மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... டெல்லி போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை... என்னனு தெரியுமா?

மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், டெல்லி போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... டெல்லி போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை... என்னனு தெரியுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தற்போது விஸ்வரூபமெடுத்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை மிக கடுமையான அளவில் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டு செல்லும் பணியில் டெல்லி போக்குவரத்து கழகம் ஈடுபட்டுள்ளது.

மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... டெல்லி போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை... என்னனு தெரியுமா?

ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டு செல்லும் பணிகளில் டெல்லி போக்குவரத்து கழகம் தனது பேருந்துகளை ஈடுபடுத்தியுள்ளது. அவசர சூழல்களில் மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டு செல்வதற்கு, டெல்லி போக்குவரத்து கழகத்தின் இரண்டு டெப்போக்கள் தற்போது பேருந்துகளை வழங்கி வருகின்றன.

மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... டெல்லி போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை... என்னனு தெரியுமா?

இதுகுறித்து டெல்லி போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ''மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டு செல்வதற்கு இவ்வளவு எண்ணிக்கையில் என பேருந்துகளை ஒதுக்கவில்லை. இது தேவையை பொறுத்தது. தேவைக்கு ஏற்ற எண்ணிக்கையில் பேருந்துகள் வழங்கப்படும். ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக வழக்கமான பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... டெல்லி போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை... என்னனு தெரியுமா?

எனவே ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டு செல்வதற்கு பேருந்துகளை வழங்கி வருவதால் எந்த பிரச்னையும் இல்லை'' என்றனர். டெல்லி போக்குவரத்து கழகத்தின் இந்த நடவடிக்கை மூலமாக உற்பத்தியாளர்களிடம் இருந்து மருத்துவனைகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சென்று சேர்வதில் தாமதம் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... டெல்லி போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை... என்னனு தெரியுமா?

முன்னதாக டெல்லி போக்குவரத்து கழகம் சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் பேருந்துகளை அதிகளவில் இயக்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கு மிகவும் குறைந்த செலவே ஆகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... டெல்லி போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை... என்னனு தெரியுமா?

அத்துடன் பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கும் உகந்தவை. எனவேதான் சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் பேருந்துகளை அதிகளவில் இயக்குவதற்கு டெல்லி போக்குவரத்து கழகம் மிகவும் ஆர்வமாக உள்ளது. இதன் மூலம் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கும் டெல்லி போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... டெல்லி போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை... என்னனு தெரியுமா?

சுற்றுச்சூழலுக்கு நட்பான சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் விஷயத்தில், டெல்லி மாநில அரசும் ஆர்வமாக இருந்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் ஒரு பகுதியாக டெல்லி மாநில அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை... டெல்லி போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை... என்னனு தெரியுமா?

இந்தியாவிலேயே டெல்லி மாநில அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை மிக சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பிரச்னை ஓய்ந்த பிறகு, டெல்லி மாநில அரசு இந்த விஷயத்தில் இன்னும் தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் காலங்களில் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை குறையலாம்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Delhi Transport Corporation Deploys Buses To Carry Oxygen Cylinders To Hospitals-Details. Read in Tamil
Story first published: Wednesday, April 28, 2021, 17:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X