ஹீரோ மோட்டாகார்ப் சேர்மன் மீது எஃப்ஐஆர் போட்ட டில்லி போலீஸ்! காரணம் இது தான்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சேர்மன் பவன் முஞ்சால் உள்ளிட்ட அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் ரூ 5.9 கோடி முறைகேடு செய்துள்ளதாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2009-10 ஆண்டு இந்த மோசடி நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் இந்தியாவின் பைக் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவில் அதிகமான பைக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கிறது . இந்நிலையில் இந்நிறுவனத்தின் சேர்மன் மீது தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன .

hero chairman fir

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் சேர்மனாக இருப்பவர் பவன் முஞ்சால் இவர் கடந்த 2009-2010 ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல பிரைன்ஸ் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார் . அதன்படி அந்நிறுவனமும் ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்புகளை பல்வேறு பகுதிகளுக்கு ஒன்று சேர்க்கும் பணிகளை செய்து வந்தது.

இதற்கான கணக்கு வழக்கில் ரூபாய் 5.94 கோடி முறைகேடு நடந்ததாக பிரைன்ஸ் லாஜிஸ்டிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கருதுகிறது. இது குறித்து இந்நிறுவனங்களுக்கு இடையே கோர்ட்டில் வழக்கு ஒன்று நடந்து வருகிறது. இந்த வழக்கு நீண்ட நாட்களாக இழுபறியில் இருக்கும் நிலையில் தற்போது பிரைன்ஸ் லாஜிஸ்டிக் நிறுவனம் கடந்த 5ம் தேதி ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் மீது புகார் ஒன்றை டில்லி போலீசில் அளித்தது.

hero chairman fir

அதன்படி டெல்லி போலீசார் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் சேர்மன் உள்ளிட்ட சில முக்கிய மூத்த அதிகாரிகள் மீது முதல் விசாரணை அறிக்கை பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. குறிப்பாக நிறுவனத்தின் சேர்மன் பவன் முஞ்சால் மீது நேரடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தரப்பில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது டில்லி போலீஸ் தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் எந்த ஒரு அதிகாரியின் பெயரும் சேர்க்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. இதனால் ஹீரோ நிறுவனத்தின் சேர்மன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தி உண்மை இல்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பல முக்கியமான செய்தி நிறுவனங்கள் எல்லாம் அவரது பெயருடன் சில மூத்த அதிகாரிகளின் பெயரும் சேர்த்து தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து செய்திகள் வெளியிட்டுள்ளனர். இந்த வழக்கின் படி ரூபாய் 5.96 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும் அது மட்டுமல்லாமல் ரூபாய் 55 லட்சம் மதிப்பிலான போலியான பில்களை வைத்து சேவை வரிகளுக்கான பலனை பெற்றுக் கொண்டதாகவும் இது வருமானவரித்துறையை ஏமாற்றம் செயல் எனவும் தெரிவித்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பவன் முஞ்சால் , விக்ரம் சீத்தாராம் கேசப்கர், ஹரி குப்தா மற்றும் மஞ்சுளா பானர்ஜி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவர்கள் இந்நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய மாதாந்திர பில் தொகையில் கேடு செய்துள்ளதாக கூறப்படுகிறது ரூபாய் 5.94 கோடிக்கு போலியான பில்களை தயார் செய்து அதன் மூலம் ரூபாய் 55.51 லட்சம் அளவிலான வரிகளை முறைகேடாக சலுகை பெற்றுள்ளதாக தெரிகிறது.

இந்த வழக்கு போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர். தற்போது கோர்ட்டில் வழக்கு நடந்து வருவதால் இந்த வழக்கை வழுவாக்கும் விதமாக இந்த போலீசார் திறந்துள்ள புதிய வழக்கு இருக்கிறது என நம்பப்படுகிறது. இருந்தாலும் இது குறித்த விசாரணையின் முடிவில் தான் யார் பக்கம் தவறு இருக்கிறது என்ற விவரம் தெரிய வரும். சுமார் 13 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு நீடித்து வருவது ஹீரோ நிறுவனத்திற்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.

டிராவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ மோட்டார் கார் ப்நிறுவனம் சமீப நாட்களாக எப்போது பெருகங்களை சந்தித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இதை மீண்டும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தில் சேர்மன் அவன் குஞ்சால் பணத்தை முறைகேடாக கையாண்டு தொடர்பாக அமலாந்து துறையினர் நடத்தினர். தற்போது இவர் மீது அடுத்ததாக இன்னொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 10, 2023, 11:03 [IST]
English summary
Delhi police file fir on cheating complaint against hero motocorp
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+