நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு தடை! ஊரைவிட்டு ஒதுக்கி வைக்க உத்தரவு வந்துவிட்டது!

டில்லியில் மாசு கட்டுப்பாட்டை குறைப்பதற்காக பிஎஸ் 6 இல்லாத கமர்ஷியல் வாகனங்கள் டில்லிக்குள் நுழைய வரும் நவம்பர் 1 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. குளிர் காலம் நெருங்கும் நிலையில் இந்த காலகட்டத்தில் மாசு அதிகமாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் தலை நகர் டில்லியில் காற்று மாசு அதிகமாக இருக்கிறது. முக்கியமாக குளிர் காலங்களில் இங்கு மாசு அதிகமாக இருப்பதால் இந்த காலகட்டத்தில் காற்று மாசுவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். காற்று மாசுக்கு முக்கியமான காரணம் வாகனங்கள் தான். வாகனங்களிலிருந்து வெளிபேறும் புகை தான் காற்றுமாசுக்கு பெரும்பாலான காரணங்களாக உள்ளன.

Delhi Non BS6 Ban

இந்நிலையில் டில்லியில் காற்று மாசுவை கையாளும் கமிஷன் தற்போது டில்லி பிஎஸ்6 வாகனங்களை தவிர மற்ற கமர்ஷியல் வாகனங்கள் டில்லிக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என தெரிவித்திருந்தது.இந்த விதி பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும், சிஎன்ஜி, எல்என்ஜி மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்த தடை கிடையாது எனவும் தெரிவித்துள்ளது.

தற்போது டில்லி அல்லாத பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட பழைய வாகனங்கள் சரக்கு எடுத்துக்கொண்டு டில்லிக்குள் வருகிறது. இதிலிருந்து காற்று மாசு அதிகம் ஏற்படுவதால் இந்த தடை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தடை அனைத்து விதமான சரக்கு வாகனங்களுக்கும் பொருந்தும், இலகுரக சரக்கு வாகனங்கள், மிடியம் சரக்கு வாகனங்கள், ஹெவி சரக்கு வாகனங்களுக்கும் இது பொருந்தும்.

Delhi Non BS6 Ban

ஒருவேளை பழைய வாகமாக இருந்தாலும் சிஎன்ஜி, எல்என்ஜி எரிபொருளை பயன்படுத்தும் வாகனமாக இருந்தாலோ அல்லது எலெக்ட்ரிக் வாகனமாக இருந்தாலோ அதற்கு இந்த தடை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த விதி டில்லி பகுதிக்குள் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு கிடையாது. மேலும் அக்டோபர் 31ம் தேதி வரை மற்ற பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கும் தடை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது காற்று மாசுவை கட்டுப்படுத்தும் ஒர முயற்சிதான். இ்நத தடை தற்காலிகமானது தான். டில்லியில் குளிர் காலங்களில் மாசு அதிகமாக இருக்கும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குளிர் காலம் முடியும் போது காற்று மாசு அளவு குறைந்தவுடன் இந்த தடை விலக்கிக்கொள்ளப்பட வாய்ப்புள்ளது.

டில்லி பகுதியில் காற்று மாசு காரணமாக பல்வேறு சட்டங்கள் மாறிமாறி வருவதால் தற்போது பெரும்பாலான வாகன உரிமையாளர்கள் பிஎஸ்6 வாகனங்களை வாங்கி பயன்படுத்ததுவங்கிவிட்டனர். இதனால் இந்த சட்டம் பெரும்பாலானோரை பாதிக்காது. இருந்தாலும் சிலர் இன்னும் பழைய வாகனங்களை பயன்படுத்துவதால் இந்த விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் வந்துள்ளது. இந்த வாகனங்கள் எல்லாம் மாசு அதிகமாக ஏற்படுத்துகிறது. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். இது குறித்த போதுமான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். இது நிச்சயம் மக்களுக்கு புரிந்தால் மட்டுமே

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காற்று மாசு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்தபிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். வாகனங்களின் மீது மட்டுமே மாசு என்றால் அரசு நடவடிக்கை எடுக்கிறது. இது இல்லாமல் மற்ற காரணங்களால் வரும் மாசுவையும் கட்டுப்படுத்த வேண்டும். இல்லை என்றால் இந்த மாசுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 28, 2025, 23:53 [IST]
English summary
Delhi non bs6 ban nov 1 vehicle entry restriction details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+