10 ஆயிரம் ரூபாய் அபராதம், 6 மாதம் ஜெயில்... வண்டில இனிமேல் இது இல்லேனா கதை முடிஞ்சது... என்னனு தெரியுமா?

காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

10 ஆயிரம் ரூபாய் அபராதம், 6 மாதம் ஜெயில்... வண்டில இனிமேல் இது இல்லேனா கதை முடிஞ்சது... என்னனு தெரியுமா?

வாகன ஓட்டிகள் அனைவரும் மாசு கட்டுப்பாடு சான்றிதழை (Pollution Under Control Certificates - PUC) வைத்திருப்பது கட்டாயம் என டெல்லி மாநில அரசு தற்போது அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் ரூபாய் அபராதம், 6 மாதம் ஜெயில்... வண்டில இனிமேல் இது இல்லேனா கதை முடிஞ்சது... என்னனு தெரியுமா?

மேலும் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியின் ஓட்டுனர் உரிமம் மூன்று மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும். இதுதவிர 6 மாதங்கள் வரை சிறை தண்டனையை அனுபவிப்பதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக டெல்லி மாநில அரசின் போக்குவரத்து துறை அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

10 ஆயிரம் ரூபாய் அபராதம், 6 மாதம் ஜெயில்... வண்டில இனிமேல் இது இல்லேனா கதை முடிஞ்சது... என்னனு தெரியுமா?

இதற்கு பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் மிகவும் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. எனவே டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காகவும், காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும், வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாடு சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் ரூபாய் அபராதம், 6 மாதம் ஜெயில்... வண்டில இனிமேல் இது இல்லேனா கதை முடிஞ்சது... என்னனு தெரியுமா?

அபராதம்/ஓட்டுனர் உரிமம் சஸ்பெண்ட்/சிறை தண்டனை போன்ற நடவடிக்கைகளில் சிக்கி கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால், வாகன உரிமையாளர்கள் அனைவரும், போக்குவரத்து துறையால் அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் தங்களது வாகனங்களை சோதனை செய்து, மாசு கட்டுப்பாடு சான்றிதழை பெற்று கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் ரூபாய் அபராதம், 6 மாதம் ஜெயில்... வண்டில இனிமேல் இது இல்லேனா கதை முடிஞ்சது... என்னனு தெரியுமா?

இந்தியாவிலேயே தலைநகர் டெல்லியில்தான் காற்று மாசுபாடு பிரச்னை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. எனவே அதனை குறைப்பதற்காக டெல்லி மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பது மிகவும் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாக உள்ளது.

10 ஆயிரம் ரூபாய் அபராதம், 6 மாதம் ஜெயில்... வண்டில இனிமேல் இது இல்லேனா கதை முடிஞ்சது... என்னனு தெரியுமா?

டெல்லி மாநில அரசு தனது எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கி வருகிறது. இதுதவிர ஒன்றிய அரசின் ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழும் எலெக்ட்ரிக் வாகனங்களை மானியங்களை பெற்று கொள்ள முடியும். எனவே டெல்லியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறைவான விலையில் கிடைக்கின்றன.

10 ஆயிரம் ரூபாய் அபராதம், 6 மாதம் ஜெயில்... வண்டில இனிமேல் இது இல்லேனா கதை முடிஞ்சது... என்னனு தெரியுமா?

இதன் காரணமாக டெல்லி மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தும் ஆர்வம் அதிகரித்து கொண்டே வருகிறது. பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதாலும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாற தொடங்கியுள்ளனர். எனவே வரும் காலங்களில் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 ஆயிரம் ரூபாய் அபராதம், 6 மாதம் ஜெயில்... வண்டில இனிமேல் இது இல்லேனா கதை முடிஞ்சது... என்னனு தெரியுமா?

டெல்லி மட்டுமல்லாது, இந்தியாவின் மற்ற மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்க தொடங்கியுள்ளன. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் மாநில அரசுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே வரும் காலங்களில் இந்திய சாலைகளில் நிறைய எலெக்ட்ரிக் வாகனங்களை நாம் காண முடியும் என்பது உறுதி.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 21, 2021, 11:12 [IST]
English summary
Delhi rs 10000 fine for not carrying puc certificate
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+