250கிமீ வேகத்தை தாங்குது!! நம்ம மத்திய அரசு போட்ட விரைவுச்சாலையின் தரம் - காலத்துக்கும் நின்று பேசும்!

மும்பை- டெல்லி விரைவுச்சாலையில் சூப்பர் கார்கள் அசால்ட்டாக மணிக்கு 260கிமீ வேகத்தை எட்டுவதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இந்திய விரைவுச்சாலையின் தரத்தை காட்டுவதாக இருந்தாலும், வாகன ஓட்டிகளின் ஆக்ரோஷமான & முன்னெச்சரிக்கை அற்ற தன்மையையும் காட்டுவதாக அமைகிறது.

இந்திய அரசாங்கம் நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளையும், விரைவுச்சாலைகளையும் விரிவாக்க செய்ய முனைப்புடன் உள்ளது. இதன் விளைவாகவே, கடந்த சில வருடங்களில் இந்தியாவில் பல்வேறு புதிய நெடுஞ்சாலைகள் உருவாகியுள்ளன. ஓர் நாட்டில் நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத்தாலே, அந்த நாட்டில் தானாக சொகுசு கார்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களின் எண்ணிக்கை உயர ஆரம்பித்துவிடும்.

Luxury Cars Easily Hit 200kmph

இந்த வகையில், நம் நாட்டிலும் லக்சரி தரத்திலான கார்களை வாங்குவோர் சமீப காலங்களில் அதிகரித்துள்ளனர். இதன் காரணமாகவே, இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் விற்பனையாகும் மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறான அதிவேகத்தில் இயங்கக்கூடிய லக்சரி கார்களை அதிக எண்ணிக்கையில் டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் பார்க்க முடிகிறது.

இந்தியாவின் இரு முக்கியமான மாநகரங்களாக விளங்கும் டெல்லி மற்றும் மும்பையை இணைக்கும் விதமான விரைவுச்சாலையை கடந்த சில வருடங்களில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைத்து முடித்துள்ளது. இந்த விரைவுச்சாலையினால், இந்த இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் வெகுவாக குறைந்திருப்பதாக கூறும் மத்திய அரசாங்கம், சாலை வணிக போக்குவரத்துகளும் இனி அதிகரிக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளது.

Luxury Cars Easily Hit 200kmph

ஆனால், மத்திய அரசின் நம்பிக்கைக்கு மாறாக சொகுசு கார்களின் எண்ணிக்கை டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்த விரைவுச்சாலையின் குர்கான்- ராஜஸ்தான் மாநிலத்தின் டவுஸா பகுதியை இணைக்கும் பிரிவில் சொகுசு கார்களை சர்வ சாதாரணமாக அதிவேகத்தில் செல்வதை பார்க்க முடிவதாக கூறப்படுகிறது.

பரந்து விரிந்த இந்த விரைவுச்சாலையில் சொகுசு கார்கள் பெரும்பாலான நேரங்களில் ஏறக்குறைய 200kmph வேகத்தில் இயங்குவதாகவும், சில லக்சரி கார் ஓட்டிகள் தங்களது கார்களை மணிக்கு 260கிமீ வேகத்தில் கூட பறப்பதாகவும் மத்திய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் அதிகப்பட்சமாகவே மணிக்கு 120கிமீ வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது. 120kmph வேகம் கூட ஓவர் டேக் செய்யும்போது மட்டுமே ஆகும்.

Luxury Cars Easily Hit 200kmph

அதுவே, சாதாரணமாக சொல்கிறீர்கள் எனில், 100kmph தான் மத்திய நெடுஞ்சாலை துறையினரால் நிர்ணயிக்கப்பட்ட டாப்-ஸ்பீடு. குர்கான் பகுதியில் வாகனங்களின் வேகத்தை கண்டறியும் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிஸ்டத்தின் வாயிலாக தினந்தோறும் சராசரியாக 20,000 வாகனங்களின் வேகங்கள் மதிப்பிடப்படுகின்றன. இந்த 20,000இல் ஒவ்வொரு நாளும் குறைந்தது 500 அதிவேக லக்சரி கார்களாவது இடம்பெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மணிக்கு 260கிமீ வேகம் என்றால் வெறும் கண்ணிமைக்கும் நேரம் தான். இது நிச்சயமாக அதிவேகம். ஆனால், இவ்வாறு ஹை ஸ்பீடில் பயணிக்கும் சொகுசு கார்களுக்கு போலீஸார் அபராதம் விதித்ததாக நிறைய செய்திகளை நாம் பார்த்தது இல்லை. இதனால், சொகுசு கார்களில் பறப்பவர்களை பிடிப்பதற்காக போலீஸார் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனரா என்கிற சந்தேகம் எழுகிறது.

Article Published On: Monday, October 16, 2023, 19:22 [IST]
English summary
Delhi mumbai expressway super luxury cars easily hit 200 kmph speed all details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X