமார் ஆகிய இருவரையும் நாங்கள் கைது செய்துள்ளோம். ஆனால் 3வது நபர் தலைமறைவாகி விட்டார். அவரையும் நாங்கள் விரைவில் கைது செய்வோம்'' என்றனர். கார் வாங்குவதற்காக இளைஞர்கள் மூன்று பேர் கூட்டாக இணைந்து செய்துள்ள இந்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடத்தல் நாடகம் ஆடிய 20 வயது மகன்... இவ்ளோ சின்ன வயசில் வந்த ஆசையை பார்த்து ஆடிப்போன பெற்றோர்...

தற்போதைய சூழலில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கார் அவசியம்தான். கார் இருந்தால், பேருந்துகளுக்கு காத்திருக்காமலும், கொரோனா வைரஸ் அச்சம் இல்லாமலும் சௌகரியமாக பயணம் செய்யலாம். ஆனால் ஆகாஷ் சிங் 20 வயதிலேயே கார் வேண்டும் என அடம்பிடித்து, இப்படி கடத்தல் நாடகம் ஆடியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Delhi Man Fakes His Kidnapping To Raise Money For Car From Parents - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X