நம்பர் ப்ளேட்டை ‘த்ருஷ்டி’ கயிறுகள் மறைக்கக்கூடாது!! அதிரடி காட்டும் டெல்லி போலீஸார், தமிழகத்திலும் தொடருமா?

வாகனத்தின் நம்பர் ப்ளேட் எந்தவொரு பொருளாலும் சிறிது கூட மறைக்க முடியாத அளவிற்கு டெல்லி போலீஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

நம்பர் ப்ளேட்டை ‘த்ருஷ்டி’ கயிறுகள் மறைக்கக்கூடாது!! அதிரடி காட்டும் டெல்லி போலீஸார், தமிழகத்திலும் தொடருமா?

உங்களது வாகனத்தின் நம்பர் ப்ளேட் தெளிவாக மற்றவர்களுக்கு புலப்படுகிறதா என்பதை அவ்வப்போது சரிப்பார்த்து கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. இதற்கு டெல்லி போலீஸார் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தான் சாட்சி. பெரும்பாலும் நமது வாகனங்களின் நம்பர் ப்ளேட்களை த்ருஷ்டிக்காக கட்டப்படும் கையிறுகளும், எலுமிச்சை பழமும் தான் மறைக்கக்கூடியவைகளாக இருக்கும்.

நம்பர் ப்ளேட்டை ‘த்ருஷ்டி’ கயிறுகள் மறைக்கக்கூடாது!! அதிரடி காட்டும் டெல்லி போலீஸார், தமிழகத்திலும் தொடருமா?

அவற்றை தான் டெல்லி போலீஸார் வேண்டாம் என்கின்றனர். வாகனத்தின் நம்பர் ப்ளேட்டில் ஒன்று அல்லது இரண்டு எண்களை மறைத்தப்படி பயணித்ததற்காக கிட்டத்தட்ட 150 பேருக்கு செல்லான் மூன்று நாட்களில் வழங்கப்பட்டுள்ளதாக டெல்லி போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நம்பர் ப்ளேட்டை ‘த்ருஷ்டி’ கயிறுகள் மறைக்கக்கூடாது!! அதிரடி காட்டும் டெல்லி போலீஸார், தமிழகத்திலும் தொடருமா?

இதில் பெரும்பாலானவர்கள் தங்களது வாகனத்தின் நம்பர் ப்ளேட்டை மறைத்தப்படி த்ருஷ்டி கயிறு, எலுமிச்சை பழம், மிளகாய் மற்றும் கருப்பு நிற ரிப்பன்களை கட்டியிருந்தவர்கள் ஆவார். இவர்களில் ஒருவர் விடாமல் அனைவருக்கும் அபராத செல்லானை டெல்லி போலீஸார் வழங்கியுள்ளனர்.

நம்பர் ப்ளேட்டை ‘த்ருஷ்டி’ கயிறுகள் மறைக்கக்கூடாது!! அதிரடி காட்டும் டெல்லி போலீஸார், தமிழகத்திலும் தொடருமா?

இந்த அதிரடி நடவடிக்கை குறித்து டெல்லி சிறப்பு போலீஸ் கமிஷ்னர் முக்டேஷ் சந்தர் அவரது டுவிட்டர் பக்கத்தில், இன்றைய நடவடிக்கையில், மாலை 5 மணி வரையில் 250க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது பல்வேறு வழிகளில் நம்பர் ப்ளேட்டை மறைக்க முயன்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளன என்றார். நம்பர் ப்ளேட்டை சிலர் தெரியாமல் த்ருஷ்டி கயிறுகளினால் மறைக்கின்றனர்.

நம்பர் ப்ளேட்டை ‘த்ருஷ்டி’ கயிறுகள் மறைக்கக்கூடாது!! அதிரடி காட்டும் டெல்லி போலீஸார், தமிழகத்திலும் தொடருமா?

ஆனால் சிலரோ குற்ற சம்பவங்களில் இருந்து தப்பிப்பதற்காக இவ்வாறு நம்பர் ப்ளேட் எண்களில் குளறுபடிகளை செய்கின்றனர். அதாவது வேண்டுமென்றே நம்பர் ப்ளேட்டை கயிற்றால் சுற்றுவது, டேப் ஒட்டுவது போன்றவற்றுடன், பூஜ்ஜியத்தை 8 போல் மாற்றுவது, C எழுத்தை 0 போன்று மாற்றவது போன்ற செயல்களில் ஈடுப்படுகின்றனர்.

நம்பர் ப்ளேட்டை ‘த்ருஷ்டி’ கயிறுகள் மறைக்கக்கூடாது!! அதிரடி காட்டும் டெல்லி போலீஸார், தமிழகத்திலும் தொடருமா?

