சோனியா காந்தியின் மருமகன் காருக்குள் இருந்தபோது நடந்த பரபரப்பு சம்பவம்... வெயிட் காட்டிய போலீஸ்!

சோனியா காந்தியின் மருமகன் காருக்குள் இருந்தபோது பரபரப்பு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சோனியா காந்தியின் மருமகன் காருக்குள் இருந்தபோது நடந்த பரபரப்பு சம்பவம்... வெயிட் காட்டிய போலீஸ்!

சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். போக்குவரத்து விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக அவருக்கு டெல்லி காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர். அபாயகரமான முறையில் கார் ஓட்டிய காரணத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என டெல்லி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சோனியா காந்தியின் மருமகன் காருக்குள் இருந்தபோது நடந்த பரபரப்பு சம்பவம்... வெயிட் காட்டிய போலீஸ்!

இதுகுறித்து டெல்லி காவல் துறையினர் கூறுகையில், ''ராபர்ட் வதேராவின் காருக்கு மோட்டார் வாகன சட்டம் பிரிவு 184-ன் கீழ் (அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுதல்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது'' என்றனர். சம்பவம் நடந்தபோது, ராபர்ட் வதேரா தனது பாதுகாவலர்களுடன் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

சோனியா காந்தியின் மருமகன் காருக்குள் இருந்தபோது நடந்த பரபரப்பு சம்பவம்... வெயிட் காட்டிய போலீஸ்!

அப்போது அவரது காரின் வேகம் திடீரென குறைந்துள்ளது. இதன் காரணமாக பின்னால் வந்த மற்றொரு கார் ராபர்ட் வதேராவின் கார் மீது மோதியுள்ளது. இதுகுறித்து ராபர்ட் வதேரா கூறுகையில், ''இது நிஸாமுதீன் பகுதியில் நடைபெற்ற சாதாரண சம்பவம்தான். எனது கார் வலது பக்கம் திரும்ப முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்து விட்டது.

சோனியா காந்தியின் மருமகன் காருக்குள் இருந்தபோது நடந்த பரபரப்பு சம்பவம்... வெயிட் காட்டிய போலீஸ்!

அப்போது டாக்ஸி டிரைவர் ஒருவர் அந்த வளைவில் திரும்ப தவறி விட்டார். எனவே வளைவில் திரும்புவதற்கு அவர் மீண்டும் ரிவர்ஸ் கியர் போட்டு வந்தார். அந்த நேரத்தில் எனது காரின் ஓட்டுனர் பிரேக் பிடித்து விட்டார். நான் காரை ஓட்டவில்லை. நான் காரின் பின் பகுதியில் அமர்ந்து, லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்ததேன்'' என்றார்.

சோனியா காந்தியின் மருமகன் காருக்குள் இருந்தபோது நடந்த பரபரப்பு சம்பவம்... வெயிட் காட்டிய போலீஸ்!

அதாவது வளைவில் திரும்ப தவறிய டாக்ஸி டிரைவர் மீண்டும் அந்த வளைவில் திரும்புவதற்காக ரிவர்ஸில் வந்தபோது, ராபர்ட் வதேராவின் கார் டிரைவர் பிரேக் பிடித்துள்ளார். அப்போது ராபர்ட் வதேராவின் காரின் பின் பகுதியில் டாக்ஸி மோதியுள்ளது. அதிர்ஷ்டவசமாக பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோனியா காந்தியின் மருமகன் காருக்குள் இருந்தபோது நடந்த பரபரப்பு சம்பவம்... வெயிட் காட்டிய போலீஸ்!

எனினும் ராபர்ட் வதேராவின் காருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால், இந்த சம்பவம் செய்தியாகியுள்ளது. ஆனால் பிரபலமான மனிதர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதிப்பது இது முதல் முறை கிடையாது. அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் பலருக்கும், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக கடந்த காலங்களில் காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

சோனியா காந்தியின் மருமகன் காருக்குள் இருந்தபோது நடந்த பரபரப்பு சம்பவம்... வெயிட் காட்டிய போலீஸ்!

சாலையில் நாம் வாகனங்களில் பயணிக்கும்போது போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் சரியாக பின்பற்ற வேண்டும். ஆனால் சாலை விபத்துக்கள் என்பது கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்று விடும். எனவே வாகனங்களை ஓட்டும்போது கவனம் சிதறாமல் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் முக்கியமானது.

சோனியா காந்தியின் மருமகன் காருக்குள் இருந்தபோது நடந்த பரபரப்பு சம்பவம்... வெயிட் காட்டிய போலீஸ்!

இது நமக்கு மட்டுமல்லாது, சாலையில் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் மற்றும் பாதசாரிகளுக்கும் நன்மை விளைவிக்கும். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற தவறினாலோ அல்லது அலட்சியமாக நடந்து கொண்டாலோ எப்போது வேண்டுமானாலும் சாலை விபத்தில் சிக்க நேரிடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Delhi Police Challans Robert Vadra's Car: Here Is The Reason Why. Read in Tamil
Story first published: Tuesday, June 29, 2021, 21:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X