மக்கள் சைக்கிள்ல போகட்டும்... இல்லாட்டி நடந்து கூட போகட்டும்... டெல்லியின் மாஸ்டர் பிளான் என்னனு தெரியுமா?
டெல்லி மாஸ்டர் பிளான் 2041 வரைவு அறிக்கை குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டெல்லியில் மோட்டார் வாகனங்களுக்கும், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டிகளுக்கும் இடையேயான மோதலை குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லியை சைக்கிள் ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு நட்பான நகரமான மாற்றுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாஸ்டர் பிளான் 2041 வரைவு அறிக்கையில் இது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் டெல்லி மாஸ்டர் பிளான் 2041 வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஆலோசனைகள் அல்லது ஆட்சேபனைகள் இருந்தால், பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம். இந்த வரைவு அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் கூறப்பட்டுள்ளன.

மக்களின் போக்குவரத்து மலிவான தேர்வாக மட்டுமல்லாது, சௌகரியமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் எனவும், மேலும் சுகாதார ரீதியில் மக்களுக்கும், டெல்லி நகரத்திற்கும் நன்மை பயப்பதாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருப்பது முக்கியமானது. தலைநகர் டெல்லிதான், காற்று மாசுபாட்டால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நகரம் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இதன் காரணமாக அங்கு வசிக்கும் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதற்கு பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகை முக்கியமான காரணமாக உள்ளது. எனவேதான் மோட்டார் வாகனங்களுக்கு பதிலாக, மக்கள் சைக்கிளில் பயணிப்பதையும், நடந்து செல்வதையும் ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளும் தற்போது இதைதான் செய்து வருகின்றன. மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விஷயத்தில், தலைசிறந்து விளங்கும் மாநிலங்களில் ஒன்றாக டெல்லி திகழ்கிறது.

இந்த வரைவு அறிக்கைப்படி மோட்டார் வாகனங்கள் அல்லாத போக்குவரத்திற்கும் சிறப்பான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது நடைபாதைகள், சைக்கிள் டிராக்குகள் போன்ற கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக ஏற்படுத்தி தர முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கான பாதைகள் குறுகிய தொலைவு கொண்டதாகவும், சௌகரியமாகதானவும் இருக்கும்.

இதன் மூலமாக சாலை விபத்துக்கள் குறைவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. மோட்டார் வாகனங்கள், சைக்கிள்கள் ஆகியவற்றுக்கும், பாதசாரிகளுக்கும் தனித்தனி பாதைகளை அமைக்க திட்டமிட்டிருப்பதே இதற்கு காரணம். இதுதவிர நாங்கள் ஏற்கனவே கூறியபடி, எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கும் டெல்லி மாநில அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

இதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியங்கள் உள்பட பல்வேறு சலுகைகளை டெல்லி அரசு வழங்கி வருகிறது. இதன் காரணமாக டெல்லியில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க பலர் ஆர்வமாக முன் வருகின்றனர். இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனங்களின் தலைநகராக டெல்லி உருவெடுத்தால், ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








