சூப்பரான வசதிகளுடன் பயன்பாட்டிற்கு வருகிறது RRTS ரயில்... ஒரு முறையாவது இந்த ரயில்ல பயணிச்சிடனுமுங்க!
சூப்பரான அம்சங்களுடன் உருவாகி இருக்கும் ஆர்ஆர்டிஎஸ் (RRTS) ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரயில் போக்குவரத்தை ஒரு படி மேலே எடுத்துச் செல்லும் வகையில் ஓர் தரமான நடவடிக்கையை இந்தியன் ரயில்வேத்துறை மேற்கொண்டிருக்கின்றது. அது வெகு விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கும் ஆர்ஆர்டிஎஸ் ரேபிட் ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (Regional Rapid Transit System) என்பதன் சுருக்கமே ஆர்ஆர்டிஎஸ் ஆகும்.

அதாவது, இரு மாநிலங்களின் முக்கியமான பகுதிகளை விரைந்து சென்றடைவதற்கான ரயில் இது என்பதையே ஆர்ஆர்டிஎஸ் குறிப்பிடுகின்றது. அதேவேலையில், இதுவரை எந்தவொரு ரயிலிலும் இடம் பெறாத சிறப்பம்சங்கள் பல புதிய ஆர்ஆர்டிஎஸ் ரயில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சிறப்புமிக்க ரயிலாகவே இந்திய ரயில்வே துறை ஆர்ஆர்டிஎஸ் ரயிலை உருவாக்கியிருக்கின்றது.

ரயிலின் உற்பத்தி பணிகள் 2021ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. இப்போது, அனைத்து பணிகளும் இறுதி நிலையை எட்டியிருக்கின்றது. இதன் சோதனையோட்டம் பணிகள் இந்த ஆண்டிற்குள் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அண்மையில் அறிவிக்கப்பட்ட கவாச் தொழில்நுட்பம் மற்றும் வந்தே பாரத் ரயில்கள் ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக மிக சிறந்த முன்னெடுப்பாக இந்த ரயிலின் உருவாக்கம் இருக்கின்றது.

முற்றிலும் மாறுபட்ட டிசைனில் ஆர்ஆர்டிஎஸ் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், மிக சிறந்த போக்குவரத்தை வழங்கும் வகையிலும் ரயில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. முதலில் ஆறு பெட்டிகளுடனேயே இந்த ரயில் இயங்க உள்ளது. பின்னர் அது ஒன்பது பெட்டிகளாக அதிகரிக்கப்படும்.

இதில் ஓர் பெட்டி மட்டும் மிக அதிக பிரீமியம் வசதியை பயணிகளுக்கு வழங்கும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஒய்-ஃபை போன்ற பன்முக அம்சங்கள் அதில் இடம் பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயிலின் ஆறு பெட்டிகளில் மொத்தம் 407 இருக்கைகள் இருக்கும்.

இதில், 1,500 பேர் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ரயில் அதிக வேகத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்காக, அதன் முகப்பு பகுதிக்கு விமானத்தின் முன் பக்கத்தைப் போன்று அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு தடையற்ற வேகத்தை வழங்க உதவும்.

ஒரு மெட்ரோ ரயிலைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக வேகத்தில் இது இயங்கும். எண்களில் பார்த்தோமேயானால் சராசரியாக மணிக்கு 100 கிமீ முதல் 160 கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் இது செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ரயில் 2023 மார்ச் மாதத்திற்குள் அதன் மக்கள் சேவை பயணத்தைத் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி-மீரட் இடையில் இந்த ரயில் பயணிக்க உள்ளது. இடையில், உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள சாஹியாபாத் மற்றும் துஹாய் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையிலும் அது பயணிக்க இருக்கின்றது.
Note: Images are representative purpose only.


Click it and Unblock the Notifications








