வயதை துல்லியமாக கண்டறியும் ஏஐ கேமிரா.. எல்லா பெட்ரோல் பங்க்குகளிலும் பொருத்துறாங்க.. கொஞ்சமும் ஏமாத்த முடியாது
வயதை துல்லியமாகக் கண்டறியும் ஏஐ கேமிரா (AI Camera)க்களை பெட்ரோல் பங்க்குகளில் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 'என்னதான் போலீஸின் கண்கள்ல மண்ணை தூவிவிட்டுட்டு மறைந்து மறைந்து ஓடிக் கொண்டிருந்தாலும், பெட்ரோல் போட பங்க் பக்கம் வந்துதானே ஆக வேண்டும். அங்கு வைத்து உங்களை பிடிப்போம்' என இந்த கேமிராக்களை பொருத்துவதன் வாயிலாக சொல்லாமல் சொல்லி இருக்கின்றது, காவல்துறை. நாடு முழுக்க வயது முதிர்ந்த வாகனங்களால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.
குறிப்பாக, காற்றை மாசுபடுத்துவதில் பழைய பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் மிகப் பெரிய பங்கினை வகிக்கின்றன. எனவேதான் இவற்றை பயன்பாட்டில் இருந்து அகற்றும் முயற்சியில் மிக தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது, இந்திய அரசாங்கம். குறிப்பாக, காற்று மாசுபாட்டால் மிகப் பெரிய பிரச்னைகளைச் சந்தித்து வரும் டெல்லியில், பழைய வாகனங்களுக்கு எதிராக மிகக் பெரிய போரைபோல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருப்பினும் பழைய வாகனங்களின் பயன்பாடு அங்கு ஒழிந்ததாக தெரியவில்லை. பலர் தங்களுடைய பழைய வாகனங்களை போலீஸின் கண்களில் படாமல் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையிலேயே கேமிராக்களை பெட்ரோல் பங்க்குகளை பொருத்தும் பணியில் டெல்லி அரசு களமிறங்கி இருக்கின்றது. இந்த கேமிராக்கள் பங்கிற்குள் நுழையும் கார்களின் பதிவெண்ணை சத்தமின்றி ஸ்கேன் செய்யும்.
வாகனத்தின் வயது மற்றும் மாசு சான்று உள்ளிட்டவற்றை இதன் வாயிலாக அது சரிபார்க்கும். ஒருவேளை அந்த வாகனம் அதிக வயதான மற்றும் மாசை ஏற்படுத்தக் கூடியது என்பது தெரிய வந்தால் அங்கு அந்த வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பப்படாது. மேலும், மாசு சான்று காலாவதி ஆகியிருந்தாலும் எரிபொருள் நிரப்பாமல் திருப்பி அனைப்பி வைக்கப்பட இருக்கின்றது.

குறிப்பு: புகைப்படம் இரண்டும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை. நகரத்தில் இருந்து முழுக்க முழுக்க பழைய மற்றும் காற்று மாசுபாட்டில் மிகப் பெரிய பங்கினை வகிக்கும் வாகனங்களை ஒழித்துக்கட்டும் ஓர் முயற்சியாகவே இது செய்யப்பட்டு இருக்கின்றது. தானாகவே நம்பர் பிளேட்டை கண்டறியும் (Automatic Number Plate Recognition) வசதிக் கொண்ட கேமிராக்களே டெல்லியில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் பொருத்தப்பட்டு வருகின்றன.
நகரத்தில் 500 பங்க்குகள் இருப்பதாகவும், அதில் 477 வரை இந்த கேமிரா பொருத்தப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எஞ்சியுள்ள பங்க்குகளிலும் விரைவில் இந்த கேமிராக்கள் பொருத்தப்பட்டு விடும் என கூறப்படுகின்றது. எனவே விரைவில் டெல்லியில் உள்ள அனைத்து பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டுவிடும் என்று நம்பப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மற்ற நகரங்களைக் காட்டிலும் வாகன நெரிசலாலும், வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் நிறைந்த மாசினாலும் தலைநகர் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றது. இதில் இருந்து மக்களைக் காக்கும் ஓர் முயற்சியாகவே பழைய வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட்டு வருகின்றன.
இதுமட்டுமல்ல விரைவில் புதிய ஐசிஇ எஞ்சின் கொண்ட இரண்டு வாகனங்களின் பதிவையும் ரத்து செய்ய டெல்லி அரசாங்கம் திட்டமிட்டு இருக்கின்றது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வாகனங்களுக்கும் இது பொருந்தும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதற்கு பதிலாக மின்சாரத்தில் இயங்கும் டூ-வீலர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








