இதுக்கா மத்திய அரசு பல கோடி ரூபாயை செலவு பண்ணுது? வறுத்தெடுத்த கார் ஓட்டி!!
இந்தியாவின் முக்கியமான விரைவுச்சாலையாக டெல்லி- மும்பை விரைவுச்சாலை உள்ளது. நாட்டின் மொத்த பொருளாதாரத்தையே தீர்மானிக்கக்கூடிய விரைவுச்சாலை என்கிற அளவிற்கு இதற்கு பில்டப் கொடுக்கப்படுகிறது. ஏனெனில், இந்தியாவின் 2 முக்கியமான மாநகரங்களை இந்த சாலை இணைக்கிறது. இந்த நிலையில், இந்த சாலையின் தரம் குறித்து கேள்வியெழுப்பும் வகையில் எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. வீடியோவில் அப்படி என்ன கூறப்பட்டுள்ளது என்பதையும், இந்த விரைவுச்சாலையை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் பல்வேறு விரைவுச்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு, நம் சென்னையையும், பெங்களூரையும் இணைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டு வரும் விரைவுச்சாலை. தென்னிந்தியாவிலேயே முக்கியமான விரைவுச்சாலையாக இது பார்க்கப்படுகிறது. தென்னிந்தியாவிலேயே இது முக்கியமான விரைவுச்சாலை என்றால், ஒட்டுமொத்த இந்தியாவிலேயே முக்கியமான விரைவுச்சாலை தலைநகர் டெல்லி மற்றும் மும்பை இடையே அமைக்கப்பட்டு வருகிறது.

கடந்த பல வருடங்களாக நடைபெற்றுவரும் டெல்லி- மும்பை விரைவுச்சாலை பணிகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டன. இன்னும் சொல்லப்போனால், இந்த விரைவுச்சாலையின் பெரும்பான்மையான பகுதிகள் ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. இன்னும் சிறு, சிறு வேலைகள் மட்டுமே ஆங்காங்கே உள்ளன. இந்த நிலையில், இந்த விரைவுச்சாலையின் தரம் குறித்து கேள்வியெழுப்பும் வகையில் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
கார் ஒன்றின் டேஸ்போர்டில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் ஆங்காங்கே இருக்கும் மேடு, பள்ளங்களையும், அதனால் காருக்குள் ஏற்படும் குலுக்கல்களையும் ஹைலைட்டாக சுட்டிக் காட்டியுள்ளனர். வீடியோவை பார்க்கும்போதே நமக்கு அந்த குலுக்கல்களை கவனிக்க முடிகிறது. மேலும், சாலையில் செல்லும் மற்ற வாகனங்களும் சாலையின் அந்த குறிப்பிட்ட பகுதியில் செல்லும்போது மட்டும் குலுக்கல்களை சந்திப்பதை பார்க்க முடிகிறது.

இதனால், இந்தியாவின் மோசமான விரைவுச்சாலையாக டெல்லி-மும்பை விரைவுச்சாலையை இந்த வீடியோவை வெளியிட்டவர் கூறுகிறார். விரைவுச்சாலையின் மறுப்பக்கத்தில் வேலைகள் நடைபெற்றுவதை பார்க்க முடிகிறது. ஆதலால், நன்றாக உள்ள இந்த பக்கத்திலும் சிறு, சிறு ஒட்டு வேலைகள் நடைபெற்றுள்ளன. அந்த வேலைகள் முறையாக செய்யப்படாத காரணத்தினாலேயே அவ்வழியாக செல்லும் வாகனங்களுக்குள் குலுக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இத்தனைக்கும், விரைவுச்சாலையின் இந்த குறிப்பிட்ட பகுதியில் செல்லும் வாகனங்கள் மிதமான வேகத்தில்தான் செல்கின்றன. அதிவேகத்தில் சென்றால், இந்த மேடுகள் இன்னும் அதிக அசவுகரியத்தை ஏற்படுத்தும். பின் இருக்கையில் படுத்துக் கொண்டு செல்பவர்கள், கீழே தூக்கி வீசப்படுவதற்கு கூட வாய்ப்புள்ளது. டெல்லி-மும்பை விரைவுச்சாலையின் தரத்தை சந்தேகத்திற்கு உள்ளாக்கும் வகையிலான இவ்வாறான வீடியோ வெளியாகுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல.

சில மாதங்களுக்கு முன், இதேபோன்றதான சாலையில் இருந்த மேடுகளினால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் காற்றில் சில செண்டிமீட்டர் உயரத்திற்கு குதிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. இணையத்தில் வைரலாகிய அந்த வீடியோவிற்கு மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூட தனது ரியாக்ஷனை தெரிவித்து இருந்தார். ரியாக்ஷனை வெளிக்காட்டியது மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட சாலை ஒப்பந்ததாரருக்கும் ரூ.50 இலட்சம் அபராதம் விதித்து ஆணை பிறப்பித்திருந்தார்.
இன்னும் சொல்லப்போனால், விரைவுச்சாலையின் அந்த தரமான பகுதிகளை அமைச்சரே நேரில் சென்று பார்வையிட்டதாக கூட கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக, சம்பந்தப்பட்ட சாலை ஒப்பந்ததாரரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடுமையாக கண்டித்தத்தோடு, உங்களை பிளாக் லிஸ்ட் செய்துவிடுவோம் என்றும், உங்களால் புதிய ஏலங்களை எடுக்க முடியாது என்றும் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆக, நாடு முழுவதும் தரமான விரைவுச்சாலைகளை வழங்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது; இடையில் ஒப்பந்த நிறுவனங்கள் தான் ஊழல்களை ஏற்படுத்துகின்றன போல. எனவே, சாலை ஒப்பந்தங்களை கொடுக்கும் நிறுவனங்களை மத்திய அரசு சரியானதாக தேர்வு செய்ய வேண்டும். தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், சாலை பணிகள் நடைபெற்று வருவதால், அந்த பணிகள் நடைபெற்று முடிந்த பின் இவ்வாறான குலுக்கல்கள் இல்லாமல் போகலாம்.


Click it and Unblock the Notifications









