டெல்லி - மும்பை பயண நேரத்தை பாதியாக குறைக்கும் சூப்பர் எக்ஸ்பிரஸ் ஹைவே ரோடு

Written By:

டெல்லி - மும்பை யை இணைக்கும் சூப்பர் ஹைவே திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய தலைநகரையும், வர்த்தக தலைநகரையும் இணைக்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

டெல்லி - மும்பை பயண நேரத்தை பாதியாக குறைக்கும் சூப்பர் எக்ஸ்பிரஸ் ஹைவே ரோடு

பாரத் மாலா பிரோஜனா திட்டத்தின் கீழ் இதற்காக சுமார் ரூ 8 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. டெல்லி - மும்பையை சுமார் 1,400 கி.மீ., தூரத்தில் இணைக்கும் இந்த ரோடு 12 மணி நேரத்தில் வாகனத்தில் பயணம் செய்யும் படி திட்டமிடப்பட்டுள்ளது.

டெல்லி - மும்பை பயண நேரத்தை பாதியாக குறைக்கும் சூப்பர் எக்ஸ்பிரஸ் ஹைவே ரோடு

இந்த பயண நேரம் என்பது மும்பை-டெல்லி இடையே இயங்கும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை விட குறைந்த நேரமாகும். ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 16 மணி நேரம் பயணம் செய்கிறது.

டெல்லி - மும்பை பயண நேரத்தை பாதியாக குறைக்கும் சூப்பர் எக்ஸ்பிரஸ் ஹைவே ரோடு

தற்போது இதற்கான பணிகள் துவங்கிவட்டதாக மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அதன் படி மும்பை -வதோதரா மற்றும் டெல்லி - ஜெய்ப்பூர் இடையே ஏற்கனவே எக்ஸ்பிரஸ் ரோடு திட்டம் உள்ளது. இதையடுத்து ஜெய்பூர் - கோட்டா , கோட்டா - வதோதரா ஆகிய பகுதிகளை மட்டும் அதனுடன் இணைக்க திட்டமிட்டுள்ளனர்.

டெல்லி - மும்பை பயண நேரத்தை பாதியாக குறைக்கும் சூப்பர் எக்ஸ்பிரஸ் ஹைவே ரோடு

இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் சுமார் 12 மணி நேரத்தில் மும்பை - டெல்லி இடையே பயணம் செய்ய முடியும். தற்போது உள்ள ரோடு வழியாக பயணம் செய்ய சுமார் 24 மணி நேரம் ஆகிறது. இதன் மூலம் மக்கள் பயண நேரத்தில் பாதி நேரத்தை சேமிக்க முடியும்.

டெல்லி - மும்பை பயண நேரத்தை பாதியாக குறைக்கும் சூப்பர் எக்ஸ்பிரஸ் ஹைவே ரோடு

மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சொல்லும் போது டெல்லி - ஜெப்பூர் இடையே சுமார் 225 கி.மீ., தூரத்திற்கு ரூ16,000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ஹைவே ரோடு 15 மாதங்களில் நிறைவடையும், நாங்கள் முதலில் இதற்கு 30 மாதங்கள் வரை திட்டமிட்டிருந்தோம்.

டெல்லி - மும்பை பயண நேரத்தை பாதியாக குறைக்கும் சூப்பர் எக்ஸ்பிரஸ் ஹைவே ரோடு

இந்த ரோடு குர்கிராம் மற்றும் ஜெய்பூர் ரிங் ரோடு பகுதியை இணைக்கும் வகையில் இருக்கும். மும்பை புனே இடையே உள்ள எக்ஸ்பிரஸ் ஹைவேவிற்கு அடுத்த அதிக தரத்திலான ஹைவே ரோடாக இது இருக்கும் என கூறினார்.

டெல்லி - மும்பை பயண நேரத்தை பாதியாக குறைக்கும் சூப்பர் எக்ஸ்பிரஸ் ஹைவே ரோடு

தற்போது டெல்லி - மும்பை இடையே சுமார் 6 மணி நேர பயணம் ஆகிறது. பயணிகள் வாகனங்களுக்கு 90 கி.மீ., வேகம் தான் அதிகபட்ச வேகமாக உள்ளது. இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால் பயணிகள் வாகனத்திற்கான வேகம் 150 கி.மீ. வரை உயர்த்தப்படும் என தெரிகிறது. மேலும் இதன் மூலம் 40 கி.மீ., பயண தூரமும் குறைக்கப்பட்டுள்ளது.

