84 லட்ச ரூபாய் பென்ஸ் காரை ரூ.2.5 லட்சத்துக்கு விற்கனும்னு தலையில எழுதி இருக்கு! அரசு போட்ட ஒரே உத்தரவு!
தலைநகர் டெல்லியில் கடந்த சில வருடங்களாகவே காற்று மாசு பிரச்சனை அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியாக உள்ளது. இமயமலை தொடருக்கு அடிவாரத்தில் கங்கை, யமுனா நதிகளுக்கு அருகே இயற்கை வளம் மிகுந்த பகுதியில் அமைந்திருப்பினும், டெல்லியில் தற்போதைய கால சூழ்நிலை முற்றிலுமாக வேறுப்பட்டதாக உள்ளது. இதற்கு முக்கியமான காரணம், டெல்லியிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ந்து அதிகரித்துவரும் மக்கள் தொகை ஆகும். ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அதிக மக்கள் தொகை தான் எதிர்காலத்தில் பெரும் பிரச்சனையாக இருக்கும் என்பது டெல்லியின் அதிகப்படியான மக்கள் தொகையினால் ஏற்படும் பிரச்சனைகள் நமக்கு எச்சரிக்கை விடுகின்றன.
குறிப்பாக, மக்கள் தொகை அதிகரிப்பதால் அதற்கேற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இன்றைய கால வாகனங்களில் காற்று மாசுவை கட்டுப்படுத்த பிஎஸ்6 (BS6) போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் கொண்டுவரப்பட்ட போதிலும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, வாகனங்களில் இருந்து குறைவான மாசு வெளிவந்தாலும் அது பெரிய பிரச்சனையாக அமைகிறது.

இவ்வாறு பல்வேறு வழிகளில் காற்று மாசடைவதன் காரணமாகவே டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. உலகளவில் மக்கள் சுவாசிப்பதற்கு மோசமான காற்றை கொண்ட நகரங்களில் முதன்மையான இடத்தில் நமது இந்தியாவின் தலைநகர் உள்ளது. இதனை தடுக்கும் முயற்சியாக ஓர் அதிரடியான நடவடிக்கையை டெல்லி அரசு இந்த ஜூலை 1ஆம் தேதி முதல் கொண்டுவந்துள்ளது.
அதுதான், குறிப்பிட்ட வருடத்திற்கு மேல் இயங்கும் பழைய வாகனங்களை மக்கள் பயன்படுத்துவதை தடுப்பதாகும். மத்திய அரசாங்கம் நாடு முழுவதும் பழைய வாகனங்களை பயன்படுத்துவதை தடுக்க கடந்த 2022இல் பழைய வாகன அழிப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது. ஆனால், அது தற்போது வரையில் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை என்றாலும், டெல்லி மாநில அரசாங்கம் இந்த விஷயத்தில் தீவிரமாக உள்ளது.

குறிப்பாக, சமீபத்தில் டெல்லியில் ஆட்சி மாற்றம் நடைபெற்ற பின் இந்த விஷயத்தில் வேகமாக செயல்பட ஆரம்பித்த டெல்லி அரசு, அதன்படி ஜூலை 1ஆம் தேதி முதல் டெல்லி தலைநகர் பகுதிகளில் 10 வருட பழைய டீசல் வாகனங்களையும், 15 வருட பழைய பெட்ரோல் வாகனங்களையும் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. மேற்கூறப்பட்ட காலத்திற்கு மேல் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எந்த நிலையத்திலும் எரிபொருள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பழைய வாகனங்களை பயன்படுத்தி வருபவர்கள் ஏற்கனவே மத்திய அரசாங்கத்தின் பழைய வாகன அழிப்பு திட்டத்தை பயன்படுத்தி பழைய வாகனத்தை அழித்து அதன் மூலம் கிடைக்கும் மானியம் மற்றும் சலுகையின் மூலம் புதிய வாகனத்தை வாங்க ஆரம்பித்துவிட்டனர். அதேநேரம், சிலர் தங்களது பழைய வாகனத்தை விற்று அதன் மூலம் நஷ்டத்தை சமாளிக்க முயற்சித்துள்ளனர்.
ஆனால், இவ்வாறு யூஸ்டு-கார் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பழைய கார்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு விலை மதிப்பு கிடைப்பதில்லை என்பதுதான் டெல்லி மக்களின் ஆதங்கமாக உள்ளது. டெல்லியில் வசிக்கும் வருண் விஜ் (Varun Vij) என்பவர் 2015ஆம் ஆண்டில் வாங்கிய மெர்சிடிஸ்-பென்ஸ் எம்.எல்350 (Mercedes-Benz ML350) என்கிற சொகுசு காரை வெறும் ரூ.2.5 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார்.
2015ஆம் ஆண்டிலேயே இந்த பென்ஸ் காரை ரூ.84 லட்சம் செலவு செய்து வருண் விஜ் வாங்கினார். 10 வருடங்கள் கழித்தும் நல்ல நிலையில் இருப்பினும், இந்த கார் 1.35 லட்ச கிமீ தொலைவிற்கு ஓட்டப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு நாளும் சராசரியாக 35- 36கிமீ தொலைவிற்கு ஓட்டப்பட்டுள்ளது. கார் நல்ல கண்டிஷனில் இருப்பினும், காருக்கு குறைவான மதிப்பு கிடைத்திருப்பதற்கு காரணம், காரில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏகப்பட்ட மாடிஃபிகேஷன்கள் (Modifications) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சட்டம் டெல்லியில் தான் கொண்டுவரப்பட்டு இருக்கிறது நமக்கு என்ன? என நினைக்காதீர்கள். ஏனெனில், இது சென்னைக்கு கொண்டுவரும் காலமும் வெகு தொலைவில் இல்லை. வாகனங்களை நன்கு பழையது ஆகும் வரையில் அதிக காலம் பயன்படுத்தாமல், குறிப்பிட்ட காலத்திற்கு பின் முறையாக அழிப்பது அவசியமாகும். அவ்வாறு அழிக்கப்படும் வாகனம் மீண்டும் ஏதோ ஒரு வடிவில் நம்மைதான் வந்துச் சேரும் என்பதால், கவலை வேண்டாம்.
Source: News18


Click it and Unblock the Notifications