நம்பர் ப்ளேட் விஷயத்தில் இவ்வளவு கடுமையாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் இதுதான் என்கின்றனர் டெல்லி போலீஸார். இதுகுறித்தும் பேசிய டெல்லி போலீஸ் கமிஷ்னர் முக்டேஷ் சந்தர், இது காவல்துறை மற்றும் சட்டத்தை முட்டாளாக்கும் முயற்சி. கேமரா மூலம் போக்குவரத்து குற்றங்களை தண்டிப்பதை தவிர்க்கும் நோக்கத்துடன் இதை அவர்கள் செய்கிறார்கள்.

நம்பர் ப்ளேட்டை ‘த்ருஷ்டி’ கயிறுகள் மறைக்கக்கூடாது!! அதிரடி காட்டும் டெல்லி போலீஸார், தமிழகத்திலும் தொடருமா?

இவ்வாறு நம்பர் ப்ளேட் மறைக்கப்படும்போது, அதிவேகம், போக்குவரத்து சிக்னல்களை முறையாக பின்பற்றாதது உள்ளிட்ட குற்றங்களுக்காக வாகன உரிமையாளரை கண்டறிவது கடினம். இவ்வாறு பொருட்களை கொண்டு நம்பர் ப்ளேட் எண்களை மறைக்கும் போக்கு இருப்பது சில காலமாக தொடர்ந்து எங்களது கவனத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. எனவே இதுபோன்ற குறைப்பாடுள்ள நம்பர் ப்ளேட்களை அடையாளம் காணும் பணியை டெல்லி முழுவதும் தொடங்கியுள்ளோம் என்றார்.

நம்பர் ப்ளேட்டை ‘த்ருஷ்டி’ கயிறுகள் மறைக்கக்கூடாது!! அதிரடி காட்டும் டெல்லி போலீஸார், தமிழகத்திலும் தொடருமா?

போக்குவரத்து விதிமீறல்களை பதிவு செய்ய தேசிய தலைநகரம் முழுவதும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை, ஒவ்வொரு முறையும் ஒரு வாகனம் விதிகளை மீறும்போது, அதனை படம்பிடித்து கொண்டு, அந்த வாகனத்தின் எண் மற்றும் விதிமீறலின் வகை உள்ளிட்டவை அடங்கிய தரவை போலீஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்புகிறது.

நம்பர் ப்ளேட்டை ‘த்ருஷ்டி’ கயிறுகள் மறைக்கக்கூடாது!! அதிரடி காட்டும் டெல்லி போலீஸார், தமிழகத்திலும் தொடருமா?

அங்கு ஒருமுறை சரிப்பார்த்து கொண்ட போலீஸார், அதன்பின் சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு இமெயில் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ அறிவிப்பை தெரிவித்துவிடுகின்றனர். அதேநேரம் நம்மூரை போல் டெல்லியிலும் போலீஸார் ஆங்காங்கே நின்று ரோந்து பணியிலும் ஈடுப்படுகின்றனர்.

நம்பர் ப்ளேட்டை ‘த்ருஷ்டி’ கயிறுகள் மறைக்கக்கூடாது!! அதிரடி காட்டும் டெல்லி போலீஸார், தமிழகத்திலும் தொடருமா?

அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட வாகன ஓட்டிக்கு அந்த இடத்திலேயே இ-செல்லானை வழங்குகின்றனர். நம்பர் ப்ளேட் மறைக்கப்பட்டு இருப்பினும், போலீஸாரால் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமிராக்கள் எப்போதும் போல் வாகனத்தின் நம்பர் ப்ளேட்டை படம் பிடித்து போலீஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துவிடும்.

நம்பர் ப்ளேட்டை ‘த்ருஷ்டி’ கயிறுகள் மறைக்கக்கூடாது!! அதிரடி காட்டும் டெல்லி போலீஸார், தமிழகத்திலும் தொடருமா?

அங்கு அவர்கள் இத்தகைய நம்பர் ப்ளேட் எண்களை கண்டறிவதற்கு என்றே சில வழிமுறைகளை வைத்துள்ளனர். அவற்றை வைத்து மறைக்கப்பட்ட எண்களை கண்டறிந்து, வாகனத்தின் உரிமையாளரை நெருங்கிவிடுவர். எனவே நம்பர் ப்ளேட்டை மறைத்து சென்றாலும் பிரச்சனை தான்.

நம்பர் ப்ளேட்டை ‘த்ருஷ்டி’ கயிறுகள் மறைக்கக்கூடாது!! அதிரடி காட்டும் டெல்லி போலீஸார், தமிழகத்திலும் தொடருமா?

ஆதலால் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றி நம்பர் ப்ளேட்டை மறைக்காமல் வாகனத்தில் பயணம் செய்ய முயற்சியுங்கள். ஏனெனில் இப்போது டெல்லியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் நாளைக்கே நமது சென்னையிலும் கூட மேற்கொள்ளப்படலாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Delhi police started special drive to remove obstructions hiding vehicles number
Story first published: Saturday, September 18, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X