டெல்லி - மும்பை பயண நேரத்தை பாதியாக குறைக்கும் சூப்பர் எக்ஸ்பிரஸ் ஹைவே ரோடு

மும்பை -வதோதரா ரோட்டை பொருத்தவரை அதிக அளவில் சரக்கு வாகனங்கள் சென்று வரும் ரோடாக உள்ளது. இந்த பகுதியில் சூப்பர் எக்ஸ்பிரஸ் ரோடு அமைக்கப்படும் பட்சத்தில் இந்த 380 கி.மீ. தூரத்தை நாம் 3 மணி நேரத்தில் கடக்க முடியும். இதற்காக மத்திய அரசு சுமார் 44,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

டெல்லி - மும்பை பயண நேரத்தை பாதியாக குறைக்கும் சூப்பர் எக்ஸ்பிரஸ் ஹைவே ரோடு

இந்த இரண்டு ரோடுகளை தவிர இந்தியா முழவதும் ஆமதாபாத் - தோலெரா, டெல்லி - மீரட், கான்பூர் - லக்னோ, சென்னை - பெங்களூரு, டில்லி - அமிர்தசரஸ்-காட்ரா, ஆகிய பகுதிகளிலும் எக்ஸ்பிரஸ் ரோடு அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லி - மும்பை பயண நேரத்தை பாதியாக குறைக்கும் சூப்பர் எக்ஸ்பிரஸ் ஹைவே ரோடு

வரும் ஏப். 15ம் தேதி டில்லி - மீரட் எக்ஸ்பிரஸ் ரோட்டின், முதற்கட்ட பணியும், ஈஸ்டர்ன், பெரிபெரல் எக்ஸ்பிரஸ்வே ரோட்டையும் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது. இந்த இரண்டு ரோடுகளும் டெல்லிக்கு பன்மடங்கு முக்கிய ரோடாக பார்க்கப்படுகிறது.

டெல்லி - மும்பை பயண நேரத்தை பாதியாக குறைக்கும் சூப்பர் எக்ஸ்பிரஸ் ஹைவே ரோடு

இந்நிலையில் இன்னும் இரண்டு மாதங்களில் வெஸ்டர்ன் பெரிபெரல் ரோடும், டெல்லியில் இருந்து டெகராடூன், ஆமிர்தசரஸ், காட்ரா ஆகிய பகுதிகளை இயக்கு ரோடுகளுக்கான பணிகளும் துவங்கப்படுவதாக நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

டெல்லி - மும்பை பயண நேரத்தை பாதியாக குறைக்கும் சூப்பர் எக்ஸ்பிரஸ் ஹைவே ரோடு

மேலும் ரூ 12,000 கோடி செவில் உத்தரகண்டில் சார்தம் ரோடிற்கான பணிகள் நடந்து வருவதாகவும், இது மோசமான வானிலை நிலவும் நேரங்களிலும் பயன்படுத்தபடும் ரோடாக இருக்கும்

டெல்லி - மும்பை பயண நேரத்தை பாதியாக குறைக்கும் சூப்பர் எக்ஸ்பிரஸ் ஹைவே ரோடு

இந்த ரோடு, கேதர்நாத், பத்ரிநாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகிய பகுதிகளை இணைக்கிறது. இந்த ரோடு வரும் 2019 மார்ச் முதல் பயன்பாட்டிற்கு வரும் எனவும் கூறினார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01. பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஷேடோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

02.சாதாரண காருக்கும் ஆடம்பர காருக்கும் என்ன வித்தியாசம்?

03.டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விலை அதிரடி உயர்வு!

04.இன்போடெயின்மெண்ட் சாதனம் என்றால் என்ன தெரியுமா?

05.ராங் சைடில் வரும் வாகனங்களின் டயரை கிழிக்கும் வேகத்தடையை அகற்ற உத்தரவு

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
delhi mumbai travel time to reduce by half.Read in Tamil.
Story first published: Wednesday, April 4, 2018, 13:12 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark