இனி பழைய வண்டிகளை காயலான் கடையிலதான் போடணும்! வீட்டு வாசலை தாண்டனாவே பிடிக்கறாங்க! அதிர்ச்சியில் உரிமையாளர்கள்

இந்திய சாலைகளில், பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலமாக இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. பல்வேறு மாநில அரசுகளும் கூட இதையேதான் விரும்புகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் மூலமாக இயங்கும் வாகனங்களால், காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னை கடுமையாகி கொண்டிருப்பதுதான் இதற்கு காரணம். குறிப்பாக இந்திய தலைநகர் டெல்லியில் (Delhi), பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால், காற்றின் தரம் தற்போது மிகவும் மோசமான நிலைமைக்கு சென்று விட்டது.

டெல்லியின் காற்று மாசுபாடு பிரச்னைக்கு வாகனங்களை கடந்து, இன்னும் பல்வேறு காரணங்கள் இருக்கவே செய்கின்றன. இருப்பினும் வாகனங்கள் இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகின்றன. இந்த காற்று மாசுபாடு பிரச்னையால், அங்கு மக்கள் பல்வேறு வகையான சுவாச நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

Car Pollution

எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பிஎஸ் 3 பெட்ரோல் (BS 3 Petrol) மற்றும் பிஎஸ் 4 டீசல் (BS 4 Diesel) வாகனங்களை டெல்லி சாலைகளில் இயக்குவதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்த உத்தரவை மீறும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை மீறி நிறைய பேர் சாலைகளில் வாகனங்களை இயக்கியுள்ளனர். அவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

Delhi Pollution

இந்த உத்தரவு அமலுக்கு வந்த முதல் நாளில் மட்டும், அதாவது வெள்ளிக்கிழமை மட்டும், 550 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.10 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத 4,855 வாகனங்களுக்கும் அன்றைய தினம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 4.85 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட விதிமுறைகளை மீறிய வாகன உரிமையாளர்களிடம் இருந்து 5.95 கோடி ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே செல்கிறது. இந்த பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும் என தோன்றவில்லை. குறிப்பாக இன்று காலை (நவம்பர் 18) 9 மணியளவில் ஏக்யூஐ என சுருக்கமாக அழைக்கப்படும் ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் (AQI - Air Quality Index) 485-ஆக இருந்தது.

இது Severe Plus என வகைப்படுத்தப்படுகிறது. அதாவது உடல் நலனில் மிக கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே வாகனங்களை இயக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதை வாகன ஓட்டிகள் பின்பற்றினால், காற்றின் தரத்தை சற்று மேம்படுத்த பெரும் உதவியாக இருக்கும். இல்லாவிட்டால் அபராத தொகையை செலுத்த நேரிடலாம் என்பதுடன், மாசடைந்த காற்றை சுவாசிக்க வேண்டிய சூழலும் ஏற்படும்.

More from DriveSpark

Article Published On: Monday, November 18, 2024, 15:37 [IST]
English summary
Delhi pollution over 5400 vehicles fined for violation all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+