காரின் பானெட் மீது விழுந்த காவலர்... அப்படியே ஓட்டி சென்ற டிரைவர்... அடி வயிற்றை கலங்க வைத்த வீடியோ

காரின் பானெட் மீது காவலர் தவறி விழுந்த நிலையில், ஓட்டுனர் காரை நிறுத்தாமல் அப்படியே ஓட்டி சென்ற காணொளி, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

காரின் பானெட் மீது விழுந்த காவலர்... அப்படியே ஓட்டி சென்ற டிரைவர்... அடி வயிற்றை கலங்க வைத்த வீடியோ

இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. இதன் காரணமாக உலகிலேயே சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகளை சந்திக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

காரின் பானெட் மீது விழுந்த காவலர்... அப்படியே ஓட்டி சென்ற டிரைவர்... அடி வயிற்றை கலங்க வைத்த வீடியோ

இந்தியாவில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதுடன், சில சமயங்களில் வாகனங்களை கண்மூடித்தனமாகவும் இயக்குகின்றனர். அப்படி இயக்கப்பட்ட கார் ஒன்றை, புது டெல்லி போக்குவரத்து காவல் துறையை சேர்ந்த காவலர் ஒருவர் தடுக்க முயன்ற போது, அவருக்கு ஏற்பட்ட அனுபவம், சக காவலர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

காரின் பானெட் மீது விழுந்த காவலர்... அப்படியே ஓட்டி சென்ற டிரைவர்... அடி வயிற்றை கலங்க வைத்த வீடியோ

புது டெல்லியில் உள்ள டயூலா குவான் பகுதியில், போக்குவரத்து காவலர் ஒருவர், வழக்கம் போல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக, கார் ஒன்று தாறுமாறாக வந்து கொண்டிருந்தது. போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால் அந்த காரை நிறுத்தி, போக்குவரத்து காவலர் விசாரணை செய்து கொண்டிருந்தார்.

காரின் பானெட் மீது விழுந்த காவலர்... அப்படியே ஓட்டி சென்ற டிரைவர்... அடி வயிற்றை கலங்க வைத்த வீடியோ

போக்குவரத்து காவலர் காரின் முன்பகுதியில் நின்று பேசி கொண்டிருந்த சூழலில், காரின் ஓட்டுனர் திடீரென வாகனத்தை இயக்கினார். இதன் காரணமாக காரின் பானெட் மீது, போக்குவரத்து காவலர் தவறி விழுந்தார். ஆனால் பானெட் மீது போக்குவரத்து காவலர் விழுந்தது தெரிந்தும் கூட, ஓட்டுனர் காரை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டி சென்றார்.

காரின் பானெட் மீது விழுந்த காவலர்... அப்படியே ஓட்டி சென்ற டிரைவர்... அடி வயிற்றை கலங்க வைத்த வீடியோ

பானெட்டின் மீது காவலர் தொங்கி கொண்டிருக்க, அந்த காரின் ஓட்டுனர் அப்படியே காரை ஓட்டி சென்ற காட்சிகள், அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. சமூக வலை தளங்களில் இந்த காணொளி தற்போது வேகமாக பரவி வருகிறது. காரின் பானெட்டை பிடித்தபடி, காவலர் போராடுவதை இந்த காணொளியில் நம்மால் பார்க்க முடிகிறது.

காரின் பானெட் மீது விழுந்த காவலர்... அப்படியே ஓட்டி சென்ற டிரைவர்... அடி வயிற்றை கலங்க வைத்த வீடியோ

கொஞ்ச தூரம் சென்ற பிறகு, பானெட்டில் இருந்து அவர் தவறி விழுகிறார். சாலை மிகவும் பரபரப்பாக இருந்த சமயத்தில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட காவலர், காரின் சக்கரங்களுக்கு நெருக்கமாக சாலையில் அப்படியே விழுந்துள்ளார். காரின் சக்கரங்கள் அவர் மீது ஏறியிருந்தாலோ அல்லது பின்னால் வந்து கொண்டிருந்த வாகனங்கள் மோதியிருந்தாலோ அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும்.

காரின் பானெட் மீது விழுந்த காவலர்... அப்படியே ஓட்டி சென்ற டிரைவர்... அடி வயிற்றை கலங்க வைத்த வீடியோ

ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை. கீழே விழுந்த உடனேயே அந்த காவலர் எழுந்து விடுவதை இந்த காணொளியில் பார்க்க முடிகிறது. அத்துடன் அவ்வழியாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தில் ஏறி, அந்த காரை அவர் துரத்தி செல்ல முடிவதையும் காண முடிகிறது. முன்னதாக போக்குவரத்து காவலர் கீழே விழுந்த உடனேயே, காரின் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி விட்டார்.

காரின் பானெட் மீது விழுந்த காவலர்... அப்படியே ஓட்டி சென்ற டிரைவர்... அடி வயிற்றை கலங்க வைத்த வீடியோ

எனினும் அடுத்த ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், அவர் பிடிபட்டு விட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் அவரது பெயர் சுபம் எனவும், அவருக்கு எதிராக தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தியாவில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடைபெறுவது இது முதல் முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில், இது மாதிரியான சம்பவங்கள் சில முறை நடந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக தற்போது புது டெல்லியில் நடந்துள்ள இந்த நிகழ்வு, வாகன தணிக்கையில் ஈடுபடும் காவலர்கள் மத்தியில், பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகன ஓட்டிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Delhi Police Constable Dragged On Car Bonnet - Viral Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X