சைரன் ஒலி காது கிழிக்க நன்றி தெரிவித்த போலீஸ்.. அமெரிக்காவை அடுத்து இந்தியாவில் நிகழ்ந்த விநோதம்!

அமெரிக்கா சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிலும் நூற்று கணக்கில் அணி வகுத்த போலீஸார் சைரன் ஒலி காது கிழிக்க நன்றி கடன் செலுத்தியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சைரன் ஒலி காது கிழிக்க நன்றி தெரிவித்த போலீஸ்.. அமெரிக்காவை அடுத்து இந்தியாவில் நிகழ்ந்த விநோதம்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதள பக்கங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வந்தது. அந்த வீடியோவில், இளம் பெண் ஒருவர் வீட்டை விட்டு வெளியே வந்து நிற்க, அப்போது வரும் நூற்றுக் கணக்கான கார்கள், அப்பெண்ணுக்கு நன்றியையும், மரியாதையும் செலுத்தியவாறு சென்றன.

சைரன் ஒலி காது கிழிக்க நன்றி தெரிவித்த போலீஸ்.. அமெரிக்காவை அடுத்து இந்தியாவில் நிகழ்ந்த விநோதம்!

இந்த வீடியோ காட்டுத் தீயாய் பரவியதை அடுத்து, இணைய வாசிகள் அனைவரும் அதுகுறித்த தகவலை வலை வீசி தேட ஆரம்பித்தனர். அதில்தான், அவர் ஓர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்றும், அமெரிக்காவின் சவுத் விண்ட்சோர் மருத்துவமனையில் டாக்டராகவும் பணியாற்றி வருவது தெரியவந்தது.

சைரன் ஒலி காது கிழிக்க நன்றி தெரிவித்த போலீஸ்.. அமெரிக்காவை அடுத்து இந்தியாவில் நிகழ்ந்த விநோதம்!

அதுமட்டுமின்றி, தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பலருக்கு அவர் இரவு, பகல் பாராமல் சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. குறிப்பாக, கொரோனா நோயாளிகளுக்கு என அப்பெண் அதிக நேரத்தை ஒதுக்கி, சிறப்பு பணியாற்றி வந்ததாக கூறப்படுகின்றது. இதன்காரணத்தினாலயே, நூற்றுக் கணக்கில் ஒன்று திரண்ட அமெரிக்கர்கள், அவருக்கு நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து சென்றனர்.

சைரன் ஒலி காது கிழிக்க நன்றி தெரிவித்த போலீஸ்.. அமெரிக்காவை அடுத்து இந்தியாவில் நிகழ்ந்த விநோதம்!

அமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு கிடைத்த இந்த மரியாதை நாடு முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதே மாதிரியான ஓர் சம்பவம் தற்போது இந்தியாவிலும் அரங்கேறியிருக்கின்றது. ஆனால், அமெரிக்காவைப் போன்று தனி மனிதருக்கு அல்லாமல் ஓர் அமைப்பிற்கு டெல்லி அரசு நன்றி கடனை செலுத்தியிருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

சைரன் ஒலி காது கிழிக்க நன்றி தெரிவித்த போலீஸ்.. அமெரிக்காவை அடுத்து இந்தியாவில் நிகழ்ந்த விநோதம்!

அதாவத, சீக்கிய குருத்வாரா அமைப்பிற்கே டெல்லி போலீஸ் தற்போது நூற்றுக் கணக்கான வாகனங்களின் சைரன் ஒலிக்க நன்றியைச் செலுத்தியிருக்கின்றனர்.

கொரோனா வைரசால் வறுமையில் தவித்து வரும் மக்களுக்கு சீக்கிய குருத்வாரா அமைப்பான லங்கார் பல்வேறு உதவிகளை வாரி வழங்கி வருகின்றது.

சைரன் ஒலி காது கிழிக்க நன்றி தெரிவித்த போலீஸ்.. அமெரிக்காவை அடுத்து இந்தியாவில் நிகழ்ந்த விநோதம்!

குறிப்பாக, டெல்லியில் அகதிகளாக மாறியிருக்கும் புலம்பெயர்ந்த கூலித் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை அது பூர்த்திச் செய்து வருகின்றது.

இதற்கு முன்பாக, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டபோதும், வறுமையில் வாடிய மக்களுக்கு இவர்கள் உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

சைரன் ஒலி காது கிழிக்க நன்றி தெரிவித்த போலீஸ்.. அமெரிக்காவை அடுத்து இந்தியாவில் நிகழ்ந்த விநோதம்!

அதுமட்டுமின்றி, வழக்கமான நாட்களிலும்கூட ஜாதி, மதம் பாராமல் ஏழை மற்றும் எளிய மக்கள்கள் பயனடைும் வகையில் அன்னதானம் செய்து வருகின்றது சீக்கியர் குருத்வாரா.

இத்தகைய சிறப்பு சேவைக்கே மரியாதைச் செலுத்தும் விதமாக, நூற்றுக் கணக்கில் அணி வகுத்த டெல்லி போலீஸார், சைரனை ஒலித்தவாறு கோவிலை வலம் வந்தனர்.

சைரன் ஒலி காது கிழிக்க நன்றி தெரிவித்த போலீஸ்.. அமெரிக்காவை அடுத்து இந்தியாவில் நிகழ்ந்த விநோதம்!

சுமார் அரை மணி நேரத்திற்கும் அதிகமாக நிகழ்ந்த இந்த அணிவகுப்பில் உயர் மட்டம் முதல் அடி மட்ட பணியாளர்கள் வரை பலர் கலந்துக் கொண்டதாக கூறப்படுகின்றது. திடீரென போலீஸார் சைரன் ஒலித்தவாறு வலம் வந்ததால், இங்கு என்ன நடக்கின்றது என்றே தெரியாமல் அப்பகுதி மக்கள் திகைத்து நின்று வேடிக்கை பார்த்தனர்.

சைரன் ஒலி காது கிழிக்க நன்றி தெரிவித்த போலீஸ்.. அமெரிக்காவை அடுத்து இந்தியாவில் நிகழ்ந்த விநோதம்!

காவல்துறையின் இந்த செயலுக்கு ஒரு சிலர் வாழ்த்தையும், ஒரு சிலர் வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர். கொரோனா தொற்றால் நாடே பல இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேலையில் அதிகாரிகளின் நேரத்தையும், எரிபொருளையும் வீண் செய்திருப்பதாக அவர்கள் புகார் சாட்டி வருகின்றனர்.

நாடு முழுவதும் பலர் இதுபோன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் பணியில் இறங்கியிருக்கின்றனர். குறிப்பாக, வாகனங்களைச் சார்ந்து இயங்கும் நிறுவனங்களின் பங்கு அளப்பறியது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால், டாடா நிறுவனம் ஒட்டுமொத்தமாக ரூ. 1,500 கோடியை இந்திய அரசின் நிவாரண நிதிக்கு வழங்கியது. இதேபோன்று, பல நிறுவனங்கள் நிதியையும், மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றன.

Article Published On: Tuesday, April 28, 2020, 22:28 [IST]
English summary
Delhi Police Personnel Perform A 'Siren-Parikrama' Of Gurudwara Bangla Sahib. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+